யமஹாவின் தயாரிப்பு இது!! ‘ட்ரைடவுன்’ 3-சக்கர எலக்ட்ரிக் பைக் - எதிர்காலத்திற்கான வாகனம்!

ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் ட்ரைடவுன் என்கிற பெயரில் புதிய 3-சக்கர எலக்ட்ரிக் பைக்கை உலகளவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய யமஹா எலக்ட்ரிக் வாகனத்தை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹாவின் தயாரிப்பு இது!! ‘ட்ரைடவுன்’ 3-சக்கர எலக்ட்ரிக் பைக் - எதிர்காலத்திற்கான வாகனம்!

எதிர்காலத்தில் சாலையில் இத்தகைய வாகனங்கள் தான் உலாவரும் என்று சில வாகனங்களை தான் குறிப்பிட்டு வருகிறோம். அத்தகைய வாகனங்களுள் ஒன்றாகவே யமஹாவின் புதிய ட்ரைடவுன் எலக்ட்ரிக் வாகனம் பார்க்கப்படுகிறது. 2022ஐ தொட்டுவிட்டோம். தற்போதைய காலக்கட்டத்தில் இத்தகைய வாகனங்களின் வருகை பெரியதாக ஆச்சிரியப்படுத்துவதில்லை.

யமஹாவின் தயாரிப்பு இது!! ‘ட்ரைடவுன்’ 3-சக்கர எலக்ட்ரிக் பைக் - எதிர்காலத்திற்கான வாகனம்!

ஆட்டோமொபைல் துறைக்கு 3-சக்கர வாகனங்கள் ஒன்றும் புதியது கிடையாது. எலக்ட்ரிக்கில் கூட 3-சக்கர வாகனங்கள் அறிமுகமாக துவங்கிவிட்டன. இருப்பினும் ட்ரைடவுனின் சிறப்பு என்னவென்றால், இதன் முன்பக்கத்தில் அளவில் சிறியதாக இரு சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் பின்பக்கத்தில் ஒரே ஒரு சக்கரம் மட்டுமே உள்ளது.

யமஹாவின் தயாரிப்பு இது!! ‘ட்ரைடவுன்’ 3-சக்கர எலக்ட்ரிக் பைக் - எதிர்காலத்திற்கான வாகனம்!

ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டிருப்பினும், இந்த யமஹா எலக்ட்ரிக் வாகனம் ஓட்டுனரின் சமநிலையை பொறுத்தது ஆகும். அதாவது வலதுப்பக்கமாக சாய்ந்தால் வாகனமும் வலதுப்பக்கம் திரும்பும், இடதுப்பக்கம் சாய்ந்தால் இடதுப்பக்கம் திரும்பும். ஸ்கேட்டிங் போட் போன்றதுதான் இதன் செயல்பாடுகளும். ஏனெனில் ட்ரைடவுன் வாகனத்தையும் நின்றப்படியே இயக்க வேண்டும்.

யமஹாவின் தயாரிப்பு இது!! ‘ட்ரைடவுன்’ 3-சக்கர எலக்ட்ரிக் பைக் - எதிர்காலத்திற்கான வாகனம்!

இதனை வெறும் 2 மணிநேரங்கள் சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 30கிமீ தூரத்திற்கு செல்லலாம் என்கிறது யமஹா. ட்ரைடவுன் 3-சக்கர எலக்ட்ரிக் வாகனம் குறித்து யமஹா நிறுவன முதன்மை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "நல்லது, ஒரு ரைடு சென்று பாருங்கள். இதனை படுக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. எலக்ட்ரானிக் கண்ட்ரோல் போன்ற செயல்பாடுகள் எதுவும் இல்லை.

யமஹாவின் தயாரிப்பு இது!! ‘ட்ரைடவுன்’ 3-சக்கர எலக்ட்ரிக் பைக் - எதிர்காலத்திற்கான வாகனம்!

