மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு

யெஸ்டி (Yezdi) நிறுவனம் அதன் ரோட்கிங் (Roadking) அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றது. இது குறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யெஸ்டி (Yezdi), அதன் மறு வருகையை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இதுகுறித்த தகவல் வெளியாகிய நாள் முதலில் இருந்து நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் பிரியர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் யெஸ்டியின் புதிய மோட்டார்சைக்கிளின் வருகையை நோக்கி காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

இத்தகையோருக்கு விருந்தளிக்கும் வகையில் தற்போது யெஸ்டி நிறுவனம் அதன் புதுமுக மோட்டார்சைக்கிளின் அறிமுகம் தேதி பற்றிய விபரத்தை வெளியிட்டு இருக்கின்றது. நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள் வரும் 2022 ஜனவரி 13-ம் தேதி அன்று அறிமுகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

இதன் வாயிலாக நிறுவனம் அதன் முதல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் தயார் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. யெஸ்டி நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்களுக்கு என உலகளவில் தனி ரசிக பட்டாளமே நிலவி வருகின்றது. இவர்கள் மத்தியில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

யெஸ்டி நிறுவனம் முதலில் ரோட்கிங்(Roadking) எனப்படும் அட்வென்சர் ரக இருசக்கர வாகனத்தையே வெளியீடு செய்ய இருக்கின்றது. இதனையே உலகளவில் முதலில் விற்பனைக்கும் கொண்டு வர இருக்கின்றது. இந்த இருசக்கர வாகனம் மறைப்புகளில் இன்றி அண்மையில் காட்சியளித்தது குறிப்பிடத்தகுந்தது. இருசக்கர வாகனத்தை விளம்பரம் செய்வதற்காக அதனை வீடியோக் காட்சிப்படுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே அவை. இதன் வாயிலாக மோட்டார்சைக்கிளின் முழு உருவமும் காட்சிக்குள்ளாகியது. இந்த படங்கள் ரோட்கிங் மோட்டார்சைக்கிள், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியளிக்கும் வகையில் உருவாகியிருப்பதை உறுதிப்படுத்தியது.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

கிட்ட-தட்ட இரண்டு மோட்டார்சைக்கிளும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருப்பதையும் அது உறுதிப்படுத்தியது. ஆனால், ஹிமாலயன் பைக்கில் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக யெஸ்டி நிறுவனம் சில தனித்துவமான அம்சங்களைக ரோட்கிங் பைக்கில் சேர்த்திருக்கின்றது. அதையும் ஸ்பை படங்களைே நமக்கு தெரியப்படுத்தின.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

அந்தவகையில், பெட்ரோல் டேங்கின் வலது மற்றும் இடது பக்கத்தில் கூடுதல் எரிபொருளை எடுத்துச் செல்லும் வகையில் கேன் (இவற்றை தாங்கும் வகையில் கேரியர் அமைப்பு), உயரமான வின்ட் ஸ்கிரீன், பின்பக்கத்தில் ஸ்டோரேஜ் பெட்டி, மோலோங்கி எழுப்பப்பட்ட தோற்றம் கொண்ட சைலென்சர் உள்ளிட்டவை இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

மேலும், க்னக்கிள் குவார்டு (கைகளை பாதுகாக்கும் அம்சம்), டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்போக் வீல்கள், ட்யூப் பொருத்தப்பட்ட டயர்கள் (ஆன்-ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு உகந்தது), ட்யூவல் சேனல் ஏபிஎஸ் தொழில்நுட்பம் மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவையும் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

இந்த அம்சங்கள் அனைத்தும் ரோட்கிங் அட்வென்சர் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. யெஸ்டி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய சாலைகளில் வைத்து யெஸ்டி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் பலபரீட்சைக்கு உடுபடுத்தப்பட்டு வருகின்றன.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

யெஸ்டி நிறுவனம் ரோட்கிங் மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி விரைவில் ஸ்கிராம்ப்ளர் எனும் பெயரிலும் ஓர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் கிளாசிக் லெஜண்ட்ஸ். இந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் அங்கமாக யெஸ்டி இருக்கின்றது.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை மட்டுமின்றி பிஎஸ்ஏ பிராண்ட் மோட்டார்சைக்கிள்களையும் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கான பணியில் நிறுவனம் ஏற்கனவே களமிறங்கிவட்டது. இதன் அடிப்படையில் நிறுவனம் ஏற்கனவே கோல்ட்ஸ்டார் 650 எனும் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துவிட்டது.

மீண்டும் பிறக்க உள்ள யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள்... முதல் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 இரட்டையர்களான இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 ஆகிய மோட்டார்சைக்கிள்களின் இடங்களை குறி வைத்து கோல்டஸ்டார் 650 உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் வெளியீடு நடப்பாண்டு டிசம்பர் 3ம் தேதி அன்றே அரங்கேறியது. மிக விரைவில் இப்பைக்கும் உலகளவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Yezdi official unveiled roadking adv reveal date
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X