விற்பனையில் கெத்து காட்டும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கடந்த டிசம்பர் மாத விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விற்பனையில் கெத்து காட்டும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!

2020ம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் எந்தெந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றன என்ற தகவல் வெளிவர தொடங்கியுள்ளது. அந்தவகையில், பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா மோட்டார் நிறுவனம் எத்தனை வாகனங்களைக் கடந்த மாதம் விற்பனைச் செய்திருக்கின்ற தகவலும் வெளிவந்துள்ளது.

விற்பனையில் கெத்து காட்டும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!

இதுகுறித்த தகவலை இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் யமஹா நிறுவனம், முந்தைய 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் கடந்த 2020ம் ஆண்டின் டிசம்பரில் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விற்பனையில் கெத்து காட்டும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!

30 சதீவத விற்பனை வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றிருக்கின்றது. இதனால் இந்நிறுவனம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் பரவலால் விற்பனையில் திக்கித் திணறிக் கொண்டிருந்த நிறுவனத்திற்கு பேராதரவாக கடந்த மாத விற்பனை அமைந்திருக்கின்றது.

விற்பனையில் கெத்து காட்டும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!

2019 டிசம்பர் மாதம் 29,486 யூனிட் இருசக்கர வாகனங்களையே யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்திருந்தது. ஆனால், 2020 டிசம்பரில் ஒட்டுமொத்தமாக 39,224 யூனிட் விற்பனையாகியுள்ளது. இந்த 2020 டிசம்பர் மட்டுமில்லைங்க ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களும்கூட அதிக விற்பனை வளர்ச்சியைப் பெற்றன.

விற்பனையில் கெத்து காட்டும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!

ஆகையால், சரவெடி போன்று தொடர் விற்பனை அதிகரிப்பைப் பெற்று வருவதால் யமஹா புதிய மைல்கல்லை எட்டியிருக்கின்றது. இந்நிறுவனத்திற்கு கிடைத்து வரும் இந்த அமோக வரவேற்பு இந்திய வாகனச் சந்தைக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

விற்பனையில் கெத்து காட்டும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!

யமஹா நிறுவனம், புதிதாக எஃப்இசட் எக்ஸ் என்ற புதிய பெயரை அண்மையில் பதிவு செய்தது. இப்பெயரில் புதிய அட்வென்சர் பைக்கைக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பைக்கை 250சிசி திறனில் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

விற்பனையில் கெத்து காட்டும் பிரபல இருசக்கர வாகன நிறுவனம்... எந்த நிறுவனம் தெரிஞ்சா நீங்களே மெர்சலாயிடுவீங்க!

இதுபோன்று இந்தியாவிற்கென தனித்துவமாக செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே யமஹா நிறுவனம் நல்ல விற்பனை வளர்ச்சியை நாட்டில் பெற தொடங்கியுள்ளது. இதற்கு 2020 டிசம்பர் மாத விற்பனையே சான்றாக அமைந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Gets 33 Percent Sales Growth In December 2020. Read In Tamil.
Story first published: Friday, January 1, 2021, 19:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X