மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் அதிக செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் மீண்டும் நுழைய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள ஆவண படத்தினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

இந்திய சந்தையில் பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய விலையிலான மோட்டார்சைக்கிள்களையும், ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்தால் தான் தொடர்ந்து மார்க்கெட்டில் நீடிக்க முடியும் என்பதை ஜப்பானிய யமஹா நிறுவனம் உணர்ந்து செயல்பட்டு வருகிறது.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

இதனால் தான் யமஹா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் அதிகப்பட்ச விலை கொண்ட மோட்டார்சைக்கிளாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்15 பைக்கின் நான்காம் தலைமுறை வி4 விளங்குகிறது. இந்த நிலை இப்போது தானே தவிர, முந்தைய காலங்களில் விலைமிக்க மோட்டார்சைக்கிள்களை யமஹா விற்பனை செய்துள்ளது.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

இவ்வளவு ஏன், 1000சிசி என்ஜினை கொண்ட ஆர்1 பைக்குகள் கூட இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயல்திறன்மிக்க ஒருசில மோட்டார்சைக்கிள்களும் யமஹா போன்ற பழமையான பிராண்டில் இருந்து விற்பனையில் இருப்பது அவசியமாகும். ஏனெனில் இவ்வாறான அறிமுகங்கள் அந்த பிராண்டின் திறனை வெளிக்காட்டக்கூடியவைகளாக அமையும்.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

இதனை மனதில் வைத்துதான், புத்தம் புதிய அதி-செயல்திறன் மாடல் ஒன்றை இந்தியாவில் களமிறக்க யமஹா தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நமக்கு கிடைத்துள்ள படத்தில் ‘ஒய்.இசட்.எஃப்-ஆர்9' என்ற பெயரினை யமஹா தனது புதிய மோட்டார்சைக்கிளுக்காக பதிவு செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

இதே பெயரினை மற்ற நாட்டு சந்தைகளிலும் இந்த ஜப்பானிய நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த வகையில் நம் நாட்டில் விரைவில் விற்பனைக்கு வரலாம் என கூறப்படும் யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்9 ஆனது சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள எம்டி-09 பைக்கின் சூப்பர் ஸ்போர்ட் வெர்சனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியீடு செய்யப்பட்ட எம்டி-09 பைக்கில் 889சிசி, லிக்யுடு-கூல்டு, இன்லைன்-3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 119 பிஎஸ் மற்றும் 93 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

இதனுடன் ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச் மற்றும் கூடுதல் தேர்வாக விரைவு கியர்மாற்றி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. தோற்றத்தை பொறுத்தவரையில் யமஹா ஆர்7 பைக்கின் அடிப்படையில் புதிய ஆர்9 மாடல் இருக்கும் என தெரிகிறது. இந்த வகையில் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் பிரோஜெக்டர் விளக்குகளுடன் நேர்த்தியான முன்பக்கத்தை இந்த பைக்கில் எதிர்பார்க்கிறோம்.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

மேலும் முன்பக்கத்தில் காற்று இயக்கவியலுக்கு இணக்கமானதாக எதிர்காற்று தடுப்பு கண்ணாடி பொருத்தப்படும். பின்பக்க முனை பகுதியும் எல்இடி டெயில்லைட் உடன் கூர்மையானதாக இருக்கும். பந்தய ரக பைக் என்பதால், ஹேண்டில்பார் சற்று தாழ்வாக வழங்கப்படும், அதேபோல் ஓட்டுனர் கால் வைக்கும்பகுதி சற்று பின்னோக்கி வழங்கப்படும்.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

இவற்றுடன் பிளவுப்பட்ட இருக்கை அமைப்பை பெற்றுவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஒய்.இசட்.எஃப்-ஆர்9 பைக்கில் 6-அச்சு செயலற்ற அளவீட்டு அலகு, டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், ஸ்லைட் கண்ட்ரோல், ரைடிங் மோட்கள், பிரீமியம் ஹைலின்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பு (முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக்) உள்ளிட்டவையும் வழங்கப்படலாம்.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

எம்டி-09 பைக்கின் அதே ஃப்ரேமில் தயாரிக்கப்பட்டாலும், புதிய ஆர்9 பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் எனப்படும் தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியின் உயரம் வழக்கத்தை காட்டிலும் சற்று தாழ்வாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் அழகான வடிவமைப்பு இந்த புதிய ஆர்7 பைக்கிற்கு கிடைக்கும்.

மீண்டும் இந்தியாவில் செயல்திறன்மிக்க பைக்கை களமிறக்குகிறதா யமஹா? அடுத்ததாக அறிமுகமாகும் பைக்கின் பெயர் இதுதான்

வருகிற நவம்பர் 23ஆம் தேதியில் இருந்து 28ஆம் தேதி வரையில் இத்தாலி நாட்டில் நடைபெற உள்ள 2021 ஐக்மா (EICMA) கண்காட்சியில் இந்த யமஹா பைக் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் விற்பனைக்கு வரும் தயாரிப்பு வெர்சன் 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் வெளியிடப்படும்.

குறிப்பு: இந்த செய்தியில் நாங்கள் பயன்படுத்தி இருப்பது ஒய்.இசட்.எஃப்-ஆர்9 பைக்கின் படங்கள் அல்ல.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha YZF-R9 trademarked in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X