Just In
- 2 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 3 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 4 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- News
'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இளைஞர்களை சொக்க வைக்கும் புதிய வண்ணத் தேர்வில் யமஹா ஆர்15 பைக் அறிமுகம்!
இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் யமஹா ஆர்15 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் இளைஞர்கள் அதிகம் விரும்பும் மாடல்களில் ஒன்றாக யமஹா ஆர்15 பைக் இருந்து வருகிறது. அவ்வப்போது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது யமஹா ஆர்15 பைக் 3.0 வெர்ஷன் என்ற பெயரில் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தற்போது மெட்டாலிக் ரெட் என்ற புதிய சிவப்பு வண்ணத் தேர்வில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மெட்டாலிக் ரெட் என்ற இந்த வண்ணத் தேர்வில் பைக்கின் பெட்ரோல் டேங்க் பகுதி, ஃபேரிங் பேனல்கள் உள்ளிட்டவை சிவப்பு வண்ணத்திலும், எஞ்சின் உள்ளிட்ட பாகங்கள் கருப்பு வண்ணத்திலும் உள்ளது. இது நிச்சயம் பார்த்த உடனே கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்கிறது.

யமஹா ஆர்15 3.0 பைக்கின் இந்த புதிய வண்ணத் தேர்வு கொண்ட மாடலுக்கு ரூ.1,52,100 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வேறு எந்த டிசைன் அல்லது தொழில்நுட்ப மாற்றங்களும் இல்லை.

இந்த பைக்கில் 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதியும் உள்ளது.

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சைடு ஸ்டான்டு இருக்கும்போது எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாத வசதி, டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. ரேடியல் டயர்கள் விருப்பத் தேர்வின்பேரில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மெட்டாலிக் ரெட் தவிர்த்து, நீலம், சாம்பல் மற்றும் கருப்பு ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் யமஹா ஆர்15 3.0 பைக் கிடைக்கிறது. ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்குவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக தன்னை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.