புதிய நிறத்தில் யமஹா ஆர்15 பைக்!! மலேசியாவில் அறிமுகம், நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்...

உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளுள் ஒன்றான யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கிற்கு புதிய பெயிண்ட் தேர்வு மலேசிய நாட்டு சந்தையில் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய நிறத்தில் யமஹா ஆர்15 பைக்!! மலேசியாவில் அறிமுகம், நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்...

உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளுள் உலகளவில் பிரபலமானது மட்டுமில்லாமல் மலிவான ஆரம்ப-நிலை ஸ்போர்ட்ஸ் பைக்காக யமஹா ஆர்15 பல வெளிநாட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்தகைய நாடுகளில் ஒன்றான மலேசியாவில் தான் தற்போது இந்த யமஹா பைக்கிற்கு புதிய நிறத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் யமஹா ஆர்15 பைக்!! மலேசியாவில் அறிமுகம், நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்...

மஞ்சள் நிற சக்கரங்களுக்கு ஏற்ப பைக் சில்வர்/ க்ரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் தலைக்கீழான முன்பக்க ஃபோர்க்குகள் என சஸ்பென்ஷன் அமைப்பும் ப்ரீமியம் தரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் யமஹா ஆர்15 பைக்!! மலேசியாவில் அறிமுகம், நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்...

இந்தியாவில் ஆர்15 பைக்கில் சஸ்பென்ஷனிற்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் தான் முன்பக்கத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்களுக்கு ஏற்றப்படி முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க் ட்யுப்கள் தங்க நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய நிறத்தில் யமஹா ஆர்15 பைக்!! மலேசியாவில் அறிமுகம், நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்...

இவை தவிர்த்து மற்ற பாகங்களான, இரட்டை-பேட் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பிளவுப்பட்ட வடிவில் இருக்கைகள் உள்ளிட்டவற்றுடன் பைக்கின் வடிவம் அப்படியே தொடரப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் யமஹா ஆர்15 பைக்!! மலேசியாவில் அறிமுகம், நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்...

ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தோற்றம் யமஹாவின் பிரபலமான ஒய்இசட்எஃப்-ஆர்1 என்ற ட்ராக் பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆர்15 பைக்கில் 155சிசி, லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக், எஸ்ஒஎச்சி, 4-வால்வு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினை யமஹா நிறுவனம் வழங்குகிறது.

புதிய நிறத்தில் யமஹா ஆர்15 பைக்!! மலேசியாவில் அறிமுகம், நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்...

மேலும் இந்த என்ஜின் அமைப்பில் வெவ்வேறான வால்வு இயக்கம் (VVA) தொழிற்நுட்பத்தையும் இணைப்பதாக யமஹா தெரிவிக்கிறது. இவை மட்டுமின்றி அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதி போன்றவற்றையும் தற்போது மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யமஹா ஆர்15 பைக் கொண்டுள்ளது.

புதிய நிறத்தில் யமஹா ஆர்15 பைக்!! மலேசியாவில் அறிமுகம், நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்...

இந்த புதிய ஆர்15 பைக்கின் விலை 11,988 ஆர்.எம் ஆக மலேசிய நாட்டு சந்தையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2.20 லட்சமாகும். இந்த புதிய நிறத்தேர்வு நமது இந்திய சந்தைக்கும் கொண்டுவரப்படுமா என்பதற்கான பதில் தற்போதைக்கு இல்லை.

புதிய நிறத்தில் யமஹா ஆர்15 பைக்!! மலேசியாவில் அறிமுகம், நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்...

இந்தியாவில் நீண்ட மாதங்களாக ரேசிங் ப்ளூ, தண்டர் க்ரே மற்றும் டார்க் நைட் என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் தான் யமஹா ஆர்15 கிடைத்து வந்தது. சமீபத்தில் தான் புதிய மெட்டாலிக் சிவப்பு நிறம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha YZF-R15 gets a new silvergrey paint scheme. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X