புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

புதிய யமஹா ஆர்15 எம் மோட்டார்சைக்கிளின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

இந்திய இளைஞர்களின் கனவு மோட்டார்சைக்கிளுள் ஒன்றாக விளங்கும் யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் டாப் வேரியண்ட்டாக ஆர்15எம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், இந்த புதிய யமஹா பைக் சில டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளதாகவும் சமீபத்தில் நமது செய்திதளத்தில் ஆதார படங்களுடன் தெரிவித்திருந்தோம்.

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

இந்த நிலையில் தற்போது, புதிய யமஹா ஆர்15 எம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமான ஆர்15 மாடலுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய டாப்-வேரியண்ட் கூடுதல் ஸ்போர்டியரான தோற்றத்தையும், புதிய பிரீமியம் பாகங்களையும் பெற்று வந்துள்ளது.

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

முன்னதாக டீலர்ஷிப் மையத்தின் வளாகத்திற்குள் இருந்து கிடைத்திருந்த ஸ்பை படங்களில் ரேசிங் நீலம் மற்றும் சில்வர் கலந்த நிறங்களில் புதிய ஆர்15 எம் பைக் காட்சியளித்திருந்தது. அதுவே இதன் மற்றொரு மாதிரி, மான்ஸ்டர் எனர்ஜி கிராஃபிக்ஸ் உடன் மோட்டோஜிபி உடையினை உடுத்தி இருந்தது,

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

Image Source: RevNitro

இதனால் எந்தெந்த பெயிண்ட் தேர்வுகளில் இந்த புதிய பைக்கை யமஹா நிறுவனம் களமிறக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைய ஆர்15 மோட்டார்சைக்கிள் ரேசிங் நீலம், தண்டர் க்ரே, டார்க் நைட் மற்றும் மெட்டாலிக் சிவப்பு என்ற நான்கு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

இதில் மெட்டாலிக் சிவப்பு நிற பெயிண்ட் தேர்வு இந்த 2021ஆம் வருடத்தில் தான் ஆர்15 பைக்கிற்கு வழங்கப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். சரி மீண்டும் ஆர்15 எம் மோட்டார்சைக்கிளிற்கு செல்வோம், இதன் சில டிசைன் பாகங்கள் யமஹா ஆர்1 எம் பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது போன்று படங்களில் தெரிகிறது.

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

அதிலும் இதன் முன்பக்கம், பிரபலமான யமஹா ஆர்7 மோட்டார்சைக்கிளை தான் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. ஸ்டாண்டர்ட் ஆர்15 பைக்கை போல் அல்லாமல், புதிய ஆர்15 எம் பைக்கில் முன்பக்கத்தில், இரு முனைகளில் எல்இடி டிஆர்எல்களுடன் சிங்கிள் பிரோஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

அதேபோல் முன்பக்கத்தில் எதிர்காற்று தடுப்பு கண்ணாடி வழக்கத்தை காட்டிலும் இந்த புதிய வேரியண்ட்டில் சற்று பெரியதாக உள்ளது. பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்களின் வடிவம் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான ஆர்15-இல் இருந்து வேறுப்படுவதற்காக பின் இருக்கை பயணி கால் வைக்கும் பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

எக்ஸாஸ்ட் குழாயின் மீது மெட்டாலிக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க சஸ்பென்ஷன் பைக்கில் இருந்து தனித்து தெரிவதற்காக கோல்டன் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஆர்15 பைக்கின் இந்த புதிய டாப் வேரியண்ட் ப்ளூடூத் இணைப்பு வசதியையும் பெற்றுவரும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

மற்றப்படி என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. இதனால் ஆர்15 மோட்டார்சைக்கிளின் வழக்கமான 155சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் புதிய ஆர்15 எம் பைக்கிலும் வழங்கப்படும். விவிஏ தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 18.6 பிஎஸ் மற்றும் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

ஆனால் ஆர்15 எம் பைக்கில் சற்று குறைவாக 18.35 பிஎஸ் பவரையே அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் வகையில் இந்த என்ஜின் வழங்கப்படும் என இதுவரையில் கசிந்து விபரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த புதிய வேரியண்ட்டிலும் டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் வழங்கப்படும்.

புதிய யமஹா ஆர்15 எம் பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும்? இதுதான் அறிமுக தேதியா?

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளுக்கு மாற்றாக யுஎஸ்டி ஃபோர்க்குகளை இந்த புதிய வேரியண்ட் பெற்றுள்ளது. தற்போதைய யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 வி3.0 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.56 லட்சமாக உள்ளது. புதிய ஆர்15 எம் வேரியண்ட்டின் விலையினை இதனை காட்டிலும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரையில் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha R15M To Officially Launch In India On September 21.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X