மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது யெஸ்டி பைக்குகள்... டீசர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி!

பழம் பெருமை வாய்ந்த யெஸ்டி பைக்குகள் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக புதிய டீசரும் வெளியிடப்பட்டுள்ளதால், இந்த பிராண்டு பைக்குகளை உயிர் மூச்சாக நேசிக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது யெஸ்டி பைக்குகள்... டீசர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி!

பழமையான யெஸ்டி பைக்குகளுக்கு இந்தியாவில் பெரும் ரசிக பட்டாளம் இருக்கிறது. விற்பனை நிறுத்தப்பட்டாலும், இந்த பைக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பதை காண முடியும். இந்த நிலையில், ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ ஆகிய பைக் பிராண்டுகளை இந்தியாவில் களமிறக்க மஹிந்திரா நிறுவனம் முயற்சி மேற்கொண்டது.

மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது யெஸ்டி பைக்குகள்... டீசர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி!

கிளாசிக் லெஜென்ட்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் கீழ் இந்த பைக்குகளின் இந்திய வர்த்தகத்தை செய்யவும் முடிவு செய்தது. அதன்படி, முதலாவதாக ஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஜாவா பைக்குகளுக்கு மிக்பபெரிய வரவேற்பு கிடைத்தது. காத்திருப்பு காலமும் அதிகமாக இருந்து வருகிறது.

மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது யெஸ்டி பைக்குகள்... டீசர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி!

இதைத்தொடர்ந்து, தற்போது யெஸ்டி பைக்குகளையும் இந்தியாவில் களமிறக்க கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் முயற்சிகளை செய்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் யெஸ்டி ரோட்கிங் பைக் மாடலுக்கு இந்தியாவில் டிரேட்மார்க் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த பைக்கை வர்த்தக ரீதியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.

மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது யெஸ்டி பைக்குகள்... டீசர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி!

யெஸ்டி பைக்குகள் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக சூசகமான வார்த்தைகளுடன் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம். அதேநேரத்தில், யெஸ்டி பைக்குகள் விற்பனை தனிப்பிரிவாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, ஜாவா பிராண்டுடன் சேர்ந்து வர்த்தகம் இருக்காது.

மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது யெஸ்டி பைக்குகள்... டீசர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி!

யெஸ்டி பைக் பிராண்டில் முதல் பைக் மாடல் வரும் ஆண்டு துவக்கத்தில் அல்லது முதல் அரையாண்டு காலத்திற்குள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பைக் மாடல் அட்வென்ச்சர் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், உறுதியானத் தகவல் இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை.

மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது யெஸ்டி பைக்குகள்... டீசர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி!

ஜாவா பைக்குகளில் இருக்கும் எஞ்சின் உள்ளிட்ட உள்ளிட்ட முக்கிய பாகங்களை யெஸ்டி பைக்குகள் பெற்றிருக்கும். ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக் மார்க்கெட்டை குறி வைத்து யெஸ்டி பைக்குகள் களமிறக்கப்படும். மீண்டும் யெஸ்டி பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியில் இருக்கிறது.

மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகிறது யெஸ்டி பைக்குகள்... டீசர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி!

ஜாவா பைக்குகளுக்கு கிடைத்த வரவேற்பை போலவே, யெஸ்டி பைக்குகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் வரும்போது ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகளுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்பதுடன் வர்த்தகத்தில் நெருக்கடியை தரும் என்று நம்பலாம்.

Most Read Articles

மேலும்... #யெஸ்டி #yezdi
English summary
Yezdi Brand Bikes To Be Launched in India Soon; Teaser Released.
Story first published: Thursday, November 11, 2021, 10:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X