எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

யமஹா எம்டி15 மோட்டார்சைக்கிளின் குறிப்பிட்ட வேரியண்ட்களின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

கடந்த சில நாட்களாக பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் விற்பனை வாகனங்களின் விலைகளை உயர்த்தி வருவதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம்.

எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

இதில் நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் போன்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அடங்குகின்றன. இதற்கு புதிய நிதியாண்டின் துவக்கமே முக்கிய காரணமாகும்.

எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

இந்த வகையில் யமஹா நிறுவனம் அதன் பிரபலமான ஆர்15 வி3 மற்றும் எஃப் இசட் பைக்குகளின் விலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தி இருந்தது. இந்த வகையில் தற்போது யமஹா நிறுவனம் எம்டி15 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகளை தலா ரூ.1,000 உயர்த்தியுள்ளது.

எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

பைக்கின் மொத்த விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த விலை உயர்வு மிகவும் குறைவு தான். ஆர்15 ஸ்போர்ட்ஸ் பைக்கின் நாக்டு வெர்சனாக யமஹா எம்டி 15 பல்வேறு விதமான நிறத்தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

இதில் டார்க் மேட் நீலம், மெட்டாலிக் கருப்பு, ஐஸ் ஃப்ளூ வெர்மிலியன், வாடிக்கையாளர்களே கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளும் நிறத்தேர்வுகளின் விலைகள் தலா ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றின் புதிய எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1,40,900, ரூ.1,40,900, ரூ.1,41,900 மற்றும் ரூ.1,44,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Yamaha MT15 New Price Old Price Difference
Dark Matte Blue ₹1,40,900 ₹1,39,900 ₹1,000
Metallic Black ₹1,40,900 ₹1,39,900 ₹1,000
Ice Fluo-vermillion ₹1,41,900 ₹1,40,900 ₹1,000
Customize ₹1,44,900 ₹1,43,900 ₹1,000
எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

ஆர்15 பைக்குகளை போன்று யமஹா எம்டி 15 பைக்குகளையும் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர். கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 6,176 எம்டி 15 பைக்குகளை யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

இந்த எண்ணிக்கை கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 3 மடங்கு அதிகமாகும். இருப்பினும் கேடிஎம் 125சிசி ட்யூக் பைக்கின் விலையும் சமீபத்தில் மற்ற பைக்குகளை போன்று உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

யமஹா ஆர்15 பைக்கிலும் எம்டி15 பைக்கிலும் ஒரே மாதிரியான 155சிசி லிக்யுடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் பிஎஸ்6 என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜினின் மூலம் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.23 பிஎச்பி மற்றும் மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 13.9 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

எம்டி 15 பைக்கில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் என்ஜின் உடன் இணைக்கப்படுகிறது. பைக்கில் சஸ்பென்ஷன் பணியை கவனிக்க முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இணைப்பட்ட-வகையிலான மோனோக்ராஸும் வழங்கப்படுகின்றன.

எம்டி-15 பைக்கின் விலையிலும் கை வைத்த யமஹா!! ரூ.1,000 அதிகரிப்பு...

ப்ரேக்கிற்கு முன் மற்றும் பின் சக்கரத்தில் முறையே 282மிமீ மற்றும் 220மிமீ-இல் டிஸ்க்குகள் பொருத்தப்படுகின்றன. 10 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் மற்றும் 138கிலோவில் எடை கொண்டதாக இருக்கும் எம்டி 15 பைக்கின் 17 இன்ச் அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha MT15 Prices Increased For April 2021, New Price List.
Story first published: Friday, April 9, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X