எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட்-எக்ஸ்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யமஹா எஃப்இசட்-எக்ஸ் இருசக்கர வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இவ்விரு சக்கர வாகனத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை பற்றிய கூடுதல் விபரங்களை இப்பதிவில் காணலாம்.

எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

இந்திய இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டி வந்த யமஹா எஃப்இசட்-எக்ஸ் பைக் இந்தியாவில் இன்று (ஜூன் 18) விற்பனைக்கு அறிமுகமானது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இப்பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இரு விதமான வேரியண்டுகளில் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

எஃப்இசட் எக்ஸ் ஸ்டாண்டர்டு மற்றும் எஃப்இசட் எக்ஸ் ப்ளூடூத் ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே இந்த ரெட்ரோ ஸ்டைலிலான யமஹா பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதில், வழக்கமாமன வேரியண்ட் ரூ. 1.16 லட்சம் என்ற விலையிலும், ப்ளூடூத் வசதிக் கொண்ட தேர்வு ரூ. 1.19 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். தற்போது இப்பைக்கிற்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள்ளாகவே புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பைக்கை டெலிவரி கொடுப்போம் என யமஹா அறிவித்திருக்கின்றது.

எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

மேலும், பைக் புக் செய்யும் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு யமஹா ஜி-ஷாக் கைக் கடிகாரம் இலவசமாக வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேட் காப்பர், மேட் கருப்பு, மெட்டாலிக் நீலம் ஆகிய மூன்று விதமான நிற தேர்வுகளில் யமஹா எஃப்இசட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும்.

எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

இந்த பைக் ரெட்ரோ ஸ்டைலில் காட்சியளித்தாலும் நவீன அம்சங்களைத் தாங்கிய இருசக்கர வாகனமாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக பைக்கில் ப்ளூடூத் வசதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் வாயிலாக பைக்கை இணைக்கும்போது வாகனம்குறித்த பல்வேறு தகவல்களை இருந்த இடத்திலேயே செல்போன் வாயிலாக நம்மால் அறிந்துக் கொள்ள முடியும்.

எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

எஞ்ஜினில் ஏற்பட்டிருக்கும் கோளாறு, பைக் பார்க் செய்யப்பட்டிருக்கும் இடம், செல்லும் இடம், மைலேஜ் விபரம், பேட்டரி மற்றும் எஞ்ஜின் ஆயிலை எப்போது மாற்ற வேண்டும் என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்களை தனித்துவமான ஆப்பின் வாயிலாக பெற முடியும்.

எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

இதுதவிர பைக்கைக் கவர்ச்சியான வாகனமாக தோற்றுவிக்கும் வகையில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், டியர்-ட்ராப் ப்யூவல் டேங்க், ஒற்றை துண்டு அமைப்புடைய ஹேண்டில் பார், அதிக மிருதுவான இருக்கை உள்ளிட்ட அம்சங்களும் எஃப்இசட் எக்ஸ் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

பிற அம்சங்கள்:

  • கருப்பு நிறத்திலான வெளியேற்றும் குழாய்
  • ஒற்றை துண்டு அமைப்பு கொண்ட இருக்கை
  • பின் பகுதியில் பிடிமானம்
  • கருப்பி நிறத்திலான ஃபெண்டர்கள்
  • பூமராங் வடிவத்திலான பக்கவாட்டு பகுதி
  • எஞ்ஜின் கவுல். ஆகியவை பைக்கின் கவர்ச்சிக்காக வழங்கப்பட்டிருக்கின்றன.
  • எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

    தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்:

    பைக்கின் கவர்ச்சிக்கு சேர்க்கப்பட்டிருப்பதைப் போலவே பயன்பாட்டை சுவாரஷ்யமானதாக மாற்றுவதற்கான அம்சங்களும் பல இப்பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக யமஹா கன்னெக்ட் வாயிலாக பிரம்மிப்பை ஏற்படுத்தும் வசதிகளை எஃப்இசட் பைக்கில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

    எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

    முழு டிஜிட்டல் திறனிலான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எரிபொருள் செலவுகுறித்து அறிய உதவும் ஆப், பைக்கின் பயண வரலாற்றை அறியும் வசதி, சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்ஜின் ஆஃப் செய்யும் வசதி, பிளாக் பேட்டர்ன் டயர் உள்ளிட்ட வசதிகளும் எஃப்இசட்-எஸ் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

    எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

    எஞ்ஜின்:

    யமஹா எஃப்இசட்-எக்ஸ் பைக்கில் 149 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ப்யூவல் இன்ஜெக்டட் வசதிக் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்து வேகக் கட்டுப்பாட்டு கருவியில் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 12 பிஎச்பி மற்றும் 13.6 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

    எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தது யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்... ஆஹா ஒன்னு புக் பண்ணலாம் போலிருக்கே!!

    இப்பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ-ஷைக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று சிறந்த பிரேக்கிங் வசதிக்காக முன்பக்க வீலில் 282 மிமீ அளவுள்ள டிஸ்க்கும், பின் பக்க வீலில் 220 மிமீ அளவுள்ள டிஸ்க்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Launched FZ-X Bike In India At Rs 1.16 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X