2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

2021 யமஹா ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எம் மோட்டார்சைக்கிள்களுக்கான சேவை & உத்தரவாத காலம் உள்ளிட்டவை சற்று வித்தியாசப்படுகின்றன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2021 யமஹா ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எம் பைக்குகளுக்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

இதனால் பைக்குகளின் டெலிவிரி பணிகளும் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. இதற்கிடையில் தான் தற்போது இந்த பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ள சேவை இடைவெளி மற்றும் உத்தரவாத தொகுப்பு உள்ளிட்டவை குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

ரூ.1.67 லட்சம் மற்றும் ரூ.1.77 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் புதியதாக கொண்டுவரபட்டுள்ளன. இருப்பினும் சில வாடிக்கையாளர்கள் மற்ற ஆர்15 உரிமையாளர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு தெரிவதற்காக சில ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டன.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

புதிய ஆர்15 வி4 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளை பற்றி ஏற்கனவே நமது செய்தி தளத்தில் பார்த்துவிட்டோம். இந்த ஆக்ஸஸரீகள் யமஹாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களிடம் கிடைக்கும். நிலையான உத்தரவாதத்தை பொறுத்தவரையில், 2021 யமஹா ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எம் பைக்குகளுக்கு 24 மாதங்கள்/ 30,000 கிமீ (எது முதலில் வருகிறதோ) உத்தரவாதத்தை இந்த ஜப்பானிய நிறுவனம் அறிவித்துள்ளது.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

இவற்றிற்கான சேவை தொகுப்பானது 4 இலவச சேவைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதல் சேவையை 30 நாட்கள்/ 1000 கிமீ-க்கு பிறகு பெறலாம். இதற்கு சேவை மீட்பு தொகையாக ரூ.105 செலுத்தினாலே போதும். இதற்கடுத்த இலவச சேவைகளை 120 நாட்களுக்கு பிறகு பெற முடியும். ஆனால் இதில் முதல் நான்கு சேவை மட்டுமே இலவசமானது. மொத்தம் உள்ள 6 பராமரிப்பு சேவைகளில் மீதி இரண்டிற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

ஐந்தாவது சேவையை பெற பைக் வாங்கி 510 நாட்களும், ஆறாவது சேவையை பெற 630 நாட்களும் முடிவடைந்திருக்க வேண்டும். இலவச சேவைகளின் போது தான் சேவை மீட்பு தொகையினை ரூ.105-இல் இருந்து ரூ.140 வரையில் செலுத்த வேண்டி இருக்குமே தவிர்த்து, இரு கட்டண சேவைகளின் போது சேவை மீட்பு தொகையினை தனியாக செலுத்த வேண்டியிருக்காது.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

இந்த நிலையான உத்தரவாதத்துடன், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் ஆர்15 பைக் உரிமையாளர்களுக்கு யமஹா வழங்கியுள்ளது. இதன்படி கூடுதலாக 36 மாதங்கள்/ 40,000 கிமீ-க்கு உத்தரவாத காலத்தை விரிவுப்படுத்தி கொள்ள முடியும். இதில் கூடுதல் 90 நாட்களுக்கான உத்தரவாதத்தை ரூ.777இல் பெறலாம்.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

91 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரையில் பைக்கிற்கான உத்தரவாத காலத்தை அதிகரித்து கொள்ள ரூ.999-மும், 181- 730 நாட்களுக்கு ரூ.1,111-மும் செலுத்த வேண்டுமாம். புதிய யமஹா ஆர்15 & ஆர்15 எம் மோட்டார்சைக்கிள்கள் இரண்டிலும் ஒரே மாதிரியான 155சிசி, 4-ஸ்ட்ரோக், லிக்யுடு-கூல்டு, எஸ்ஒஎச்சி, 4-வால்வு என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.4 எச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 14.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவற்றுடன் ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச், இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவையும் இந்த ஆர்15 பைக்குகளில் வழங்கப்படுகின்றன.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

புதிய தலைமுறை ஆர்15 வி4 பைக்கில் குறிப்பிடத்தக்க காஸ்மெட்டிக் மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்த்தோமேயானால், இதன் தோற்றம் இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலகளவில் வெளியிடப்பட்ட ஒய்.இசட்.எஃப்-ஆர்7 மோட்டார்சைக்கிளை நமக்கு நினைவூட்டுகிறது. புதிய ஆர்15 எம் மாடலில் மான்ஸ்டர் எடிசன் ஒன்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் விலை எல்லா ஆர்15 பைக்குகளையும் காட்டிலும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இத்தனை இலவச சேவைகளா!! உத்தரவாத காலமும் அறிவிப்பு

இந்திய சந்தையில் இந்த யமஹா பைக் மாடலுக்கு, கேடிஎம் 125சிசி & 200சிசி ஆர்சி பைக்குகள் தான் முக்கியமான போட்டி மாடல்களாக விளங்குகின்றன. இதில் ஆர்சி125 பைக் விரைவில் நம் நாட்டில் மலிவான ஸ்போர்ட்ஸ் பைக்காக களம் காணவுள்ளது. ஆர்சி125 பைக்கை மட்டுமல்லாமல், கேடிஎம் நிறுவனம் அதன் 200சிசி & 390சிசி ஆர்சி பைக்குகளையும் அப்டேட் செய்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha has released a list of New R15 V4 & R15 M bikes's service schedule and warranty pack.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X