ஆர்15 & எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா!! விலைகள் உயர வாய்ப்பிருக்கு...

இந்திய இளைஞர்களின் ஃபேவரட் பைக்குகளாக விளங்கும் ஆர்15 மற்றும் எம்15 மோட்டார்சைக்கிள்களில் விரைவில் ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆர்15 & எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா!! விலைகள் உயர வாய்ப்பிருக்கு...

புதிய எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து யமஹா நிறுவனம் அதன் அனைத்து இந்திய மாடல்களிலும் ப்ளூடூத் இணைப்பை கூடுதல் தேர்வாக கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆர்15 & எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா!! விலைகள் உயர வாய்ப்பிருக்கு...

யமஹாவின் எஃப்.இசட் மோட்டார்சைக்கிள்களில் ஏற்கனவே ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டதை அடுத்து, சமீபத்தில் ஃபேஸினோ 125 மற்றும் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் ப்ளூடூத் செயல்பாட்டுடன் அப்டேட் செய்யப்பட்டன. இந்த அப்டேட் செய்யப்பட்ட யமஹா ஸ்கூட்டர்கள் இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்15 & எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா!! விலைகள் உயர வாய்ப்பிருக்கு...

இந்த நிலையில் பிரபலமான ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளிலும் ப்ளூடூத் வசதியை கொண்டுவர யமஹா திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. எப்போது இந்த மோட்டார்சைக்கிள்களில் இந்த சிறப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆர்15 & எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா!! விலைகள் உயர வாய்ப்பிருக்கு...

ப்ளூடூத் இணைப்பு வசதி வந்துவிட்டால், யமஹா ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளை யமஹா மோட்டார்சைக்கிள் அப்ளிகேஷன் மூலம் ஓட்டுனரின் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ள முடியும். இவ்வாறான செயல்பாட்டிற்கு இந்தியாவில் கனெக்ட் எக்ஸ் மற்றும் ஒய்-கனெக்ட் என இரு அப்ளிகேஷன்கள் உள்ளன.

ஆர்15 & எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா!! விலைகள் உயர வாய்ப்பிருக்கு...

இதில் கனெக்ட் எக்ஸ், பயணங்களின் வரலாறு, மொபைல் போனின் அழைப்புகளுக்கு பதிலளித்தல் அல்லது பிறகு பதிலளிப்பதாக கூறும் வசதி, போனிற்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் இமெயிலை அறிவித்தல், மொபைல் போனின் பேட்டரியின் சார்ஜ் அளவு, பார்க்கிங் பதிவு உள்ளிட்டவற்றை வழங்கக்கூடியதாக உள்ளது.

ஆர்15 & எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா!! விலைகள் உயர வாய்ப்பிருக்கு...

அதுவே ஒய்-கனெக்ட் சற்று ப்ரீமியமான தொழிற்நுட்ப அம்சமாகும். கனெக்ட் எக்ஸ் வழங்கக்கூடியது அனைத்தும் வழங்கும் ஒய்-கனெக்ட், கூடுதலாக பைக் பராமரிப்பு பரிந்துரை, எரிபொருள் நுகர்வு, செயலிழப்பு அறிவிப்பு, ரெவ் டேஸ்போர்டு, தொலைபேசி பேட்டரி நிலை காட்டி உள்ளிட்டவையையும் வழங்கும்.

ஆர்15 & எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா!! விலைகள் உயர வாய்ப்பிருக்கு...

ஒய்-கனெக்ட்டின் யமஹா கனெக்ட் வெர்சன் தான் ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதிகளினால் இந்த இரு மோட்டார்சைக்கிள்களின் விலை அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

ஆர்15 & எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா!! விலைகள் உயர வாய்ப்பிருக்கு...

யமஹா எம்டி-15 மோட்டார்சைக்கிளின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1,41,640 ஆகவும், ஆர்15 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.52,866 ஆக உள்ளன. யமஹா ஆர்15 பைக்கில் சில மாதங்களுக்கு முன்பு தான் யமஹா நிறுவனம் புதிய சிவப்பு நிறத்தேர்வை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha R15, MT15 will get bluetooth update. And might get price hike also.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X