முன்கள பணியாளர்களை பாராட்டி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது யமஹா!! சலுகையை சென்னையில் பெற முடியுமா?

கொரோனா முன்கள பணியாளர்களுக்கான சிறப்பு பணம் தள்ளுபடி சலுகை ஒன்றினை யமஹா மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்கள பணியாளர்களை பாராட்டி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது யமஹா!! சலுகையை சென்னையில் பெற முடியுமா?

ஜப்பானில் யமஹா மோட்டார் நிறுவனம் 1955ல் தோற்றுவிக்கப்பட்டு இன்றோடு (ஜூலை 1) 66 வருடங்களாகிவிட்டன. இதனை தனது தாயக நாட்டில் யமஹா விமர்சையாக கொண்டாடி வருகிறது.

முன்கள பணியாளர்களை பாராட்டி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது யமஹா!! சலுகையை சென்னையில் பெற முடியுமா?

ஜப்பானில் மட்டுமின்றி இந்தியாவிலும் இந்த சிறப்புமிக்க தருணத்தை யமஹா வாடிக்கையாளர்களுடன் நினைவுக்கூர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த பணம் தள்ளுபடி சலுகை.

முன்கள பணியாளர்களை பாராட்டி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது யமஹா!! சலுகையை சென்னையில் பெற முடியுமா?

தற்போதைய கொரோனா சூழலில் தங்களது முக்கியமான கடமையை ஆற்றிவரும் முன்கள பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைக்கு ‘நன்றியுணர்வு போனஸ்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்களை பாராட்டி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது யமஹா!! சலுகையை சென்னையில் பெற முடியுமா?

முன்கள பணியாளர்கள் என்றால் அதில் துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவ ஊழியர்கள், போலீஸ் மற்றும் ஆயுத பணியாளர்கள் & நகராட்சி தொழிலாளர்கள் அடங்குகின்றனர். இத்தகைய பணியாளர்கள் யமஹாவின் ஃபேஸினோ 125 & ரே இசட்.ஆர்125 ஸ்கூட்டர்களை ரூ.5,000 பணம் தள்ளுபடி உடன் வாங்கலாம்.

முன்கள பணியாளர்களை பாராட்டி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது யமஹா!! சலுகையை சென்னையில் பெற முடியுமா?

அதாவது இந்த யமஹா ஸ்கூட்டர்களின் மொத்த பணத்தில் ரூ.5,000 வரையில் குறைக்கப்படும். தற்சமயம் யமஹா ஃபேஸினோ 125 ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.73,629-ல் இருந்து ரூ.77,479 வரையில் உள்ளன. அதேநேரம் ரே இசட்.ஆர் 125 ஸ்கூட்டரின் விலைகள் ரூ.75,333-ல் இருந்து ரூ.78,689 வரையில் உள்ளன.

முன்கள பணியாளர்களை பாராட்டி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது யமஹா!! சலுகையை சென்னையில் பெற முடியுமா?

இவை இரண்டும் சமீபத்தில் தான் புதிய ஹைப்ரீட் உதவி பெற்ற 125சிசி என்ஜினை பெற்றன. இவற்றின் 125சிசி, ஏர்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-இல் 8.04 பிஎச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்-இல் 9.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

முன்கள பணியாளர்களை பாராட்டி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது யமஹா!! சலுகையை சென்னையில் பெற முடியுமா?

என்ஜின் மட்டுமின்றி இவை இரண்டும் புதியதாக எல்இடி ஹெட்லேம்ப்கள் & ப்ளூடூத் இணைப்பையும் பெற்றுள்ளன. இந்த சலுகைகள் இந்தியாவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் டெல்லியில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என யமஹா அறிவித்துள்ளது.

முன்கள பணியாளர்களை பாராட்டி பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது யமஹா!! சலுகையை சென்னையில் பெற முடியுமா?

அதேபோல் இந்த சலுகை வருகிற ஜூலை 7ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்குமாம். மேலும் இந்த சலுகையுடன் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் சில ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முயற்சிகளையும் யமஹா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Incorporated on 1st July 1955 (Japan), Yamaha Motor Company completed 66 years today, and to commemorate the momentous occasion, Yamaha Motor India (YMI) group observed the 66th Yamaha Day by paying tribute to the frontline warriors and subsequently announcing the ‘Gratitude Bonus’ for them. Through this scheme, Yamaha is offering a cash back offer of Rs. 5,000 on purchase of its scooter models - Fascino 125 Fi and Ray ZR 125 Fi to frontline warriors that include Medical Staff, Sanitation Workers, Police and Armed Personnel, and Municipal workers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X