ப்ளூடூத், ஹைபிரிட் வசதிகளுடன் யமஹா ஃபஸ்ஸினோ 125... ஹோண்டா ஆக்டிவா 125க்கு ஆப்பு நிச்சயம் போலிருக்கே...

யமஹா மோட்டார் இந்தியா அப்டேட் செய்யப்பட்ட ஃபஸ்ஸினோ 125 பைக்கை இன்று இந்தியாவில் வெளியீடு செய்தது. இந்த ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

ப்ளூடூத், ஹைபிரிட் வசதிகளுடன் யமஹா ஃபஸ்ஸினோ 125... ஹோண்டா ஆக்டிவா 125க்கு ஆப்பு நிச்சயம்...

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் இன்று (ஜூன் 18) எஃப்இசட் எக்ஸ் எனும் புதுமுக இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆன்லைன் தளம் வாயிலாக இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

ப்ளூடூத், ஹைபிரிட் வசதிகளுடன் யமஹா ஃபஸ்ஸினோ 125... ஹோண்டா ஆக்டிவா 125க்கு ஆப்பு நிச்சயம்...

இதன் அறிமுகத்தின்போதே யமஹா, அதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரின் வெளியீட்டையும் அரங்கேற்றியது. அப்டேட்டின் அடிப்படையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ப்ளூடூத், ஹைபிரிட் வசதிகளுடன் யமஹா ஃபஸ்ஸினோ 125... ஹோண்டா ஆக்டிவா 125க்கு ஆப்பு நிச்சயம்...

ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கும் வகையில் ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரில் அப்டேட் வழங்கப்பட்டு, வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய எல்இடி முகப்பு பகுதி மின் விளக்கு, வால் பகுதி மின் விளக்கு ஆகியவை ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டிரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ப்ளூடூத், ஹைபிரிட் வசதிகளுடன் யமஹா ஃபஸ்ஸினோ 125... ஹோண்டா ஆக்டிவா 125க்கு ஆப்பு நிச்சயம்...

இத்துடன், ப்ளூடூத் வசதியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் புதிய ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வசதியைக் கொண்ட செல்போனுடன் ஸ்கூட்டரை இணைக்க முடியும். அவ்வாறு இணைக்கும்பட்சத்தில் பல்வேறு தகவல்களை நம்மால் செல்போனின் திரை வாயிலாகவே பெற முடியும்.

ப்ளூடூத், ஹைபிரிட் வசதிகளுடன் யமஹா ஃபஸ்ஸினோ 125... ஹோண்டா ஆக்டிவா 125க்கு ஆப்பு நிச்சயம்...

குறிப்பாக, ஸ்கூட்டரின் இருப்பிடம், பெட்ரோல் அளவு, மைலேஜ் விபரம் போன்ற பல்வேறு முக்கிய தகவல்களை அறிய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றையும் நம்மால் ஸ்கூட்டரின் திரையிலேயே பெற்றுக் கொள்ளவும் முடியும்.

ப்ளூடூத், ஹைபிரிட் வசதிகளுடன் யமஹா ஃபஸ்ஸினோ 125... ஹோண்டா ஆக்டிவா 125க்கு ஆப்பு நிச்சயம்...

இந்த தொழில்நுட்ப வசதிகளின் வரிசையில் இன்னுமொரு சிறப்பு மிக்க வசதியும் ஃபஸ்ஸினோவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, புதிதாக ஹைபிரிட் தொழில்நுட்பம் ஃபஸ்ஸினோவில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறப்பு வசதிக் கொண்ட எஞ்ஜின் அதிகபட்சமாக 8.9 பிஎச்பி மற்றும் 10.3 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

ப்ளூடூத், ஹைபிரிட் வசதிகளுடன் யமஹா ஃபஸ்ஸினோ 125... ஹோண்டா ஆக்டிவா 125க்கு ஆப்பு நிச்சயம்...

தற்போது விற்பனையில் இருக்கும் ஃபஸ்ஸினோ 8.4 பிஎச்பி மற்றும் 9.7 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலே பார்த்த அம்சங்களே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் யமஹா ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன.

ப்ளூடூத், ஹைபிரிட் வசதிகளுடன் யமஹா ஃபஸ்ஸினோ 125... ஹோண்டா ஆக்டிவா 125க்கு ஆப்பு நிச்சயம்...

வேறு எந்த மாற்றங்களும் ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரில் மேற்கொள்ளப்படவில்லை. புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனின் விலை குறித்த தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. மிக விரைவில் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha unveiled Updated Fascino 125 Scooter In India. Read In Tamil.
Story first published: Friday, June 18, 2021, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X