Just In
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 4 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
- 5 hrs ago
பார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது ட்யூக் இல்ல... மேட்-இன்-சைனா பைக்... ட்வின் ஸ்டைலில் அறிமுகம் செய்த சீன நிறுவனம்... ஷாக்கில் கேடிஎம்!
கேடிஎம் நிறுவனத்தின் 125 ட்யூக் பைக்கைப் பிரதிபலிக்கும் தோற்றத்தில் இரு புதுமுக பைக்குகளை சீன நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

டூப்ளிகேட் பொருட்களைத் தயாரிப்பதில் சீனர்கள் கைதேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதை உறுதிப்படுத்துகின்ற வகையில் அவ்வப்போது ஓர் செய்தி வந்துவிடுகின்றது. அந்தவகையில், தற்போது சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் சகோதர மாடலைப் போன்று இரு புதுமுக பைக்குகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

ஜோன்டெஸ் எனும் சீன நிறுவனமே கேடிஎம் 125 ட்யூக் அடிப்படையிலான இரு புதிய பைக்குகளை அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகும். இந்த பெயரை நாம் பெரியளவில் கேட்டிருக்க மாட்டோம். ஆனால், இந்த நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில் 18 ஆண்டுகளுக்கும் அதிகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

இத்தகைய முன்னணி நிறுவனமே கேடிஎம் 125 ட்யூக் பைக்கை ஒத்துபோகின்ற ஸ்டைலில் இசட்டி125-யு (ZT125-U), இசட்டி125-ஜி1 (ZT125-G1) எனும் இரு புதிய மாடல் பைக்குகளை ஐரோப்பிய இருசக்கர வாகன சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விரு இருசக்கர வாகனங்களும் சில தனித்துவமான ஸ்டைலைப் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

அந்தவகையில், எல்இடி ஹெட்லைட், யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் அலுமினியம் ஸ்விங்கர்ம் உள்ளிட்டவை இதில் தனித்துவமான வடிவமைப்புடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவையே பைக்கிற்கு மிக கவர்ச்சியான தோற்றத்தை வழங்குபவையாக இருக்கின்றன.

இந்த தோற்றும் மேலும் வித்தியாசமானதாக காண்பிக்கும் வகையில் காண்ணாடி கொண்ட ஹேண்டில் பார் (முடிவில் பொருத்தப்பட்டிருக்கின்றது) எஞ்ஜின் குவார்ட் மற்றும் இருவிதமான பயன்பாட்டு திறன் கொண்ட டயர்கள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இப்பைக்கில் 125சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 14.95 பிஎஸ் பவரையும், 13 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன் பாதுகாப்பான பிரேக்கிங் வசதிக்காக 300 எம்எம் டிஸ்க் முன்பக்க வீலிலும், 230 எம்எம் பின் பக்க வீலுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இத்துடன் கூடுதல் சிறப்பு வசதியாக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டிருக்கின்றது. இது மழை மற்றும் பனி காலங்களில்கூட சிறந்த பிரேக்கிங் திறனை வழங்கும். இரு மாடல் பைக்குகளுமே ஐரோப்பிய சந்தைக்காக மட்டுமே களமிறக்கப்பட்டிருக்கின்றது.

ஆகையால், இதனை பிற நாடுகளில் அறிமுகமாவது கடினமே. இப்பைக்கிற்கு 3,040 யூரோக்களை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2.73 லட்சம் ஆகும். இந்தியாவில் இதே திறனில் விற்பனைக்குக் கிடைக்கும் கேடிஎம் 125 ட்யூக் பைக் 1.2 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.