மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்! லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதுமுக பைக்கான மீட்டியோர் 350 பைக்கை இளைஞர் ஒருவர் மைலேஜ் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றார். இதுகுறித்த வெளியாகியிருக்கும் சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்... லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா..?

கடந்த ஆண்டின் இறுதி கட்டத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்த பைக்கே மீட்டியோர் 350. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. தண்டர்பேர்டு பைக்கின் இடத்தை நிரப்பும் வகையில் இப்பைக் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்... லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா..?

இதனை புதிய பிளாட்பாரம், புதிய எஞ்ஜின் என அதிக கவனத்துடன் ராயல் என்பீல்டு உருவாக்கியிருக்கின்றது. இந்த பைக்கையே இளைஞர் ஒருவர் சமீபத்தில் மைலேஜ் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றார். அப்போது கிடைத்த தகவலை சூரஜ் வர்மா எனும் யுட்யூப் சேனல் வாயிலாக வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்... லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா..?

முழுக்க முழக்க பெட்ரோலே இல்லாத நிலையில் இருந்த மீட்டியோர் 350 பைக்கில் துள்ளியமாக ஒரு லிட்டர் பெட்ரோலை இளைஞர் நிரப்பியிருக்கின்றார். இதன் பின்னரே அப்பைக் மைலேஜ் டெஸ்டிற்கான பயணத்தை தொடங்கியது. முன்னதாக ட்ரிப் மீட்டரை மீட்டமைத்த இளைஞர், அதனை சுழியத்திற்கு கொண்டு வந்தார்.

மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்... லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா..?

இதன் பின்னரே பைக் நகரம் மற்றும் நெடுஞ்சாலை என இருவிதமான சாலைகளிலும் இயக்கப்பட்டது. அவ்வாறு இயக்கப்பட்டதில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 36.8 கிமீ தூரம் வரை சென்றிருக்கின்றது. அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 37 கிமீ வரை பைக் மைலேஜ் தந்திருக்கின்றது.

மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்... லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா..?

பைக்கை மைலேஜ் டெஸ்டிற்கு உட்படுத்திய இளைஞர், அப்பைக்கை சற்று அதிக வேகத்தில் இயக்கியதை நம்மால் வீடியோவில் காண முடிகின்றது. மணிக்கு 90 கிமீ முதல் 100 கிமீ வேகம் வரை அவர் அப்பைக்கை ஓட்டியிருந்தார்.

மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்... லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா..?

இந்த வேகத்தில் இல்லாமல் எகனாமி அளவு எனப்படும் குறைந்த எரிபொருள் உறிஞ்சும் வேகத்தில் பைக்கை இயக்கியிருந்தால் தற்போது கிடைத்ததைவிட, கூடுதல் மைலேஜ் கிடைத்திருக்கும் என மீட்டியோரை பயன்படுத்தி வரும் பிற உரிமையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்... லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா..?

மைலேஜ் மட்டுமில்லைங்க ராயல் என்பீல்டின் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் அதிக சிறப்பான தயாரிப்பு என்ற தகவலை அந்த இளைஞர் வீடியோவில் கூறியிருக்கின்றார். அதாவது, ராயல் என்பீல்டின் பிற புகழ்பெற்ற பைக்குகளான கிளாசிக் 350 மற்றும் தண்டர்பேர்டு 350 பைக்குகளைக் காட்டிலும் மிக ஸ்மூத்தான பைக்காக மீட்டியோர் 350 இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

Image Courtesy: Suraj Verma

இந்த பைக் மிக மிக குறைந்தளவு வைப்ரேஷனை வழங்கியதைக் காரணம் காட்டியே இந்த கருத்தை அவர் முன் வைத்துள்ளார். புதிய ராயல் என்பீல்டு 350 பைக்கில் ட்ரிப்பர் நேவிகேஷன், ப்ளூடூத் இணைப்பு, ப்யூவர் கேஜ் என தொழில்நுட்ப வசதிகள் பல வழங்கப்பட்டிருக்கின்றன.

மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்... லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா..?

தற்போது ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக விற்பனையில் இருக்கும் ஜாவா மற்றும் ஹோண்டா ஹைனெஸ் ஆகிய இரண்டுமே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ மட்டுமே மைலேஜ் தருவதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் மீட்டியோர் 350 அதிக மைலேஜை தருவது இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்... லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா..?

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் 349 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இந்த எஞ்ஜின் இயங்குகின்றது. ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் வசதி இந்த கியர்பாக்ஸில் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
மைலேஜ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்... லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தருது தெரியுமா..?
Story first published: Wednesday, June 9, 2021, 10:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X