யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

யமஹா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனத்தின் விலையைக் கணிசமாக குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

யமஹா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான எம்டி15 பைக்கின் விலையைக் கணிமாகக் குறைத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு தகவல் யமஹா இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் எம்டி15 பைக்கின் விற்பனையை இந்த விலைக் குறைப்பு நடவடிக்க அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

விலைக் குரைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட கையோடு யமஹா நிறுவனம் மற்றுமொரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தனது பிற தயாரிப்புகள் சிலவற்றின் விலையை உயர்த்தியிருப்பதாக அது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

ஒய்இசட்எஃப்-ஆர்15 வி3, எஃப்இசட் எஃப்ஐ வி3, எஃப்இசட்எஸ் எஃப்ஐ வி3 மற்றும் சமீபத்திய அறிமுகமான ஃபஸ்ஸினோ 125 ஹைபிரிட் ஆகிய இருசக்கர வாகன மாடல்களின் விலையையே யமஹா உயர்த்தியிருக்கின்றது. 1.28 சதவீதம் முதல் 2.86 சதவீதம் வரை விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 2,500 வரை விலையுயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

யமஹா ஆர்15

யமஹா ஆர்15 பைக்கின் விலையில் ரூ. 2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முன்னதாக ரூ. 1,54,600 என்ற விலையில் கிடைத்து வந்த இப்பைக் தற்போது ரூ. 1,56,600 என்ற விலைக்கு விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இப்பைக்கின் டாப் வேரியண்டான ஆர்15 டார்க் க்னைட் இன் விலை ரூ. 1,58,700 ஆக உயர்ந்துள்ளது.

Yamaha R15 New Price Old Price Difference
R15 Grey ₹1,56,600 ₹1,54,600 ₹2,000
R15 Red ₹1,56,600 ₹1,54,600 ₹2,000
R15 Blue ₹1,57,700 ₹1,55,700 ₹2,000
R15 Dark Knight ₹1,58,700 ₹1,56,700 ₹2,000
யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

யமஹா எஃப்இசட் எஃப்ஐ வி3

இந்த பைக் இந்தியாவில் இரு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் முன்னதாக ரூ. 1,04,700 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இதன் விலையிலேயே தற்போது ரூ. 2,500 வரை உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இதன் விலை ரூ. 1,07,200 ஆக அதிகரித்துள்ளது.

Yamaha FZ FI V3 New Price Old Price Difference
Metallic Black ₹1,07,200 ₹1,04,700 ₹2,500
Racing Blue ₹1,07,200 ₹1,04,700 ₹2,500
யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ வி3

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ வி3 பைக் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், டார்க் க்நைட் மற்றும் விண்டேஜ் கிரீன் ஆகிய இரு நிற தேர்வுகளின் விலை மற்றும் சற்று அதிகம் ஆகும். பிற நிறங்களான மேட் சிவப்பு, மேட் கருப்பு மற்றும் மேட் நீலம் ஆகியவற்றின் விலை ஒன்றே ஆகும்.

யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

இந்த அனைத்து நிற தேர்வுகளின் விலையிலும் ரூ. 2,500 உயர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மேட் சிவப்பு, மேட் கருப்பு மற்றும் மேட் நீலம் இவற்றின் விலை ரூ. 1,10,700 ஆகவும், டார்க் க்நைட் நிற தேர்வின் விலை ரூ. 1,12,700 ஆகவும், விண்டேஜ் பச்சை நிறத்தின் விலை ரூ. 1,11,700 ஆகவும் உயர்ந்துள்ளது.

Yamaha FZS FI V3

New Price Old Price Difference
Matte Red ₹1,10,700 ₹1,08,200 ₹2,500
Matte Black ₹1,10,700 ₹1,08,200 ₹2,500
Matte Blue ₹1,10,700 ₹1,08,200 ₹2,500
Dark Knight ₹1,12,200 ₹1,09,200 ₹2,500
Vintage Green ₹1,11,700 ₹1,11,700 0
யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

யமஹா ஃபஸ்ஸினோ ஹைபிரிட்

யமஹா ஃபஸ்ஸினோ இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவ்விரு தேர்வுகளின் விலையிலும் ரூ. 2 ஆயிரம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், முன்னதாக ரூ. 70 ஆயிரத்திற்கு விற்பனைக்குக் கிடைத்து வந்த டிரம் வசதிக் ஃபஸ்ஸினோ 125 ஹைபிரிட் தற்போது 72 ஆயிரம் ரூபாவுக்கும், டிஸ்க் ரூ. 77,530 க்கும் விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

இந்த விலையுயர்வு இந்தியர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஃபஸ்ஸினோ 125 ஹைபிரிட் ஸ்கூட்டரின் விலையை யமஹா உயர்த்தியிருப்பது கடுமையான வேதனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஸ்கூட்டரை நிறுவனம் மிக சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Yamaha Fascino Hybrid

New Price Old Price Difference
Drum ₹72,000 ₹70,000 ₹2,000
Disc ₹77,530 ₹75,530 ₹2,000
யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

இதன் அறிமுகம் அரங்கேறி ஒரு மாதம்கூட நிறைவேறாத நிலையில் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 23ம் தேதி அன்றே இந்த ஸ்கூட்டர் நாட்டில் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வேதனையில் சற்று விளக்களிக்கும் வகையில் எம்டி15 பைக்கின் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

யமஹா எம்டி-15

யமஹா எம்டி-15 பைக் இந்தியாவில் மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் டார்க் மேட் நீலம் மற்றும் மெட்டாலிக் கருப்பு ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் எம்டி-15 பைக்கின் விலை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐஸ் ஃப்ளூவோ வெர்மிலியன் தேர்வின் விலையில் மட்டும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

ஆகையால், அது ரூ. 1,45,900 என்ற விலைக்கே விற்பனைக்குக் கிடைக்கும். விலைக்குக் குறைக்கப்பட்டிருக்கும் மற்ற இரு நிற தேர்வுகளும் ரூ. 1,44,900 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இது முந்தைய விலையைக் காட்டிலும் 0.69 சதவீதம் குறைவாகும். நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில்தான் இப்பைக்கின் விலையை யமஹா உயர்த்தியிருந்தது.

Yamaha MT15 New Price Old Price Difference
Dark Matte Blue ₹1,44,900 ₹1,45,900 ₹-1,000
Metallic Black ₹1,44,900 ₹1,45,900 ₹-1,000
Ice Fluo-vermillion ₹1,45,900 ₹1,45,900 0
யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிரடியாக குறைப்பு... கூடவே ஆப்பையும் வச்சிருக்கு! என்ன தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!

ஆயிரம் ரூபாய் அப்போது உயர்த்தப்பட்டது. தற்போது உயர்த்தப்பட்ட அந்த விலையை யமஹா குறைத்திருக்கின்றது. இந்த நடவடிக்கை யமஹா எம்டி-15 பைக் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேசமயம், மற்ற முக்கிய தயாரிப்புகளின் விலையை அது உயர்த்தியிருப்பது இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha reduced mt15 price at the same time bike maker increased r15 fz fi fascino price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X