மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

யமஹா ஆர்15 மோட்டார்சைக்கிள்களின் விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை ஆர்15 வி4 மோட்டார்சைக்கிளை சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. ஆர்15 எம் என்கிற புதிய மாடலுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்15 பைக்கின் புதிய நான்காம் தலைமுறைக்கு உண்மையில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

இதனை வெளிக்காட்டும் விதமாகவே தற்போது ஆர்15 மோட்டார்சைக்கிளின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை வெளியாகியுள்ளது. கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 10,246 ஆர்15 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020 அக்டோபர் மாதத்தை காட்டிலும் சுமார் 63.70% அதிகமாகும்.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

இருப்பினும் கடந்த விற்பனை எண்ணிக்கையான 10,246 என்பது இதற்கு முந்தைய 2021 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவே. அறிமுகமான மாதம் என்பதால் கடந்த செப்டம்பரில் அதிக எண்ணிக்கையில் ஆர்15 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வந்த கடந்த அக்டோபரில் சற்று கூடுதல் எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

ஆனால் ஆயிரம் யூனிட்களுக்கு அதிகமாக குறைந்திருப்பது, ஆர்15 மோட்டார்சைக்கிள்களின் கடந்த மாத விற்பனையில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்த போதிலும், யமஹா நிறுவனத்திற்கு சற்று ஏமாற்றத்தை அளித்திருக்கும். 2020 செப்டம்பரில் வெறும் 4,696 ஆர்15 பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இது சுமார் 151% குறைவாகும்.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

அறிமுகத்திற்கு பிறகு, சில வாரங்களுக்கு முன்பு தான் ஆர்15 மோட்டார்சைக்கிளின் விலையினை யமஹா நிறுவனம் ரூ.3,000 உயர்த்தி இருந்தது. அதன்பின் மூன்றாம் தலைமுறை ஆர்15 பைக்கின் அடிப்படையில் புதியதாக ஆர்15 எஸ் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒற்றை-துண்டு இருக்கை அமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஆர்15 எஸ் பைக்கின் அறிமுகத்தால் வரும் மாதங்களில் யமஹா ஆர்15 மோட்டார்சைக்கிள்களின் விற்பனை மேலும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

மூன்றாம் தலைமுறை மாடல் உடன் ஒப்பிடுகையில் வி4 ஆனது ஏகப்பட்ட மேம்பாடுகளை பெற்று வந்துள்ளது. இதன்படி சில புதிய வசதிகள் ஆர்15 வி4 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆர்15 பைக்கின் விலைகளையும் யமஹா சற்று உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள யமஹா ஆர்7 பைக்கின் தோற்றத்தால் கவரப்பட்டு புதிய ஆர்15 வி4 உருவாக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம்.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

ஆர்15 எம் மாடலை பொறுத்தவரையில், மோட்டோஜிபி மற்றும் மெட்டாலிக் க்ரே நிறங்களில் இது விற்பனை செய்யப்படுகிறது. ஆர்15 வி4 பைக்கின் டிசைன் சிறப்பம்சங்களாக, புதிய முன்பக்கம், இரட்டை-பேட் ஹெட்லேம்ப் அமைப்பிற்கு மாற்றாக சிங்கிள் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், விங்க்லெட் வடிவில் நேர்த்தியான எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பக்கவாட்டு வேலைப்பாடுகளை ஏற்றுள்ளது.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

அத்துடன் ரீடிசைனில் எல்இடி டெயில்லேம்ப்கள், புதிய இருக்கைகள், திருத்தியமைக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவற்றையும் நான்காம் தலைமுறை ஆர்15 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. ஆர்15 பைக்கின் இரு எம் வெர்சன்களிலும் நீல நிறத்தில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யமஹா ஆர்15 வி4 பைக்கில் வழக்கமான 155சிசி, லிக்யுடு-கூல்டு எஸ்ஒஎச்சி ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

வெவ்வேறான வால்வு செயல்பாடு தொழிற்நுட்பத்துடன் அதிகப்பட்சமாக 18.3 பிஎச்பி மற்றும் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் ஆனது உதவி ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது. ஆர்15 வி4 பைக்கின் எடை 142 கிலோ ஆகும். மெட்டாலிக் சிவப்பு, டார்க் நைட் மற்றும் ரேசிங் நீலம் என்பவை ஆர்15 வி4 பைக்கிற்கு வழங்கப்படும் மற்ற நிறத்தேர்வுகளாகும்.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

தங்க நிறத்திலான முன்பக்க தலைக்கீழான சஸ்பென்ஷன் ஃபோர்க்குகளை பெற்றிருக்கும் புதிய ஆர்15 வி4 பைக்கில் இரட்டை-சேனல் ஏபிஎஸ், விரைவான கியர் மாற்றி, டிராக்‌ஷன் கண்ட்ரோல், திருத்தியமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் அமைப்பு, நீளமான விண்ட்ஸ்க்ரீன், ப்ளூடூத் இணைப்பு உடன் நாவிகேஷன், ரீ பொசிஷனில் ஓட்டுனர் கால் வைக்கும்பகுதி, புதிய உடல் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மீண்டும் ஒரே மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ள யமஹா ஆர்15!! விற்பனை 63.70% அதிகரிப்பு!

ஆர்15 வி4 பைக்கின் அறிமுக விலையாக ரூ.1.68 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உடல் பேனல்களில் துவங்கி, சேசிஸில் வரையில் அப்கிரேடை பெற்றுள்ள புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கிற்கு பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்200, சுஸுகி ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 மற்றும் கேடிஎம் ஆர்சி200 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha major garnered total of 10 246 units r15 bikes in oct 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X