இந்தியாவில் இ-ஸ்கூட்டர்களை கொண்டுவர அதிரடி திட்டங்களை வைத்துள்ள யமஹா!! இதெல்லாம் நடக்கவுள்ளதா?!

இந்திய சந்தைக்காக ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் கவர்ச்சிகரமான திட்டங்களை வைத்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இ-ஸ்கூட்டர்களை கொண்டுவர அதிரடி திட்டங்களை வைத்துள்ள யமஹா!! இதெல்லாம் நடக்கவுள்ளதா?!

இந்தியாவில் பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் யமஹா நிறுவனம் நல்லப்படியாகவே செயலாற்றி வருகிறது. இது அப்படியே யமஹாவின் இவி வாகனங்களுக்கும் தொடருமா என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் இ-ஸ்கூட்டர்களை கொண்டுவர அதிரடி திட்டங்களை வைத்துள்ள யமஹா!! இதெல்லாம் நடக்கவுள்ளதா?!

ஏனெனில் அவற்றின் விற்பனையில் யமஹா எவ்வாறான வியாபார யுக்திகளை கையாள போகிறது என்பதை பொறுத்தே அவற்றின் வணிகம் இந்தியாவில் நடக்கும். யமஹா இந்திய சந்தைக்காக சில எலக்ட்ரிக் வாகனங்களை வடிக்கைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இ-ஸ்கூட்டர்களை கொண்டுவர அதிரடி திட்டங்களை வைத்துள்ள யமஹா!! இதெல்லாம் நடக்கவுள்ளதா?!

சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவிற்கு கொண்டுவருவது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமல்ல என தெரிவித்துள்ள யமஹா மோட்டார் இந்தியா ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு பிரிவு நிர்வாக இயக்குனர் யசூவோ இஷிஹாரா, தற்போது உள்ள பெட்ரோல் வாகனங்களுக்கு முழு மாற்றாக இவை கொண்டுவரப்படாது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் இ-ஸ்கூட்டர்களை கொண்டுவர அதிரடி திட்டங்களை வைத்துள்ள யமஹா!! இதெல்லாம் நடக்கவுள்ளதா?!

அதேநேரம் தற்போது உள்ள பழமையான என்ஜின்களுக்கு மாற்றாக அதிக செயல்திறன் கொண்ட என்ஜின்களின் வடிவமைப்பிலும் யமஹா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. எப்படியிருந்தாலும் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு முன்னதாக இ-ஸ்கூட்டர்களை முதலாவதாக யமஹா இந்தியாவிற்கு கொண்டுவர வாய்ப்புள்ளது.

இந்தியாவில் இ-ஸ்கூட்டர்களை கொண்டுவர அதிரடி திட்டங்களை வைத்துள்ள யமஹா!! இதெல்லாம் நடக்கவுள்ளதா?!

இந்திய சந்தையில் தற்சமயம் ஃபேஸ்லினோ மற்றும் ரே-இசட்ஆர் என்ற இரு ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. 125சிசி ஸ்கூட்டர்களான இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.71,479 மற்றும் ரூ.71,689 ஆக உள்ளன.

இந்தியாவில் இ-ஸ்கூட்டர்களை கொண்டுவர அதிரடி திட்டங்களை வைத்துள்ள யமஹா!! இதெல்லாம் நடக்கவுள்ளதா?!

இ-ஸ்கூட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்புகளுக்காக பவர் யூனிட்கள் மற்றும் பேட்டரிகளை தயாரிக்கும் சில நிறுவனங்களுடன் கூட்டணி வைக்கவும் யமஹா முதலீடுகளை வகுத்து வருகிறது.

இந்தியாவில் இ-ஸ்கூட்டர்களை கொண்டுவர அதிரடி திட்டங்களை வைத்துள்ள யமஹா!! இதெல்லாம் நடக்கவுள்ளதா?!

ஜப்பானின் நான்கு பெரும் தலைகளான யமஹா, ஹோண்டா, சுஸுகி மற்றும் கவாஸாகி பிராண்ட்கள் அவற்றின் தயாரிப்புகளில் பொருத்தவுள்ள நீக்கக்கூடிய பேட்டரி தொகுப்புகளுக்காக கூட்டணி சேர்ந்து செயல்படவுள்ளதாக கடந்த 2019ல் அறிவித்திருந்தன என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha’s Future Plans For Electric Mobility In India
Story first published: Wednesday, January 6, 2021, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X