என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

விலை குறைந்த ஆர்15 மோட்டார்சைக்கிளாக ஆர்15எஸ் என்ற மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

யமஹா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ஆர்15 ஒய்.இசட்.எஃப்-வி4 மற்றும் ஆர்15 எம் மோட்டார்சைக்கிள்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. யுஎஸ்டி ஃபோர்க்குகள், விரைவு கியர்மாற்றி, டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், இணைப்பு தொழிற்நுட்பம் மற்றும் புதிய நிறத்தேர்வுகள் உள்ளிட்டவற்றால் முந்தைய தலைமுறை வி3 மாடலை காட்டிலும் இவை சிறந்தவைகளாக கொண்டுவரப்பட்டுள்ளன.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

இந்த அப்டேட்களுக்கு ஏற்ப விலைகளும் பெரிய அளவில் குறைக்கப்படவில்லை. யமஹா ஆர்15 மோட்டார்சைக்கிள்களுக்கு உலகளவில் ரசிகர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக, குறைந்த சிசி பைக்குகளே அதிகம் விற்பனையாகும் இந்தியாவில், வாங்கினால் ஆர்15 மோட்டார்சைக்கிள் தான் வாங்குவேன் என அடம்பிடிப்பவர்களும் உள்ளனர்.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

இதனால் தான் தைரியமாக யமஹா நிறுவனம் ஆர்15 மோட்டார்சைக்கிள் வரிசையில், புதியதாக ஆர்15 எஸ் என்ற மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக செய்திகள் தற்போது வெளிவந்துள்ளன. ஆர்15 எஸ் என்ற பெயரை ஏற்கனவே யமஹா நிறுவனம் பதிவு செய்து கொண்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, ஆர்15 எஸ், இருப்பதிலேயே விலை குறைவான ஆர்15 மோட்டார்சைக்கிளாக கொண்டுவரப்பட உள்ளதாம்.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

இதன் மூலமாக ஆர்15 பிராண்டை பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல யமஹா திட்டமிடலாம். ஆர்15 பைக்கின் தோற்றம் தனி சிறப்பானது என்பதால், ஆர்15 எஸ் மாடலில் பெரியதாக எந்த மாற்றத்தையும் யமஹா கொண்டுவர விரும்பாது என்றே நினைக்கிறேன். ஆனால் விலையை குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டி இருப்பதால், சில அட்வான்ஸான வசதிகளை யமஹா நீக்கும்.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

மேலும் புதிய ஆர்15 எஸ் ஆனது ஆர்15 வி3 பைக்கின் ரீ-பிராண்ட் வெர்சனாகவும் யமஹா கொண்டுவர பார்க்கும். அதாவது ஆர்15 வி2 (வெர்சன்-2) மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட அதே ஃபார்முலா தான் ஆர்15 எஸ் பைக்கின் வடிவமைப்பிலும் பயன்படுத்தப்படலாம். ஆர்15 வி2 பைக்கை யமஹா நிறுவனம் பெரிய அளவில் அலகரிப்பு இல்லாமல் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

இந்த ஃபார்முலா நம் இந்தியர்கள் மத்தியில் க்ளிக் ஆகக்கூடியது தான். ஏனெனில் இந்தியாவில் அட்வான்ஸ்டு வசதிகளை காட்டிலும் ஸ்டைலிஷான பைக்குகள் வாங்க விரும்புபவர்களே அதிகம். 155சிசி என்ஜினை தான் பெற்றாலும், ஆர்15 நம் இளம் தலைமுறையினர் மத்தியில் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இந்த விலை குறைவான வெர்சனுக்கு சற்று பொருளாதாரத்தில் பின் தங்கிய வாடிக்கையாளரும் கிடைப்பார்கள்.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

புதிய ஆர்15 வி4 பைக்கில் வழங்கப்பட்டுள்ள டிசைன் அப்டேட்கள், யுஎஸ்டி ஃபோர்க்குகள், புதிய நிறத்தேர்வுகள், கிராஃபிக்ஸ் மற்றும் மற்ற காஸ்மெட்டிக் மேம்பாடுகள் அனைத்தும் ஆர்15 எஸ் வேரியண்ட்டிலும் யமஹா வழங்கும். ஏனெனில் முந்தைய தலைமுறையில் புதிய ஆர்15 பைக்கை வாங்க எவர் ஒருவரும் விரும்ப மாட்டார்கள். இருப்பினும் பைக்கின் விலையினை குறைப்பதற்காக விரைவான கியர் மாற்றி, டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் நீக்கப்படலாம்.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

அதேபோல் யமஹா ஆர்15 வி3 பைக்கின் அதே என்ஜின் தான் ஆர்15 எஸ் பைக்கிலும் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதாவது கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய முந்தைய ஆர்15 இன் 155சிசி, SOHC, லிக்யுடு கூல்டு, 4-வால்வு என்ஜின் பொருத்தப்படலாம். இது அதிகப்பட்சமாக 18.6 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆர்15 பைக்கிலும் இதே என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.4 பிஎஸ் மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 14.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

புதிய ஆர்15 வி4 பைக்கில் முன்பக்க யுஎஸ்டி ஃபோர்க்குகள் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒன்று. வெளிநாட்டு சந்தைகளில் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படும் இது இந்திய சந்தையில் தற்போது தான் ஆர்15 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்15 எஸ் என்ற விலை குறைவான மாடலிலும் இத்தகைய முன்பக்க சஸ்பென்ஷன் அமைப்பை எதிர்பார்க்கலாம்.

என்னது, ஆர்15 எஸ்-ஆ!! விலை குறைவான ஆர்15 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறதா யமஹா?

இதனுடன் முழு டிஜிட்டல் எல்சிடி மீட்டர் கண்சோலும் ஆர்15 பைக்கின் புதிய நான்காம் தலைமுறை வெர்சனில் யமஹா வழங்கியுள்ளது. இணைப்பு வசதிகளாக பார்க்கிங் பகுதியை தேடுவான், பழுதின் எச்சரிக்கை, எரிபொருள் பயன்பாட்டை கண்காணிக்கும் வசதி, பராமரிப்பு பரிந்துரைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha motorcycle plans to launch cheaper version of R15 named R15S.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X