உலகளவில் பிரபலமான ஆர்7 பைக்கை மீண்டும் தயாரிக்கிறதா யமஹா? இணையத்தில் கசிந்த விபரங்கள்...

உலகளவில் பிரபலமான யமஹா மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றான ஒய்.இசட்.எஃப்-ஆர்7 பைக் மீண்டும் அடுத்த 2022ல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் பிரபலமான ஆர்7 பைக்கை மீண்டும் தயாரிக்கிறதா யமஹா? இணையத்தில் கசிந்த விபரங்கள்...

மோட்டார்சைக்கிள் இணைய பக்கத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ள, அமெரிக்க கலிஃபோர்னியா காற்று வள மேலாண்மை வாரியத்தில் யமஹா தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் தான் இந்த நிறுவனம் மீண்டும் அதன் ஒய்.இசட்.எஃப்-ஆர்7 பைக்கை விற்பனையில் இறக்கலாம் என நாங்கள் யூகிக்கிறோம்.

உலகளவில் பிரபலமான ஆர்7 பைக்கை மீண்டும் தயாரிக்கிறதா யமஹா? இணையத்தில் கசிந்த விபரங்கள்...

ஆனால் அதேநேரம் புதிய ஆர்7 பைக், சூப்பர் உலக சாம்பியன்ஷிப் மற்றும் சுஸுகி 8 மணிநேர சகிப்புத்தன்மையை பரிசோதிக்கும் போட்டிகளில் பயன்படுத்தபட்ட யமஹாவின் லெஜண்டரி ஆர்7 ரேஸ் பைக்கில் வழங்கப்பட்ட 750சிசி 4-சிலிண்டர் என்ஜினை பெற்றுவர போவதில்லை என்பதையும் இந்த ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது.

உலகளவில் பிரபலமான ஆர்7 பைக்கை மீண்டும் தயாரிக்கிறதா யமஹா? இணையத்தில் கசிந்த விபரங்கள்...

ஏனெனில் யமஹா எம்டி-07 மற்றும் டெனெரே 700 உள்ளிட்ட பைக்குகளில் வழங்கப்படும் இணையான-இரட்டை என்ஜினின் அதே அளவில் 689சிசி என்ஜின் புதிய ஆர்7 பைக்கில் வழங்கப்படவுள்ளதாக இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் பிரபலமான ஆர்7 பைக்கை மீண்டும் தயாரிக்கிறதா யமஹா? இணையத்தில் கசிந்த விபரங்கள்...

இதனால் புதிய ஆர்7 பைக், யமஹா எம்டி-07 பைக்கின் பேனல்களால் நிரப்பட்ட ஸ்போர்ட்ஸ் வெர்சனாக இருக்கலாம். யமஹா எம்டி-07 பைக்கில் பொருத்தப்படுகின்ற 689சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 72 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 68 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஒருவேளை நாம் எதிர்பார்ப்பதுபோல் எம்டி-07 பைக்கின் முழு-பேனல்களால் நிரப்பப்பட்ட வெர்சனாக இருக்குமேயானால் புதிய யமஹா ஆர்7 பைக் அப்ரில்லாவின் புதிய ஆர்எஸ் 660 பைக்கின் போட்டியினை சமாளித்தாக வேண்டும்.

உலகளவில் பிரபலமான ஆர்7 பைக்கை மீண்டும் தயாரிக்கிறதா யமஹா? இணையத்தில் கசிந்த விபரங்கள்...

எம்டி-07 பைக்கின் அதே சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புடன் தான் ஆர்7 பைக்கும் அறிமுகமாகுமா என்பது தற்போதைக்கு கேள்வியாகவே உள்ளது. நமக்கு தெரிந்தவரையில், புதிய ஆர்7 பைக்கை ரேஸ் ட்ராக்கிற்கு ஏற்ற விதத்தில் அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய சஸ்பென்ஷன், இறுக்கமான சேசிஸ் மற்றும் உயர் தரத்திலான ப்ரேக் பாகங்களுடன் யமஹா தயாரிக்கும்.

உலகளவில் பிரபலமான ஆர்7 பைக்கை மீண்டும் தயாரிக்கிறதா யமஹா? இணையத்தில் கசிந்த விபரங்கள்...

விற்பனையில் அப்ரில்லா ஆர்எஸ் 660 பைக்கின் போட்டியினை எதிர்கொள்ளவுள்ளதால், ஐஎம்யு (நிலைமாற்ற அளவீட்டு அலகு) மூலம் செயல்படும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் வீலிங் கண்ட்ரோல் போன்ற அதிகளவிலான எலக்ட்ரானிக்ஸ் தொழிற்நுட்பங்கள் புதிய ஆர்7 பைக்கில் வழங்கப்படலாம்.

இதனால் விலை எம்டி-07ஐ காட்டிலும் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். இந்தியாவில் எம்டி-07, டெனெரே 700 போன்ற யமஹாவின் மிடில்வெய்ட் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுவதில்லை இல்லை என்பதால், ஆர்7 பைக்கும் இந்தியாவிற்கு வருகை தர வாய்ப்புகள் மிகவும் குறைவே.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha YZF-R7 May Be Launched As 2022 Model.
Story first published: Sunday, March 14, 2021, 3:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X