யமஹா எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி சிறப்பு பதிப்பு அறிமுகம்! வழக்கமான மாடலைவிட ரூ. 2,000தான் அதிகம்!

யமஹா நிறுவனம் எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

யமஹா எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி சிறப்பு பதிப்பு அறிமுகம்! வழக்கமான மாடலைவிட ரூ. 2,000தான் அதிகம்!

யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான எஃப்இசட் 25 பைக்கில் புதிதாக மோட்டோ-ஜிபி எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு அறிமுகமாக விலையாக ரூ. 1,36,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யமஹா எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி சிறப்பு பதிப்பு அறிமுகம்! வழக்கமான மாடலைவிட ரூ. 2,000தான் அதிகம்!

இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கை யமஹா நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. அதிலும், இந்த மாதம் முடிவு வரை மட்டுமே விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

யமஹா எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி சிறப்பு பதிப்பு அறிமுகம்! வழக்கமான மாடலைவிட ரூ. 2,000தான் அதிகம்!

ஆகையால், இந்த மான்ஸ்டர் எனர்ஜி மோடோ-ஜிபி சிறப்பு பதிப்பு பைக்கை இந்த மாதம் இறுதி வரை மட்டுமே இந்தியர்களால் வாங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. வழக்கமான மாடலுக்கு இச்சிறப்பு பதிப்பிற்கும் இடையில் ஸ்டிக்கர் மற்றும் லேசான அணிகலன் சேர்ப்பு வேலை மட்டுமே செய்யப்பட்டுள்ளன.

யமஹா எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி சிறப்பு பதிப்பு அறிமுகம்! வழக்கமான மாடலைவிட ரூ. 2,000தான் அதிகம்!

குறிப்பாக, பைக்கின் குறிப்பிட்ட சில இடங்களில் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் வகையில் மான்ஸ்டர் எழுத்துக்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. எரிபொருள் தொட்டி, ஸ்ரவுட் பேனல் மற்றும் பக்கவாட்டு பேனல் ஆகியவற்றில் இந்த ஸ்டிக்கர்களை நம்மால் காண முடியும்.

யமஹா எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி சிறப்பு பதிப்பு அறிமுகம்! வழக்கமான மாடலைவிட ரூ. 2,000தான் அதிகம்!

மோடோஜிபி-யின் வெற்றிகரமான பயணத்தைக் கொண்டாடும் வகையில் எஃப்இசட்-25 பைக்கில் இந்த சிறப்பு பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நாம் மேலே பார்த்ததைத் தவிர வேறு எந்த சிறப்பு சேர்ப்புகளும் இப்பைக்கில் செய்யப்படவில்லை.

யமஹா எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி சிறப்பு பதிப்பு அறிமுகம்! வழக்கமான மாடலைவிட ரூ. 2,000தான் அதிகம்!

ஆகையால், வழக்கமான எஃப்இசட் 25 பைக்கில் என்ன எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றதோ, அதே எஞ்ஜின்தான் மோடோஜிபி எஃப்இசட் 25 பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது. யமஹா நிறுவனம், மோடோ-ஜிபி எஃப்இசட் 25 பைக்கில் 249 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது.

யமஹா எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி சிறப்பு பதிப்பு அறிமுகம்! வழக்கமான மாடலைவிட ரூ. 2,000தான் அதிகம்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.8 பிஎஸ் மற்றும் 20.1 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த சிறப்பு பதிப்பு பைக்கில் ஸ்டிக்கர் அலங்காரத்தை தவிர வேறு எந்த சிறப்பு அலங்காரமும் செய்யப்படாததால், எஞ்ஜின் மட்டுமல்ல எல்இடி முகப்பு மின் விளக்கு, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்ஜின் ஆஃப் ஆகும் வசதி உள்ளிட்டவை அப்படியே மோடோஜிபி எஃப்இசட் 25 பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது.

யமஹா எஃப்இசட் 25 மாடலில் மோடோஜிபி சிறப்பு பதிப்பு அறிமுகம்! வழக்கமான மாடலைவிட ரூ. 2,000தான் அதிகம்!

வழக்கமான மாடலைக் காட்டிலும் புதிய சிறப்பு பதிப்பு மோடோஜிபி எஃப்இசட் 25 பைக் ரூ. 2 ஆயிரம் கூடுதல் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. வழக்கமான யமஹா எஃப்இசட் 125 பைக்கானது இந்தியாவில் ரூ. 1.34 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் டாப்-ஸ்பெக் ரூ. 1.40 லட்சம் வரையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Launched FZ 25 Monster Energy Moto GP Edition With Sporty Edge: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Tuesday, July 20, 2021, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X