முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

யமஹா நிறுவனம் அதன் பிரபல இருசக்கர வாகன மாடல் ஒன்றின் விலையை முதல் முறை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன மாடல்? எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது? என்பது பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் காணலாம், வாங்க.

முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா, அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடல் ஒன்றின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம், அதன் ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 மாடலின் விலையையே நிறுவனம் உயர்த்தியுள்ளது. மூன்றாயிரம் ரூபாய் வரை இருசக்கர வாகனத்தின் விலையில் உயர்வு செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

யமஹா நிறுவனம் இந்த இருசக்கர வாகன மாடலை கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி அன்றே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது அறிமுகமாகி முழுமையாக இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில் இதன் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. யமஹாவின் இந்த நடவடிக்கை யமஹா இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

ரூ. 1.68 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் இப்பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ரூ. 3 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டிருப்பதால் இதன் விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஆம், தற்போது ஆரம்ப நிலை மாடலின் விலையே ரூ. 1,70,800ஆக மாறியுள்ளது. இதன் உயர்நிலை தேர்வான மான்ஸ்டர் எனெர்ஜி மோட்டோஜிபி எடிசன் ரூ. 1,82,800 என்ற விலைக்கு உயர்ந்துள்ளது.

முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் புதிய யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 பைக் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றின் தற்போதைய விலை பற்றிய தகவலை பட்டியலாகக் கீழே காணலாம்:

ஆர்15 வி4 மெட்டாலிக் ரெட் வேரியண்ட்டின் விலை ரூ. 1,70,800

ஆர்15 வி4 டார்க் நைட் வேரியண்ட்டின் விலை ரூ. 1,71,800

ஆர்15 வி4 ரேசிங் ப்ளூ வேரியண்ட்டின் விலை ரூ. 1,75,800

ஆர்15 வி4 மெட்டாலிக் கிரே வேரியண்ட்டின் விலை ரூ. 1,80,800

ஆர்15 வி4 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி பதிப்பின் விலை ரூ. 1,82,800

முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

புதிய விலை ஏற்றத்தால் சற்றே காஸ்ட்லியான பைக்காக ஆர்15 வி4 மாறியிருக்கின்றது. அதேநேரத்தில், நாம் செலவிடும் தொகைக்கு உகந்த தயாரிப்பாக இந்த பைக் காட்சியளிக்கின்றது. ஏனெனில், யமஹா நிறுவனம் இப்பைக்கில் பிரீமியம் தர அம்சங்கள் பலவற்றை இந்த பைக்கில் வழங்கியிருக்கின்றது.

முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் போன்ற புதிய தலைமுறை அம்சங்களை இந்த பைக்கில் யமஹா வழங்கியிருக்கிறது. இந்த அம்சத்தை பெறும் முதல் யமஹா இருசக்கர வாகனம் இதுவே ஆகும். இத்துடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றன.

முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

பொதுவாக இந்த மாதிரியான அம்சங்கள், குறிப்பாக, டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் குயிக் ஷிஃப்டர் ஆகிய அம்சங்கள் விலையுயர்ந்த மற்றும் மிக அதிக விலைக் கொண்ட இருசக்கர வாகனங்களில் மட்டுமே இடம் பெறும். மேலும், இன்னும் பல அம்சங்களை இந்த பைக்கில் யமஹா வழங்கியிருக்கின்றது.

முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

அப்சைடு டவுண் ஃபோர்க், ப்ளூடூத் இணைப்பு வசதி (புதிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் திரையிலேயே இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது), பிரத்யேக செல்போன் செயலி உள்ளிட்டவையும் புதிய ஆர்15 வி4 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 பைக்கில் 155 சிசி திறன் கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூடு-கூல்டு, எஸ்ஓஎச்சி, 4 வால்வ் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

இந்த மேட்டார் அதிகபட்சமாக 18.4 பிஎஸ் திறனை 10,000 ஆர்எம்மிலும், 14.2 என்எம் டார்க்கை 7,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இந்த எஞ்ஜின் ப்யூவல் இன்ஜெக்சன் மற்றும் வேரியபில் வால்வு ஆக்சுவேஷன் (VVA) ஆகிய தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

முதல் முறையாக பிரபல பைக் மாடலின் விலையை உயர்த்தியது Yamaha! எவ்வளவு உயர்த்தியிருக்காங்க தெரியுமா?

தொடர்ந்து, அதிக பிரீமியம் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், அலுமினியம் ஸ்விங்கர்ம் மற்றும் டெல்டா பாக்ஸ் ஃப்ரேம் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய அம்சங்கள் கொண்ட பைக்கின் விலையையே யமஹா நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha increased yzf r15 v4 bike price first time since launch
Story first published: Friday, November 12, 2021, 18:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X