கவர்ச்சியான தோற்றத்தில் மாடிஃபை யமஹா ஆர்எக்ஸ்135 பைக்!! விற்பனையில் உள்ளது...

ஆர்எக்ஸ் 100 பைக்கை போன்று யமஹாவின் தரமான தயாரிப்புகளுள் ஆர்எக்ஸ்135 பைக்கும் ஒன்று. 1990களில் பலரது முதன்மையான தேர்வுகளுள் ஒன்றாக விளங்கிய இந்த யமஹா பைக்கின் தயாரிப்பு 2009ல் மாசு உமிழ்வு விதிமுறைகளின் காரணமாக நிறுத்தப்பட்டது.

கவர்ச்சியான தோற்றத்தில் மாடிஃபை யமஹா ஆர்எக்ஸ்135 பைக்!! விற்பனையில் உள்ளது...

இருப்பினும் ஆர்எக்ஸ்100-ஐ போல் யமஹா பைக் ரசிகர்களின் மனதில் நீக்க இடம் பிடித்திருக்கும் ஆர்எக்ஸ்135 பைக்குகளை இப்போதும் அவ்வப்போது சாலைகளில் பார்க்க முடிகிறது.

கவர்ச்சியான தோற்றத்தில் மாடிஃபை யமஹா ஆர்எக்ஸ்135 பைக்!! விற்பனையில் உள்ளது...

இதில் சில ஆர்எக்ஸ்135 பைக்குகள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் தற்போதைய மாடர்ன் பாகங்களுடன் மாடிஃபை செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு மாடிஃபை செய்யப்பட்ட யமஹா ஆர்எக்ஸ்135 பைக்கை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

கவர்ச்சியான தோற்றத்தில் மாடிஃபை யமஹா ஆர்எக்ஸ்135 பைக்!! விற்பனையில் உள்ளது...

அகோஸி கஸ்டம்ஸ், குஜராத் மாநிலம் சூரத் நகரில் வாகனங்களை மாடிஃபை செய்வதில் பிரபலமான கஸ்டமைஸ்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் தான் 2002 நவம்பரில் பதிவு செய்யப்பட்ட ஆர்எக்ஸ் 135 பைக் ஒன்றை கவர்ச்சியான தோற்றத்திற்கு மாடிஃபை செய்துள்ளது.

கவர்ச்சியான தோற்றத்தில் மாடிஃபை யமஹா ஆர்எக்ஸ்135 பைக்!! விற்பனையில் உள்ளது...

நார்டோ க்ரே நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள இந்த மாடிஃபை பைக்கில் ‘ஆர்எக்ஸ்135' லோகோ மட்டும் இல்லையென்றால், இதன் அடிப்படை ஆர்எக்ஸ் 135 பைக் என்பதை பலரால் நம்பவே முடியாது.

ஏனெனில் அந்த அளவிற்கு பைக் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க், மைய பாடி பேனல்கள் மற்றும் என்ஜின் அமைப்பு மட்டுமே அப்படியே தொடரப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்கின் கீழ்பகுதியில் கருப்பு நிறத்தில் லைன் ஒன்று எடுப்பாக செல்கிறது.

கவர்ச்சியான தோற்றத்தில் மாடிஃபை யமஹா ஆர்எக்ஸ்135 பைக்!! விற்பனையில் உள்ளது...

அளவு குறைக்கப்பட்ட ஃபெண்டரை முன்பக்கத்தில் கொண்டிருக்கும் இந்த மாடிஃபை பைக்கில் டிஆர்எல் உடன் எல்இடி ஹெட்லைட், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள், ஒரே துண்டாக இருக்கை, கஸ்டம் எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் பெல்லி பேன் உள்ளிட்டவை புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

கவர்ச்சியான தோற்றத்தில் மாடிஃபை யமஹா ஆர்எக்ஸ்135 பைக்!! விற்பனையில் உள்ளது...

இவற்றுடன் சியட்டின் இரு விதமான பயன்பாட்டிற்கு ஏற்ற டயர்களை பெற்றிருக்கும் இந்த பைக் முன்பக்கத்தில் டிஸ்க் ப்ரேக்கை கொண்டுள்ளது. என்ஜினை பாதுகாக்கும் விதத்தில் அதற்கு கீழே பாதுகாப்பான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கஸ்டமைஸ்ட் பைக்கின் பெரும்பான்மையான பாகங்கள் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. பெட்ரோல் டேங்க், முன்பக்க ஃபெண்டர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே பளிச்சிடும் நிறங்களை பார்க்க முடிகிறது.

கவர்ச்சியான தோற்றத்தில் மாடிஃபை யமஹா ஆர்எக்ஸ்135 பைக்!! விற்பனையில் உள்ளது...

மாடிஃபை பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த யமஹா ஆர்எக்ஸ் 135 பைக்கில் 132சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 11 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 10 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சியான தோற்றத்தில் மாடிஃபை யமஹா ஆர்எக்ஸ்135 பைக்!! விற்பனையில் உள்ளது...

அகோஸி கஸ்டம்ஸ் நிறுவனம் இந்த மாடிஃபை யமஹா ஆர்எக்ஸ் 135 பைக்கை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் தோற்றம் உங்களுக்கு பிடித்திருந்தால் நேரடியாக இந்த சூரத் கஸ்டமைஸ்ட் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.

Most Read Articles

English summary
Yamaha RX 135 Restored Into A Handsome Cafe Racer By Agozee Kustoms.
Story first published: Wednesday, April 28, 2021, 23:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X