இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா.. 45 நாட்களில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்!

இந்தியர்களை குஷிப்படுத்தும் விதமாக ஓலா நிறுவனம் நாட்டில் தரமான செயலை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது நாடு முழுவதும் 100 கணக்கான ஷோரூம்களை திறக்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

ஷோரூம்களே இல்லாமல் இந்தியாவில் வாகன விற்பனையில் ஈடுபட இருப்பதாக அறிவித்த நிறுவனம், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric). இதைத்தொடர்ந்து, நிறுவனம் -டூ- வாடிக்கையாளர் என நேரடி வர்த்தகத்தில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறு, தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் நிறுவனம் டெலிவரிக் கொடுத்து வருகின்றது.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

நிறுவனம் சார்பில் இதுவரை ஒரு ஷோரூம்கூட திறக்கப்படவில்லை. இருப்பினும் இந்தியர்கள் மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனம் வர்த்தக பணிகளை மேற்கொண்டு ஒரு வருடம்கூட முழுமையடையாத நிலையில் அதற்குள்ளாகவே ஒரு லட்சம் யூனிட்டுகளை தயாரித்து வெளியேற்றும் அளவிற்கு மிக மிக சிறப்பான வரவேற்பு ஓலா எலெக்ட்ரிக்கிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

இந்த நிலையிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுவதும் 100க்கும் அதிகமான ஷோரூம்களை திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நிறுவனம் மின் வாகன விற்பனையில் ஓலா எலெக்ட்ரிக் ஈடுபட்டு வருகின்றது. இருப்பினும், இந்த அறிவிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

இந்த தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வாலும் உறுதிப்படுத்தியிருக்கின்றார். தனது டுவிட்டர் பதிவின் வாயிலாக இந்த தகவலை அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார். வாடிக்கையாளர்களுக்கு நேரடி தொடர்பை வழங்கும் விதமாக இந்த ஷோரூம்களை நிறுவ இருப்பதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

மேலும், வெகு விரைவில் ஷோரூம்களை திறக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, சுமார் 45 நாட்களுக்குள்ளாகவே இந்தியா முழுவதும் 100 அனுபவ மையங்களை திறக்க ஓலா எலெக்ட்ரிக் இலக்கு நிர்ணயித்துள்ளது. இங்கு நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான எஸ்1, எஸ்1 ப்ரோ மற்றும் லேட்டஸ்ட் அறிமுகமான எஸ்1 ஏர் ஆகியவை காட்சிப்படுத்தப்படும்.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

வாடிக்கையாளர்கள் நேரடியாக பிரதிநிதியுடன் தொடர்புக் கொண்டு வாகனங்கள் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள இந்த மையங்கள் பெரும் உதவியாக இருக்கும். ஓலா நிறுவனம் இந்தியாவில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே நிறுவனம் தற்போது ஷோரூம்களை திறக்கும் பணியில் ஓலா எலெக்ட்ரிக் களமிறங்கியிருக்கின்றது.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

இதற்கு முன்னதாகவும் இந்நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதாவது, குறிப்பிட்ட சில நகரங்களில் ஆர்டர் கொடுக்கப்பட்ட அன்றைய தினத்திலேயே இருசக்கர வாகனம் டெலிவரி கொடுக்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும், நாட்டின் பிற பகுதிகளில் அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் டெலிவரி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

இந்த நிலையிலேயே ஷோரூம் திறக்கும் பணியையும் நிறுவனம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. நிறுவனம் தற்போது தனது தயாரிப்புகளை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி கொடுத்து வருகின்றது. ஆகையால், நிறுவனம் முழுக்க முழுக்க ஆன்லைனை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உள்ளது.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

இந்த நிலையிலேயே புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஷோரூம்களை திறக்க இருக்கின்றது. இவை விற்பனையகம் போல் இல்லாமல் அனுபவ மையம் (Experience Centres)-ஆக மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறிதைப் போல் ஓலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக எஸ்1 ஏர் இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும்கூட. இதற்கு ரூ. 84,999 எனும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

தற்போது இந்த எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரிசர்வேசன் பணிகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது அதிகாரப்பூர்வமாக 2023 பிப்பரவரியிலேயே விற்பனை வர இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் டெலிவரி பணிகள் தொடங்கப்பட உள்ளன. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோவை பிரதிபலிக்கும் வகையிலேயே புதிய எஸ்1 ஏர் மாடலையும் ஓலா எலெக்ட்ரிக் உருவாக்கியிருக்கின்றது.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

அதேவேலையில், இரண்டைக் காட்டிலும் இலுகுவானதாக இவ்வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறைவான ரேஞ்ஜ், குறைவான வேகம் என அனைத்திலும் இலகுவானதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும். ஓலா எஸ்1 எர் ஓர் முழு சார்ஜில் 101 கிமீ மட்டுமே ரேஞ்ஜ் தரும் என நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது. மேலும், அதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும்.

இந்தியர்களை குஷிப்படுத்த முக்கிய முடிவை எடுத்திருக்கும் ஓலா நிறுவனம்... 45 நாட்களுக்கு சூப்பரான சம்பவம் அரங்கேறப்போகுது!

அதேவேலையில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை வெறும் 4.3 செகண்டுகளிலேயே இந்த வாகனம் தொட்டுவிடும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே எஸ்1 ஏர் மாடலை ஓலா உருவாக்கியுள்ளது. ரூ. 999 என்ற தொகையிலேயே தற்போது ரிசர்வேசன் பணிகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Most Read Articles
English summary
100 ola showroom
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X