யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையில் ஸ்கூட்டர் தயாரானால் இப்படிதான் இருக்கும்!!

இந்தியாவில் இளைஞர்களின் மத்தியில் பிரபலமான யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையிலான ஒய்16இசட்ஆர் ஸ்கூட்டர் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த யமஹா ஸ்கூட்டரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையில் ஸ்கூட்டர் தயாரானால் இப்படிதான் இருக்கும்!!

யமஹா ஒய்16இசட்ஆர் ஸ்கூட்டரின் விலை மலேசிய நாட்டு சந்தையில் 10,888 RM ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.91 லட்சமாகும்.

யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையில் ஸ்கூட்டர் தயாரானால் இப்படிதான் இருக்கும்!!

இதே மாதிரியான ஸ்கூட்டர் வியட்நாம் நாட்டிலும் யமஹா எக்ஸைட்டர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒய்16இசட்ஆர் ஸ்கூட்டர் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் அதே ப்ளாட்ஃபாரத்தை உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையில் ஸ்கூட்டர் தயாரானால் இப்படிதான் இருக்கும்!!

இதே போன்று முன்னதாக ஆர்15 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தோனிஷியா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. ஒரே ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், ஆர்15 வி3 பைக்கின் அதே 155சிசி என்ஜினை தான் புதியதாக மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர் மாடலும் பெற்றுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையில் ஸ்கூட்டர் தயாரானால் இப்படிதான் இருக்கும்!!

விவிஏ தொழிற்நுட்பத்துடன் வடிவமைக்கப்படுகின்ற இந்த என்ஜின் வலிமையான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஒய்16இசட்ஆர் ஸ்கூட்டரில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 17.5 பிஎச்பி மற்றும் 14.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையில் ஸ்கூட்டர் தயாரானால் இப்படிதான் இருக்கும்!!

ஆனால் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஆர்15 மோட்டார்சைக்கிளில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 18.3 பிஎச்பி மற்றும் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்படுகிறது. மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொபெட்டில் இந்த என்ஜின் ஸ்லிப்பர் உதவி க்ளட்ச் மற்றும் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படுகிறது.

யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையில் ஸ்கூட்டர் தயாரானால் இப்படிதான் இருக்கும்!!

வேகம், ஆர்பிஎம், செயல்படுத்தப்பட்டுள்ள கியர் உள்ளிட்டவற்றை காட்டக்கூடிய திரையினை முழு-எல்சிடி தரத்தில் பெற்றிருக்கும் புதிய யமஹா ஒய்16இசட்ஆர் ஸ்கூட்டரில் சிறப்பம்சங்களாக முழு-எல்இடி தரத்தில் விளக்குகள், விவிஏ ஆக்ட்வேஷன் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.

யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையில் ஸ்கூட்டர் தயாரானால் இப்படிதான் இருக்கும்!!

இவற்றுடன் 2 வோல் சார்ஜிங் சாக்கெட் மற்றும் பின்னர் அழைக்கும் செயல்பாடு & இம்பொளிசர் உடன் யமஹா ஸ்மார்ட் லாக் முதலியவற்றையும் இந்த ஸ்கூட்டரில் யமஹா நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் பெட்ரோல் டேங்க் 5.4 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது.

யமஹா ஆர்15 பைக்கின் அடிப்படையில் ஸ்கூட்டர் தயாரானால் இப்படிதான் இருக்கும்!!

யமஹா ஒய்16இசட்ஆர் போன்ற ஸ்போர்டியான மொபெட் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் இல்லை என்பதால் இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இந்தியாவில் மற்ற யமஹா ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
This R15-powered Moped Has Landed In Malaysia (Yamaha Y16ZR Moped).
Story first published: Sunday, March 21, 2021, 23:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X