க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட உள்ள யெஸ்டி க்ரூஸர் பைக்கின் டீசர் படம் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

பழமையான ஜாவா பிராண்டை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டில் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவந்தது. இதன்படி, மாடர்ன் தோற்றத்திலான ஜாவா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்க, பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் பிராண்டிற்கும் புத்துயிர் கொடுக்க இந்த நிறுவனம் திட்டமிட்டது.

க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

இதன் விளைவாக யுனிடெட் கிங்டெமில் இந்த டிசம்பர் மாத துவக்கத்தில் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் வெளியீடு செய்யப்பட்டது. மஹிந்திரா க்ரூப்பின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜண்ட்ஸ் இவற்றை தொடர்ந்து மற்றொரு கிளாசிக் மோட்டார்சைக்கிள் பிராண்டான யெஸ்டியையும் மீண்டும் கொண்டுவர தயாராகி வருவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

சமூக வலைத்தளங்களில் யெஸ்டி பிராண்டிற்கான அதிகாரப்பூர்வ பக்கங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் மூலமாக யெஸ்டி பிராண்ட் மறு உயிர் பெற்று வரவுள்ளது உறுதியாகியது. அதனை தொடர்ந்து விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சில யெஸ்டி பைக்குகளின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகின. இவை யெஸ்டியின் வருகையின் மீண்டும் உறுதிப்படுத்தின.

க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில், ‘மற்றொரு உயிர்தெழுதல் விரைவில்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மறைமுகமாக யெஸ்டி பிராண்டை குறிப்பது போலவே உள்ளது. இந்த படத்தில் பைக்கின் தோற்றம் எண்களினால் நிழல் போன்று கொடுக்கப்பட்டிருந்தாலும், முன் சக்கரம் நன்கு முன்னோக்கி வழங்கப்பட்டுள்ளதால், இது க்ரூஸர் ரக பைக்காக இருக்க வேண்டும்.

க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

2018இல் ஜாவா களமிறக்கப்பட்டதை போன்று, யெஸ்டி பிராண்டும் மூன்று மோட்டார்சைக்கிள்கள் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில் இதுவரையில் வெளியாகியுள்ள ஸ்பை படங்கள், வெவ்வேறான தோற்றம் கொண்ட 3 யெஸ்டி பைக்குகளை காட்டக்கூடியவைகளாக இருந்தன. கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்காக ‘ரோட்கிங்' என்கிற பெயரை பதிவு செய்து கொண்டுள்ளதால், இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றின் பெயர் ரோட்கிங் ஆக இருக்கலாம்.

க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

யெஸ்டி பிராண்டில் இருந்து க்ரூஸர் மோட்டார்சைக்கிள் ஒன்றும் வெளிவரவுள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கப்படும் இந்த க்ரூஸர் பைக்கை குறிப்பதாகவே தற்போதைய இந்த டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது என கருதுகிறோம். சமீப வாரங்களாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுவரும் இந்த க்ரூஸர் பைக், ஜாவா பிராண்டிற்கானது எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

ஆதலால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால்தான் இந்த குழப்பம் தீரும். இதனை காட்டிலும், அட்வென்ச்சர் தோற்றத்திலான யெஸ்டி பைக்கின் ஸ்பை படம் ஒன்று கடந்த மாதத்தில் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை கவர்ந்திருந்தது. இதற்கு விற்பனையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் போட்டியாக விளங்கும் என கூறப்படுகிறது.

க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

அந்த ஸ்பை படத்தின் மூலம் யெஸ்டியின் இந்த அட்வென்ச்சர் பைக் பெரிய அளவில் ஸ்போக்டு சக்கரங்கள், பிளவுப்பட்ட வடிவிலான இருக்கைகள், நீண்ட டிராவல் சஸ்பென்ஷன், நீண்ட முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றை பெற்றுவரவுள்ளதை அறிய முடிந்திருந்தது. மூன்றாவது மாடலாக ஸ்க்ராம்ப்ளர் தோற்றம் கொண்ட பைக் இந்த பிராண்டில் இருந்து களமிறக்கப்பட உள்ளது. இது விற்பனையில் உள்ள ஜாவா 42 2.1, ஹோண்டா சிபி350 ஆர்எஸ் உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக விளங்கவுள்ளது.

க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

அதேபோல், ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஹண்டர் பைக்கும் இதற்கு போட்டியாக இருக்கும். இணையத்தில் வெளியாகி இருந்த ஸ்பை படங்களில், ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கே உண்டான ஓட்டுனர் கால் வைக்கும் பொசிஷன், நன்கு மேலாக ஹேண்டில்பார், மெல்லியதான பெட்ரோல் டேங்க், வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில்லேம்ப், அகலமான இருக்கை உள்ளிட்டவற்றை இந்த புதிய யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் பார்க்க முடிந்தது.

க்ரூஸர் ரக யெஸ்டி பைக்கை முதலாவதாக களமிறக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ்!! மீட்டியோர் 350-க்கு போட்டியாக..!

இவற்றுடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதி, டெலெஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க்குகள், பின்புறத்தில் இரு பக்கங்களிலும் ஷாக் அப்சார்பர்கள் முதலியவற்றையும் அந்த படத்தில் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் கொண்டிருந்தது. இத்துடன் சிங்கிள் & டபுள் சேனல் ஏபிஎஸ் தேர்வும் இந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் வழங்கப்படலாம். இந்த மூன்று யெஸ்டி பைக்குகளிலும் ஒரே மாதிரியாக 334சிசி சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #யெஸ்டி #yezdi
English summary
Yezdi Cruiser (Meteor 350 Rival) Teased In India; Launch Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X