அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!

2022 டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான புதியதொரு டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் தெரியவந்துள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!

எலக்ட்ரிக் வாகன பயன்பாடு நாட்டில் வேகமாக அதிகரித்து வருவது நாம் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கும் ஒன்றாகும். இதனாலேயே பல புதிய இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்கள் கடந்த சில வருடங்களில் களமிறங்கியுள்ளன. அதேநேரம் தற்சமயம் விற்பனையில் இருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களும் அவ்வப்போது மெருக்கேற்றப்பட்டு வருகின்றன.

அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!

இந்த வகையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் யுடியூப் பக்கத்தில் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான புதியதொரு வீடியோவினை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வீடியோவில் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றின் முன்பக்கம் கருமையான பகுதிக்குள் ஹெட்லைட் ஒளிர காட்டப்பட்டுள்ளது. மேலும் அதற்கு கீழாக, புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் என குறிப்பிடப்பட்டு, அறிமுக தேதி & நேரமாக மே 18, நண்பகல் 2 மணி கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோவினை #திஸ்டோரிஆஃப்123 என்ற ஹாஸ்டேக்கின் கீழ் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பதிவிட்டுள்ளது. அநேகமாக 123 என்பது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் ஆக இருக்கலாம். விற்பனையில் உள்ள டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் தற்சமயம் 75கிமீ ஆக உள்ளது. அதாவது ஐக்யூப் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக 100% சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 75கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!

75கிமீ என்பது மற்ற போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில், தற்கால தரங்களை காட்டிலும் குறைவாகும். இந்த குறையை அடையாளப்படுத்தி கொண்டுள்ள டிவிஎஸ் அதிக ரேஞ்சில் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தலாம். டிவிஎஸ் மோட்டார் மட்டுமின்றி தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அப்கிரேட் செய்வதில் பஜாஜ் ஆட்டோ, ஏத்தர் மற்றும் ஓலா நிறுவனங்களும் மும்முரமாக உள்ளன.

அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!

தற்சமயம் பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் முறையே 95கிமீ மற்றும் 85கிமீ ஆகும். எலக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்சை அதிகரிக்க வேண்டுமென்றால், அவற்றில் அளவில்-பெரியதான பேட்டரி தொகுப்பை வழங்கல் வேண்டும். இதே பாணியைதான் பஜாஜ் ஆட்டோ, ஏத்தர் எனர்ஜி மற்றும் ஓலா நிறுவனங்களை போல் டிவிஎஸ் மோட்டாரும் மேற்கொள்ளும்.

அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!

மற்றப்படி அதிக-ரேஞ்சில் கொண்டுவரப்படும் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய வேறெந்த விபரமும் தற்போதைக்கு இல்லை. எங்களுக்கு தெரிந்தவரையில் அளவில்-பெரிய பேட்டரி தொகுப்புடன் சில கூடுதல் வசதிகளையும் ஐக்யூப்பில் டிவிஎஸ் நிறுவனம் சேர்க்கலாம். தமிழகத்தில் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் அதன் முதலாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஐக்யூப்பை கடந்த 2020இன் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது.

அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!

கடந்த 12 மாத விற்பனை எண்ணிக்கைகளை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தோமேயானால், 2021 மே மாதத்தில் இருந்து கடந்த 2022 ஏப்ரல் மாதம் வரையில் மொத்தம் 11,886 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சராசரியாக மாதத்திற்கு 991 யூனிட்கள். அதிகப்பட்சமாக 2022 பிப்ரவரியில் 2,238 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டன.

அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!

இதில் 2021 மே மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலினால் ஒரு டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் கூட விற்பனையாகவில்லை. தற்சமயம் டிவிஎஸ் ஐக்யூப் இ-ஸ்கூட்டரில் 4.4 கிலோவாட்ஸ் பிஎல்டிசி எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இதற்கு இயக்க ஆற்றலை வழங்க 3 லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புகள் பொருத்தப்படுகின்றன. இந்த பேட்டரி தொகுப்புகளின் மொத்த திறன் 2.25kWh ஆகும்.

அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!

இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 140 என்எம் டார்க் திறன் கிடைக்கிறது. ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஈக்கோ மோடில் அதிகப்பட்சமாக மணிக்கு 48கிமீ வேகத்திலும், ஸ்போர்ட் மோடில் மணிக்கு 78கிமீ வேகத்திலும் இயக்கலாம். முக்கிய சிறப்பம்சங்களாக முழு-எல்இடி விளக்குகள் மற்றும் டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸோனெக்ட் செயல்பாட்டுடன் முழு டிஜிட்டல் வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் திரை ஐக்யூப்பில் வழங்கப்படுகின்றன.

அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!

இதில் ஸ்மார்ட்எக்ஸொனெக்ட் செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் ஸ்மார்ட்போன் இணைப்பின் வாயிலாக பயண வரலாறு, பேட்டரியின் ரேஞ்ச் மற்றும் ஜியோ-ஃபென்சிங் உள்ளிட்ட விபரங்களை பெறலாம். அத்துடன் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கன்சோல் பயணத்திற்கான வழிக்காட்டுதல்கள், மொபைல் போனின் அழைப்புகள் & குறுஞ்செய்திகள் உள்ளிட்டவை குறித்தும் எச்சரிக்கும்.

Most Read Articles
English summary
2022 tvs iqube electric scooter launch teased
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X