ஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்டா இப்போவே ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

யமஹா நிறுவனம் அதன் ஹைபிரிட் ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்ட இப்போவா ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா அதன் புகழ்வாய்ந்த ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை ஹைபிரிட் தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மிக சமீபத்தில் யமஹா நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் புதுமுக மோட்டார்சைக்கிளான எஃப்இசட் எக்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்ட இப்போவா ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

அன்றைய தினத்தில் மற்றுமொரு சிறப்பு நிகழ்வாக ஹைபிரிட் வசதிக் கொண்ட ஃபஸ்ஸினோ ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹிபிரிட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்ட இப்போவா ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

இந்த ஸ்கூட்டருக்கு அறிமுக விலையாக ரூ. 70 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ட்ரம் பிரேக் வசதிக் கொண்ட வேரியண்டின் விலையாகும். இதில் டிஸ்க் பிரேக் வசதிக் கொண்ட தேர்வும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 76,530 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்ட இப்போவா ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

இந்த மாத முடிவில் இருந்து யமஹா ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் பிஎஸ்6 தர 125 சிசி ஏர் கூல்டு, ப்யூவல் இன்ஜெக்சன் வசதிக் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்ட இப்போவா ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 8பிஎச்பி பவரையும், 5 ஆயிரம் ஆர்பிஎம்மில் 10.3 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், சைடு போட்டிருந்தால் எஞ்ஜின் இயங்காத வகையிலான தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் எனும் வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்ட இப்போவா ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

இது ஓர் மின்சார மோட்டாராகும். பெட்ரோல் எஞ்ஜின் இயக்கத்திற்கு மாற்றாக தேவைப்படும் நேரத்தில் இது செயல்படும். ஆகையால், எரிபொருள் சிக்கனம் மற்றும் கூடுதல் மைலேஜை இந்த ஸ்கூட்டர் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ மைலேஜ் விபரம் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

ஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்ட இப்போவா ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

யமஹா ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டரின் டிஸ்க் வெர்ஷன் விவிட் சிவப்பு ஸ்பெஷல், மேட் கருப்பு ஸ்பெஷல், கூல் ப்ளூ மெட்டாலிக், டார்க் மேட் நீலம், சூவேவ் காப்பர், மஞ்சள் காக்டெயில், சையன் நீலம், விவிட் சிவப்பு மற்றும் மெட்டாலிக் கருப்பு ஆகிய நிறத் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்ட இப்போவா ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

இதேபோன்று டிரம் பிரேக் வேரியண்டானது விவிட் சிவப்பு, கூல் நீலம் மெட்டாலிக், மஞ்சள் காக்டெயில், டார்க் மேட் நீலம், சூவேவ் காப்பர், சையன் நீலம் மற்றும் மெட்டாலிக் கருப்பு ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஹைபிரிட் வசதி உடன் யமஹா ஃபஸ்ஸினோ விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலைய கேட்ட இப்போவா ஒன்னு வாங்க ஆசப்படுவீங்க!

புதிய யமஹா ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டரில் மேலும் சில சிறப்பு வசதிகளாக ப்ளூடூத் இணைப்பு வசதி, பல்வேறு தகவல்களை வழங்கும் வகையில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Launched Fascino 125 Hybrid In India At Rs 70,000 With Bluetooth Option. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X