இப்படி ஒரு முடிவ யமஹா எடுக்கும்னு யாருமே எதிர்பார்க்கல! இரு பிரபல பைக்குகளின் விலையில் ரூ.20,000 வரை குறைப்பு!

யமஹா நிறுவனம் அதன் இரு பிரபல மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை பெருமளவில் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் யமஹா நிறுவனம், அதன் இரு புகழ்வாய்ந்த இரு பைக்குகளின் விலையை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

விலை குறைப்பு:

யமஹா நிறுவனத்தின் இரட்டையர்கள் இருசக்கர வாகனம் என்று அழைக்கப்படும் எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 ஆகிய இரு மாடல் இரண்டு சக்கர வாகனங்களின் விலையே ரூ. 20 ஆயிரம் வரை குறைக்கப்பட்டிருக்கின்றது. எஃப்இசட் 25 மாடலின் விலையில் ரூ. 18,800 வரையிலும், எஃப்இசட்எஸ் 25 மாடலின் விலையில் ரூ. 19,300 வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

புதிய விலை:

அதிரடி விலை குறைப்பால் இரு இருசக்கர வாகனங்களின் விலையும் பல மடங்கு குறைந்தநிலையில் காணப்படுகின்றது. யமஹா எஃப்இசட் 25 பைக்கின் புதிய ரூ. 1,34,800 ஆகும். எஃப்இசட்எஸ் 25 மாடலின் புதிய விலை ரூ. 1,39,300 ஆகும். இவை இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரும் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

பழைய விலை:

விலை குறைப்பு செய்யப்படுவதற்கு முன்னர் இப்பைக்குகள் என்ன விலைக்கு விற்கப்பட்டு வந்தன என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். விலை குறைப்பிற்கு முன்னர் எஃப்இசட் 25 மாடல் ரூ. 1,53,600 என்ற விலையிலும், எஃப்இசட்எஸ் 25 மாடல் ரூ. 1,58,600 என்ற விலையிலும் விற்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

விலைக்குறைப்பிற்கான காரணம்?

விலைக் குறைப்பிற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், விலை குறைப்பின் காரணத்தினால் எந்தவொரு அம்சம் குறைக்கும் நடவடிக்கையும் இரு இருசக்கர வாகனங்களிலும் செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

ஆகையால், இந்த கால்-லிட்டர் வகுப்பு மோட்டார்சைக்கிள் அதே ஸ்டைல், அம்சங்கள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதாவது, முன்பு எப்படி இருந்ததோ அப்படியே விலைக் குறைப்பிற்கு பின்னரும் எஃப்இசட் 25, எஃப்இசட்எஸ் 25 மாடல் பைக்குகள் இருக்கின்றன.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் அதன் தயாரிப்புகளின் விலையைக் கடுமையாக உயர்த்தி வரும் வேலையில் யமஹா மட்டும் மாற்று நடவடிக்கையாக அதன் விலையைக் குறைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நடவடிக்கை போட்டி நிறுவனங்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

ஸ்டைல் மற்றும் உருவத்தில் லேசான மாற்றங்களைக் கொண்டிருக்கும் எஃப்இசட் 25, எஃப்இசட்எஸ் 25 பைக்குகளில் ஒரே மாதிரியான திறன் கொண்ட எஞ்ஜினையே யமஹா பயன்படுத்தியுள்ளது. இப்பைக்கில், 249 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.5 எச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 20.1 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த சிறப்பு திறன் கொண்ட பைக்கின் விலையையே யமஹா நிறுவனம் தற்போது அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

இந்த நடவடிக்கை இரட்டையர்களின் விற்பனை வரும் காலங்களில் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி புதுமுக மாடல்களின் வாயிலாகவும் இந்தியர்களைக் கவரும் முயற்சியில் யமஹா ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், மிக விரைவில் எஃப்இசட்-எக்ஸ் புதிய பைக்கை இந்தியாவில் களமிறக்கும் பணியில் யமஹா மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

யமஹா அதிரடி... இரு பைக்குகளின் விலையில் ரூ. 20,000 வரை குறைப்பு... உறைந்து நிற்கும் போட்டி நிறுவனங்கள்...

இதுதவிர, டிரேசர் எனும் புதிய பிராண்டிலும் புதுமுக வாகனங்களைக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பிராண்டின்கீழ் இரு மாடல்கள் நாட்டில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டிரேசர் 700 மற்றும் டிரேசர் 900 ஆகிய இரு புதிய மாடல்களே விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடல்கள் ஆகும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Reduced FZ 25 And FZS 25 Bike Prices In India. Read In Tamil.
Story first published: Wednesday, June 2, 2021, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X