யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

புதிய ட்ரேசர் 9 ஜிடி ஏபிஎஸ் மோட்டார்சைக்கிள் கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் மதிப்பில் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

புதிய எம்டி-09 ஏபிஎஸ் மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய யமஹா ட்ரேசர் 9 ஜிடி ஏபிஎஸ் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமின்றி இயந்திர பாகங்களிலும் அப்கிரேட்களை பெற்று வந்துள்ளது.

யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

இந்த அப்டேட்களில் புதிய சஸ்பென்ஷன் அமைப்பு, திருத்தியமைக்கப்பட்ட உடற் அமைப்பு & ஸ்டைலிங், புதிய ஃப்ரேம், எடைக்குறைவான அலுமினிய சக்கரங்கள் மற்றும் புதிய நிலைமாற்ற அளவீட்டு அலகு (IMU) உள்ளிட்டவை அடங்குகின்றன.

யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

ஜப்பானில் வருடத்திற்கு ட்ரேசர் 9 ஜிடி ஏபிஎஸ் மோட்டார்சைக்கிளின் 1000 மாதிரிகளை விற்பனை செய்ய யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய எம்டி-09 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், கூடுதல் பேனல்கள், முன்பக்கத்தில் நீண்ட எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, ஹேண்டில்பாரில் கைவிரல் பாதுகாப்பானை புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக் பெற்றுள்ளது.

யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

இவை மட்டுமின்றி பைக்கிற்கு அடியில் எக்ஸாஸ்ட் குழாய், பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு, பொருட்களை வைத்து செல்ல பயன்படும் பக்கவாட்டு பெட்டகங்களுக்கான கொக்கி, 18 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க், இரட்டை-லென்ஸ் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

முன்பக்கத்தில் ஒளியை ஒரே இடத்தில் குவிக்கும் வகையில் ஹெட்லைட் அமைப்பு உள்ளது. பின்பக்கத்தில் டெயில்லேம்ப்பின் வடிவம் திருத்தப்பட்டுள்ளது. ஓட்டுனருக்கு தகவல்களை வழங்க 3.5 இன்ச்சில் வண்ண டிஎஃப்டி திரை பொருத்தப்பட்டுள்ளது.

யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

பயண அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியாக 4 டிரைவிங் மோட்களை இந்த ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கில் வழங்கியுள்ள யமஹா நிறுவனம் க்ரூஸ் கண்ட்ரோல், விரைவு மாற்றி, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்லிப்பர் க்ளட்ச்சையும் கொடுத்துள்ளது.

யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

ஆனால் புதிய ட்ரேசர் 9 ஜிடி ஏபிஎஸ் பைக்கிலும் வழக்கமான 888சிசி, இன்லைன் 3-சிலிண்டர், நீர்-குளிர்விப்பான் என்ஜின் தான் தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 118 பிஎச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 93 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ஸ்விங்கார்மும் பொருத்தப்பட்டுள்ளன. முன் சக்கரத்தில் டபுள் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க்கும் ப்ரேக்கிங் பணியை கவனிக்க வழங்கப்பட்டுள்ளன.

யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

ஜப்பான் நாட்டில் வருகிற ஜூலை 28ஆம் தேதியில் இருந்து விற்பனையை துவங்கவுள்ள இந்த யமஹா பைக் நீலம் கலந்த வெள்ளை மெட்டாலிக் 2, பளபளப்பான சிவப்பு மற்றும் மேட் டார்க் க்ரே மெட்டாலிக் ஏ என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் ஜப்பான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

யமஹாவின் புதிய ட்ரேசர் 9 ஜிடி பைக்!! ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது - விலையை மட்டும் கேட்காதீங்க

புதிய ட்ரேசர் 9 ஜிடி ஏபிஎஸ் பைக்கின் விலை 1,451,000 ஜப்பானிய யென்-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.9.72 லட்சமாகும். இந்திய சந்தைக்கு இந்த புதிய யமஹா பைக் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
New Yamaha Tracer 9 GT ABS launched in Japan.
Story first published: Sunday, June 27, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X