இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

இந்தியாவின் முதல் இவி பிராண்டாக டி2சி எனப்படும் வாடிக்கையாளர்களுக்கான நேரடி வணிகத்தினை துவங்கவுள்ளதாக ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

இந்தியாவின் முதன்மையான இவி லாஜிஸ்டிக்ஸ் டெக் டெலிவிரி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஜிப் எலக்ட்ரிக் விளங்கி வருகிறது. இத்தகைய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான் தற்போது இந்தியாவின் முதல் இவி டி2சி வணிகத்தை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

அனைத்து துறைகளை சேர்ந்த வணிகங்களிலும் கார்பன் வெளியேற்றம் இல்லாத வகையில், லாஸ்ட் மைல் தளவாடங்களில் 100% மின்மயமாக்கலை அடைவதற்கான தேடலில் இருப்பதாக கூறும் ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் மின்வணிக நிறுவனங்கள், மின் மளிகை பொருட்கள் விற்பனை நிறுவனங்கள், சிறு சிறு கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்களுக்காக கடைகளில் இருந்து வாடிக்கையாளர்களின் வீடுகள் வரையிலான கடைசி மைல் டெலிவிரிகளை கையாளுகிறது.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

இதற்காக மின் வாகனங்களின் பயன்பாடு, சேவை நேர திருத்தங்கள், IoT-ஆல் இயக்கப்படும் நீக்கக்கூடிய பேட்டரி உள்கட்டமைப்பு போன்றவற்றை ஜிப் எலக்ட்ரிக் பயன்படுத்தி வருகிறது. தற்சமயம் இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்திடம் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. இவற்றின் உதவியுடன் கிட்டத்தட்ட 5 லட்ச டெலிவிரிகளை மாதத்தோறும் ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் வணிகமாக லாஸ்ட்-மைல் டெலிவிரி மாறி வருகிறது. 2025ஆம் ஆண்டிற்குள் இத்தகைய டெலிவிரி பணிகளில் ஈடுப்படுவோரின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் சுமார் 6.1 மில்லியனாக அதிகரிக்கும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அளவில் மிகவும் சிறிய பொருட்களையும் டெலிவிரி செய்வதில் இருந்து லாஸ்ட்-மைல் டெலிவிரி ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

தயாரிப்புகளை வழங்கும் நிறுவனத்தை பொறுத்து டெலிவிரி செய்யப்படும் பொருட்களின் எடையும், அளவும் அதிகரிக்கலாம். அதேபோல், வீட்டிற்கே பொருட்களை ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், லாஸ்ட்-மைல் டெலிவிரிமேன்களுக்கான ஆர்டர்களும் உயர்ந்து வருகின்றன.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் சந்தையில் முதல் பி2பி ஹெவி எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஜிப் கார்கோவை கடந்த 2021 ஜுலை மாதத்தில் அறிமுகம் செய்தது. லாஸ்ட்-மைல் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இது அதிகப்பட்சமாக 250 கிலோ வரையிலான எடையினை ஏற்றி செல்லக்கூடியது. ரூ.59,000 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இதில் 40 ஆம்பியர் பேட்டரி பொருத்தப்படுகிறது.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

இது சிங்கிள் சார்ஜில் 120கிமீ தூரத்திற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்லக்கூடியதாக உள்ளது. நீக்கக்கூடிய விதத்திலான பேட்டரிகளை பெறும் இது பல்வேறு பேட்டரி அமைப்புகளுடனும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிக சுமைகளை தாங்கக்கூடியது என்பதால், பெரிய தண்ணீர் பாட்டில்கள், சிலிண்டர்கள், மிக பெரிய உணவு பைகள் & துணி பைகள் போன்ற எடைமிக்க பொருட்களை எடுத்து சென்று டெலிவிரி செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

இதனாலேயே ஜிப் கார்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை "இருசக்கர லாரி" என தயாரிப்பு நிறுவனம் அழைக்கிறது. கடந்த இவி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த இ-ஸ்கூட்டருக்கு அப்போதே 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆர்டர்களை ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் பெற்றிருந்தது. தற்போது வரையில் இதன் 300 யூனிட்கள் இந்தியாவின் 9 பகுதிகளில் வாடிக்கையாளர்களிடம் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

ஜிப் எலக்ட்ரிக் நிறுவனம் பரந்த அளவிலான முதலீடு மற்றும் குத்தகை வாய்ப்புகளை வழங்குகிறது. ஜிப் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் இதன் மூலம் எவர் ஒருவரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்/ சுமைதாங்கிகளை வாங்கலாம் அல்லது குத்தகைக்கு விடலாம். இதன் வாயிலாக உத்தரவாதமான மாதாந்திர வருமானம்/ வாடகைகளை பெற முடியும்.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த திட்டம் சுமார் 21% கூடுதல் வருமானத்திற்கு மற்றும் சந்தை ஊசலாட்டத்திற்கு கவலை இல்லாமல் இருக்கலாம். இத்துடன் ஜிப் தனது டெலிவிரி ரைடர்களுக்கு 2-3 வருட காலத்திற்குள் கூடுதல் வட்டி இல்லாமல் எளிய மாத தவணைகளில் ஸ்கூட்டரை வாங்குவதற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு டெலிவிரி ரைடரும் அதிகமாக சம்பாதிக்கவும், அதிக மாத லாபத்தை ஈட்டவும் அனுமதிக்கிறது.

இந்தியாவின் முதல் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, இவி D2C வணிகத்தை துவங்கும் ஜிப் எலக்ட்ரிக்!!

இதுகுறித்து ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஒ-வுமான ஆகாஷ் குப்தா பேசுகையில், இந்தியாவின் முதல் இவி டி2சி வணிகத்தை துவங்கியது நாங்கள் தான் என்பதில் மிகவும் பெருமையடைகிறோம். லாஸ்ட் மைல் லாஜிஸ்டிக்ஸில் 100% மின்மயமாக்கலை அடைவது மற்றும் பல துறைகளை சேர்ந்த வணிகங்கள் மாசு உமிழ்வு இல்லாததாக மாறுவதற்கு உதவுவதே எங்கள் குறிக்கோள் என கூறியுள்ளார்.

Most Read Articles

English summary
Zypp Electric is building India’s first EV D2C business.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X