விரைவில் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி... யமஹா அதிரடி அறிவிப்பு!!

யமஹா நிறுவனம் அதன் இருசக்கர வாகனங்களில் ப்ளூடூத் இணைப்பு வசதியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. எந்தெந்த மாடல்கள் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பதுகுறித்த முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

விரைவில் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி... யமஹா அதிரடி அறிவிப்பு!!

யமஹா நிறுவனம் மிக சமீபத்தில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் புதுமுக மோட்டார் சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. எஃப்இசட் எக்ஸ் எனும் பைக்கையே நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரெட்ரோ ஸ்டைலிலான இந்த வாகனத்தில் பல்வேறு அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளை நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

விரைவில் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி... யமஹா அதிரடி அறிவிப்பு!!

ப்ளூடூத் இணைப்பு வசதியை நிறுவனம் அதில் வழங்கியிருக்கின்றது. இந்த வசதியை இனி வரும் காலங்களில் அறிமுகமாக இருக்கும் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் நிறுவனம் வழங்க இருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ரவீந்தர் சிங் எஃப்இசட்-எக்ஸ் பைக்கின் அறிமுகத்தின்போது கூறியிருந்தார்.

விரைவில் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி... யமஹா அதிரடி அறிவிப்பு!!

இந்த நிலையில் தற்போது ஓர் புதிய தகவல் வெளியாகியிருக்கின்றது. யமஹா நிறுவனம், அதன் பிரபல இருசக்கர வாகன மாடல்களான எம்டி-15, ஆர்15 மற்றும் அனைத்து 250 சிசி திறன் கொண்ட வாகனங்களிலும் விரைவில் ப்ளூடூத் வசதியை வழங்க இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி... யமஹா அதிரடி அறிவிப்பு!!

இந்த தகவல் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ப்ளூடூத் வசதிக் கொண்ட இருசக்கர வாகனங்களின் அறிமுகம் பற்றிய தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி... யமஹா அதிரடி அறிவிப்பு!!

யமஹா நிறுவனம் ப்ளூடூத் இணைப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ள இரு விதமான செல்போன் செயலிகளை வெளியிட்டிருக்கின்றது. யமஹா மோட்டார்சைக்கிள் எக்ஸ் மற்றும் ஒய் கன்னெக்ட் ஆகியவை அவை ஆகும்.

விரைவில் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி... யமஹா அதிரடி அறிவிப்பு!!

கன்னெக்ட் எக்ஸ் செயலியில், செல்போனுக்கு வரும் அழைப்பை ஏற்றல், பேட்டரி அளவை அறிதல், பார்க்கிங் வரலாறு, இ-லாக், பைக் இருக்கும் இடத்தை அறிதல், பயண வரலாறு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும்.

விரைவில் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி... யமஹா அதிரடி அறிவிப்பு!!

ஒய் கன்னெக்ட் செயலியில், அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளைக் காணுதல், பேட்டரி அளவைக் கண்டறிதல், கோளாறு குறித்த தகவல்களை அறிதல், எரிபொருள் செலவு மற்றும் அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

விரைவில் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி... யமஹா அதிரடி அறிவிப்பு!!

இத்தகைய சிறப்பு வசதியைப் பெறும் வகையிலேயே எதிர்கால தயாரிப்புகளில் ப்ளூடூத் இணைப்பை வசதியை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Announces To Offer Bluetooth Facility On All Its Models. Read In Tamil.
Story first published: Tuesday, June 22, 2021, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X