ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை ரொம்ப மிச்சப்படுத்துமாம்! விலையும் ரொம்ப அதிகமில்ல!

ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் Yamaha RayZR 125 Fi ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு என்ன மற்றும் புதிய ஸ்கூட்டரின் விலை என்ன போன்ற முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

Yamaha (யமஹா) நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகன மாடல்களில் RayZR 125 Fi (ரே-இசட்ஆர் 125 எஃப்ஐ)-ம் ஒன்று. இந்த ஸ்கூட்டர் மாடலிலேயே புதியதாக ஹைபிரிட் தேர்வை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மிக சமீபத்தில் யமஹா நிறுவனம் Fascino 125 ஸ்கூட்டரில் இந்த தேர்வை அறிமுகம் செய்திருந்தது.

ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

இதைத்தொடர்ந்து தற்போது ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மாடலிலும் ஹைபிரிட் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக மூன்றுவிதமான தேர்வுகளில் இப்புதிய ஹைபிரிட் வெர்ஷன் ரே இசட்ஆர் 125 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

RayZR 125 Fi Hybrid Drum (ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் ட்ரம்), RayZR 125 Fi Hybrid Disc (ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் டிஸ்க்) மற்றும் Street Rally 125 Fi Hybrid (ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ ஹைபிரிட்) ஆகிய மூன்று விதமான தேர்வுகளிலேயே ரே இசட்ஆர் 125 ஹைபிரிட் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

விலை பட்டியல்:

 • ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் ட்ரம் - ரூ. 76,830
 • ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஹைபிரிட் டிஸ்க் - ரூ. 79,830
 • ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ ஹைபிரிட் - ரூ. 83,830
 • இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதில் ஸ்ட்ரீட் ரேல்லி தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் ரே இசட் ஆர் 125 உயர்நிலை வேரியண்டாக (பல்வேறு அம்சங்களைத் தாங்கி) இருப்பதால் அதிக விலைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

  ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

  எஞ்ஜின்:

  இந்த மூன்று தேர்வுகளிலும் ஒரே எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 தர 125 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8 பிஎச்பி திறனை 6,500 ஆர்பிஎம்மிலும், 10.3 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த எடை 99 கிலோ ஆகும்.

  ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

  சிறப்பம்சங்கள்:

  பல்வேறு சிறப்பு வசதிகளை தாங்கிய இருசக்கர வாகனமாக யமஹா ரே இசட்ஆர் 125 எஃப்ஐ இருக்கின்றது. இதில், ஸ்டாண்டர்டு வசதியாக ஹைபிரிட் வசதிக் கொண்ட ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது இது கூடுதல் பவர் மற்றும் ஆக்சலேரஷன் திறனை வழங்க உதவும். இத்துடன் மிக அதிக திறன் வெளிப்பாட்டிலும்கூட மிக சிறப்பான நிறுத்தத்தை பெற இது உதவும்.

  ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

  இதுமட்டுமின்றி தானியங்கி ஸ்டார்ட், ஸ்டாப் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இது நீண்ட நேரம் நிறுத்தத்தின்போது எரிபொருள் வீணாவதைத் தவிர்க்க உதவும். இத்துடன், சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்ஜின் இயக்கத்தைத் துண்டிக்கும் வசதியும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது.

  ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

  மேலே பார்த்த அனைத்தும் வழக்கமான வசதியாக மூன்று தேர்வுகளில் யமஹா வழங்குகின்றது. அதேவேலையில் கூடுதல் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் டிஸ்க் பிரேக் மற்றும் ஸ்ட்ரீட் ரேல்லி வெர்ஷன்களில் அதிக சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

  ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

  அந்தவகையில் இரண்டிற்கும் இடையிலான ஸ்டாண்டர்டு அம்சங்களாக எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் 190 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் (முன்பக்கத்தில்) யுபிஎஸ் (Unified Brake System) வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றது.

  ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

  தொடர்ந்து, ப்ளூடூத் இணைப்பு, கன்னெக்ட் எக்ஸ் செல்போன் செயலி போன்ற சிறப்பு வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த செல்போன் செயலி வாயிலாக இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் இணைக்கையில் செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்து போன்ற பல்வேறு முக்கிய தகவல்களை இருசக்கர வாகனத்தின் திரையிலே நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

  ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

  இதேபோல், செல்போன் திரையில் ஸ்கூட்டர் பற்றிய பல முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும், ரைட் சென்று வரலாறு, பார்க் செய்யப்பட்ட இடங்களின் வரலாறு மற்றும் ஹசார்ட் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். இவையே டிஸ்க் பிரேக் மற்றும் ஸ்ட்ரீட் ரேல்லி ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள பொதுவான அம்சங்களாக இருக்கின்றன.

  ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதி உடன் Yamaha RayZR 125 Fi... பெட்ரோலை மிச்சப்படுத்தும்! விலையும் ரொம்ப அதிகம் இல்ல!

  அப்படி என்றால் ஸ்ட்ரீட் ரேல்லி வெர்ஷனுக்கான கூடுதல் விலைக்கான காரணம் என்னனு கேக்குறீங்களா?, இந்த வெர்ஷன் சற்று மாறுபட்ட காஸ்மெட்டிக் அலங்காரத்துடன் கிடைக்கும். மெட்டல் பிளேட், வண்ண வீல் ஸ்ட்ரைப், பிரஷ் குவார்ட் மற்றும் கருப்பு நிற பேட்டர்ன் டயர்கள் உள்ளிட்ட அம்சங்களைக் கூடுதலாக ஸ்ட்ரீட் ரேல்லி வெர்ஷனில் யமஹா வழங்கியிருக்கின்றது. எனவேதான் இதன் விலை சற்று அதிகமானதாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha launches sporty and adventure ready ray zr 125 fi hybrid range in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X