யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்கும்போது இவற்றையும் சேர்த்து வாங்குங்க!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளிற்கான ஆக்ஸஸரீகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்கும்போது இவற்றையும் சேர்த்து வாங்குங்க!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

யமஹா நிறுவனம் சர்ப்ரைஸாக அதன் எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. நியோ-ரெட்ரோ டிசைன் மற்றும் கவர்ச்சிகரமான வசதிகளினால் இந்த 150சிசி பைக் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்கும்போது இவற்றையும் சேர்த்து வாங்குங்க!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

நேரில் பார்ப்பதற்கு, இன்னும் இந்த யமஹா பைக் இந்திய டீலர்ஷிப் ஷோரூமிற்கு கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த பைக்குடன் விற்பனை செய்யப்பட உள்ள கூடுதல் ஆக்ஸஸரீகளை யமஹா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்கும்போது இவற்றையும் சேர்த்து வாங்குங்க!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

விலைகளுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆக்ஸஸரீகளின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்து கொள்ள முடியும்.

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்கும்போது இவற்றையும் சேர்த்து வாங்குங்க!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

இந்த கூடுதல் ஆக்ஸஸரீகளில் பெட்ரோல் டேங்க் பேட்கள், க்ரோம் கண்ணாடிகள், இருக்கை கவர்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றிற்கான விலைகள் குறைந்தப்பட்சமாக ரூ.300ல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.1,490 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்கும்போது இவற்றையும் சேர்த்து வாங்குங்க!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

அதாவது பைக்குடன் இவற்றை வாங்கும்போது, பைக்கின் விலையுடன் இவற்றிற்கான தொகையையும் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கூடுதல் ஆக்ஸஸரீகள் என்னென்ன? அவற்றிற்கான விலைகள் என்னென்ன? உள்ளிட்ட விபரங்களை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Accessories Price
Seat Cover ₹300
Tank Pad ₹400
Bike Cover ₹400
Chrome Rearview mirrors ₹800
LED indicators ₹1490 (Set of 2 pcs)
Rear footrest ₹400
Engine guard ₹800
யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்கும்போது இவற்றையும் சேர்த்து வாங்குங்க!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

இதில் இருக்கை கவர் பைக்கிற்கு வித்தியாசமான தோற்றத்தினை வழங்குவது மட்டுமில்லாமல், விபத்தின்போது இருக்கைகள் பெரிய அளவில் சேதமடைவதும் தவிர்க்கப்படும். அதுமட்டுமின்றி பயணிகளுக்கு கூடுதல் சவுகரியத்தையும் இது தரவல்லது.

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்கும்போது இவற்றையும் சேர்த்து வாங்குங்க!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

பெட்ரோல் டேங்க் பேட் ஓட்டுனருக்கு கூடுதல் கால் பிடிமானத்தை வழங்கக்கூடியது. க்ரோம் உடன் வழங்கப்படும் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் பைக்கின் தோற்றத்தை மேம்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்கும்போது இவற்றையும் சேர்த்து வாங்குங்க!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் கூடுதல் பிரகாசத்தை வழங்கும். இருக்கும் ஆக்ஸஸரீகளிலேயே டர்ன் இண்டிகேட்டர்களின் விலை தான் அதிகமாகும். ஜோடியாக வழங்கப்படும் இவற்றிற்கான விலை ரூ.1,490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை வாங்கும்போது இவற்றையும் சேர்த்து வாங்குங்க!! ஆக்ஸஸரீகள் அறிவிப்பு

அப்படியே பைக்கின் பின்பக்கத்திற்கு சென்றால், பின் இருக்கை பயணி கால்களை வைத்து கொள்வதற்கு ஃபுட்ரெஸ்ட் ஆக்ஸஸரீயாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் என்ஜின் பாதுகாப்பான் மற்றும் பைக்கை மழை, தூசியில் இருந்து பாதுகாக்கும் கவரும் இந்த ஆக்ஸஸரீ லிஸ்ட்டில் அடங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
New Yamaha FZ-X Official Accessories List with Prices.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X