இந்தியர்களின் நீண்டா நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் ராயல் என்ஃபீல்டு... என்ன தெரியுமா?

வாடிக்கையாளர்களின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் முற்று புள்ளி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

வாடிக்கையாளர்களின் நீண்டா நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் ராயல் என்ஃபீல்டு... என்ன தெரியுமா அது?

ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பாக அலாய் வீல்கள் கொண்ட இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. பெருவாரியான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை அலாய் வீலுக்கு உயர்த்திவிட்ட நிலையில், இதுகுறித்த நடவடிக்கையில் ராயல் என்ஃபீல்டு இப்போதே களமிறங்கியிருக்கின்றது.

வாடிக்கையாளர்களின் நீண்டா நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் ராயல் என்ஃபீல்டு... என்ன தெரியுமா அது?

அலாய் வீல் நவீன கால கூறு என்பதால் தன்னுடைய கிளாசிக் ஸ்டைலிலான தயாரிப்புகளின் தோற்றத்தில் மாற்றத்தைக் கொண்டு மேற்கொண்டுவிடுமோ என்ற நோக்கில் ராயல் என்ஃபீல்டு இக்கூறினை வெகு காலமாக பயன்படுத்தாமலே இருந்து வருகின்றது. ஆனால், இந்திய இளைஞர்கள் சிலரின் எதிர்பார்ப்பு இந்த வீலை நோக்கியதாக இருந்து வருகின்றது.

வாடிக்கையாளர்களின் நீண்டா நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் ராயல் என்ஃபீல்டு... என்ன தெரியுமா அது?

இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கிலேயே அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடலான இன்டர்செப்டார் 650 பைக்கில் அலாய் வீலை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனை வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வின் அடிப்படையிலேயே ராயல் என்ஃபீல்டு வழங்க திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் நீண்டா நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் ராயல் என்ஃபீல்டு... என்ன தெரியுமா அது?

எனவே, ஆரம்பத்தில் இன்டர்செப்டார் 650 பைக் ஸ்டாக் வீலான ஸ்போக் கம்பிகள் கொண்ட வீலிலேயே வழங்கப்படும். தேவை என்றால் வாடிக்கையாளரின் விருப்பத்தின் அடிப்படையில் அலாய் வீலைப் பொருத்தி நிறுவனம் வழங்கும்.

வாடிக்கையாளர்களின் நீண்டா நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் ராயல் என்ஃபீல்டு... என்ன தெரியுமா அது?

இந்த புதிய வீலை ஏற்கனவே இன்டர்செப்டார் 650 பைக்கைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டிருக்கின்றது. ரூ. 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்தில் இந்த வீலை ராயல் என்ஃபீல்டு வழங்க இருக்கின்றது. புதிதாக அலாய் வீலுடன் பைக்கை வாங்க விரும்புவோருக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாடிக்கையாளர்களின் நீண்டா நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் ராயல் என்ஃபீல்டு... என்ன தெரியுமா அது?

முதல்கட்டமாக இன்டர்செப்டார் 650 பைக்கிலேயே இந்த தேர்வு வழங்கப்பட இருக்கின்றது. இதன் பின்னரே இதன் இரட்டையரான கான்டினென்டல் ஜிடி 650 பைக்கிலும் அலாய் வீல் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணியிலேயே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

வாடிக்கையாளர்களின் நீண்டா நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் ராயல் என்ஃபீல்டு... என்ன தெரியுமா அது?

எனவே, இன்டர்செப்டார் 650 பைக்கிற்கான அலாய் வீல் தேர்வு மிக மிக விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது. இன்னும் ஓரிரு வாரங்களுக்கு உள்ளாக இந்த தேர்வின் அறிமுகம் அரங்கேறிவிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மறுபக்கம் இந்த வாரத்திற்குள்ளாக இத்தேர்வு வழங்கப்பட்டாலும்கூட ஆச்சரியமளிப்பதற்கு ஒன்றுமில்லை என தெரிவிக்கின்றனர்.

வாடிக்கையாளர்களின் நீண்டா நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் ராயல் என்ஃபீல்டு... என்ன தெரியுமா அது?

ஆகையால், ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகன பிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த அலாய் வீல் தேர்வு கைகளுக்கு எட்டும் தூரத்திலேயே இருக்கின்றன என்பது தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்திருக்கின்றது.

வாடிக்கையாளர்களின் நீண்டா நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் ராயல் என்ஃபீல்டு... என்ன தெரியுமா அது?

அலாய் வீல்கள் சிறந்த திறன்பாட்டை வெளிப்படுத்தக் கூடியவை ஆகும். இதன் மூலம் சிறந்த வேகம், நல்ல கட்டுப்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பெற முடியும். இதுபோன்ற சில காரணங்களாலும், நவீன தோற்றத்தை வாகனத்திற்கு வழங்க முடியும் என்பதற்காகவுமே பெருவாரியான இளைஞர்கள் இந்த தேர்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
You Can Get Royal Enfield Interceptor 650 With Alloy Wheels Soon. Read In Tamil.
Story first published: Wednesday, February 3, 2021, 9:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X