பயணம் செய்பவரின் சமநிலை உணர்வுடன் இயங்கும் ட்ரைடவுனை இப்படியே எப்போதும் நிறுத்தலாம். இயக்கத்தில் இருந்து நிறுத்தும்போது தரையில் கால் வைக்க வேண்டியதில்லை. இது இந்த வாகனத்தின் பண்புகளில் ஒன்றாகும்" என்றார். மென்மையான மற்றும் நிலையான செயல்பாட்டிற்காக LMW (Lean Multi Wheel) தொழிற்நுட்பத்தை ட்ரைடவுனில் யமஹா பொருத்தியுள்ளது.

யமஹாவின் தயாரிப்பு இது!! ‘ட்ரைடவுன்’ 3-சக்கர எலக்ட்ரிக் பைக் - எதிர்காலத்திற்கான வாகனம்!

இந்த தொழிற்நுட்பமானது மோட்டார்சைக்கிள்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்கால யமஹா எலக்ட்ரிக் பைக்குகளில் இந்த தொழிற்நுட்பத்தை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. ட்ரைடவுன் 3-சக்கர எலக்ட்ரிக் வாகனத்தை யமஹா நிறுவனம் "லாஸ்ட் ஒன்-மைல் மொபைலிட்டி" என வரையறுக்கிறது. இது ஓட்டுனரின் இரு கால்களின் உதவியுடன் இயக்கப்படுவதாக யமஹா தெரிவிக்கிறது.

யமஹாவின் தயாரிப்பு இது!! ‘ட்ரைடவுன்’ 3-சக்கர எலக்ட்ரிக் பைக் - எதிர்காலத்திற்கான வாகனம்!

ட்ரைடவுன் நிச்சயமாக நகர்புறங்களில் மகிழ்ச்சியான, குறுகிய பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். ஏனெனில் இந்த எலக்ட்ரிக் 3-சக்கர வாகனத்தை எவர் ஒருவரும் எளிமையாக ஓட்ட கற்றுக்கொள்ளலாம். "எளிமையானதாக இருக்க வேண்டும், அதேநேரம் மக்களுக்கு பழக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக பைசைக்கிளின் ஹேண்டில்பார் மற்றும் பிரேக் மெக்கானிசம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

யமஹாவின் தயாரிப்பு இது!! ‘ட்ரைடவுன்’ 3-சக்கர எலக்ட்ரிக் பைக் - எதிர்காலத்திற்கான வாகனம்!

இதனை நூற்றுக்கும் அதிகமானோர் மூலம் பரிசோதித்து பார்த்துள்ளோம். இதில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தினர் வெறும் 5- 10 நிமிட பயிற்சியில் சிறப்பாக ஓட்டி பழகிவிட்டனர். எங்களது நோக்கமே ட்ரைடவுனை வாடிக்கையாளர்கள் எளிமையாக ஓட்ட வேண்டும் என்பதுதான். இந்த குறிக்கோளினை நாங்கள் அடைந்துவிட்டோம் என்றுதான் நினைக்கிறேன்" என இந்த எலக்ட்ரிக் வாகனத்தை பற்றி மேலும் பேசிய அந்த யமஹா நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

யமஹாவின் தயாரிப்பு இது!! ‘ட்ரைடவுன்’ 3-சக்கர எலக்ட்ரிக் பைக் - எதிர்காலத்திற்கான வாகனம்!

இதனால் வழக்கமான சைக்கிளிங் ரைடிங் அனுபவத்தை யமஹா ட்ரைடவுனில் எதிர்பார்க்கலாம். மோட்டார்சைக்கிள்கள் சற்று கடினமான ரைடிங் நிலைப்பாட்டை தருகின்றன என்று ஸ்கூட்டர்கள் உருவாக்கப்பட்டன. இப்போது ஸ்கூட்டரில் உள்ள சில குறைப்பாடுகளை களையெடுக்கும் விதமாக இத்தகைய 3-சக்கர வாகனங்களை வடிவமைக்க யமஹா துவங்கியுள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha tritown electric scooter unveiled range charging features details
Story first published: Friday, December 31, 2021, 23:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X