ஜிப் கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரூ.59,000-இல் விற்பனைக்கு அறிமுகம்!! 250 கிலோ வரையில் சுமந்து செல்லுமாம்

ஜிப் (Zypp) சரக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.59,000 என்கிற ஆரம்ப விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொருட்களை வைத்து செல்லும் கமர்ஷியல் பயன்பாட்டிற்கு ஏற்ற இருசக்கர வாகனமாக விளங்கும் இதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜிப் கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரூ.59,000-இல் விற்பனைக்கு அறிமுகம்!! 250 கிலோ வரையில் சுமந்து செல்லுமாம்

ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், நிறுவனத்தின் முதல் பி2பி ஹெவி-ட்யூட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும்.

இந்த இ-ஸ்கூட்டரினை ஒற்றை பேட்டரி உடனோ அல்லது இரு பேட்டரிகளுடனோ வாங்கலாம். இதில் ஒற்றை பேட்டரியுடனான ஜிப் கார்கோ ஸ்கூட்டரின் விலை தான் ரூ.59,000 ஆகும். இரு பேட்டரிகளுடன் ரூ.74,000 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜிப் கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரூ.59,000-இல் விற்பனைக்கு அறிமுகம்!! 250 கிலோ வரையில் சுமந்து செல்லுமாம்

ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 250 கிலோ வரையிலான எடையில் சுமைகளை எடுத்து செல்லலாம். சிங்கிள் சார்ஜில் கிட்டத்தட்ட 120 கிமீ தூரத்திற்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இயங்கும்.

ஜிப் கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரூ.59,000-இல் விற்பனைக்கு அறிமுகம்!! 250 கிலோ வரையில் சுமந்து செல்லுமாம்

வணிகங்களில் சரியான நேரத்தை கடைப்பிடிப்பது தான் முக்கியமாகும். அதனால்தான் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதல் பேட்டரி தேர்வையும், ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை நீக்கும் முறையையும் ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

ஜிப் கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரூ.59,000-இல் விற்பனைக்கு அறிமுகம்!! 250 கிலோ வரையில் சுமந்து செல்லுமாம்

இதனால் வணிகத்திற்கு இந்த கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குகிறீர்கள் என்றால் இரு பேட்டரிகளுடன் வாங்க பாருங்கள். ஏனெனில் அப்போது தான் எல்லா நேரங்களிலும் ஸ்கூட்டர் வெளியே எடுத்து செல்வதற்கு தயாராக இருக்கும்.

இருப்பினும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எத்தகைய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது என்பது இன்னமும் கேள்வியாகவே உள்ளது. நமக்கு தெரிந்தவரையில் 40 ஆம்பியர்.நேரம் ஆற்றல் கொண்ட பேட்டரியாக இருக்கலாம்.

ஜிப் கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரூ.59,000-இல் விற்பனைக்கு அறிமுகம்!! 250 கிலோ வரையில் சுமந்து செல்லுமாம்

கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்த கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வந்ததாக கூறும் ஜிப் எலக்ட்ரிக்கின் சிஇஓ-வான ஆகாஷ் குப்தா, வெவ்வேறு விதமான வணிக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளோம் என்கிறார்.

ஜிப் கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரூ.59,000-இல் விற்பனைக்கு அறிமுகம்!! 250 கிலோ வரையில் சுமந்து செல்லுமாம்

மேலும் விரைவில் இந்த தயாரிப்பு வாகனத்திற்கான மாதத்தவணை திட்டமும் அறிவிக்கப்பட உள்ளதாகவும் ஆகாஷ் குப்தா தெரிவித்துள்ளார். ஜிப் கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தயாரிப்பில் பெரும்பான்மையாக உலோகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக்குகளை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. இந்த இ-ஸ்கூட்டரின் இருக்கை இரண்டாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பின் இருக்கையை தூக்கினால் அதற்கு அடியிலும் பைகள் போன்ற பொருட்களை வைத்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Zypp Cargo electric scooter launched in India at a starting price of Rs 59,000. Zypp Electric has launched the country's first B2B heavy-duty IoT enabled electric scooter named Zypp Cargo. It was launched via a virtual event. The single-battery scooter is priced at Rs 59,000 while the scooter equipped with two batteries is priced at Rs 74,000.
Story first published: Friday, July 16, 2021, 23:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X