புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

யமஹா எம்டி-15 பைக்கின் புதிய வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் தேதி உள்பட பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

இந்திய இளைஞர்கள் மத்தியில், யமஹா எம்டி-15 (Yamaha MT-15) பிரபலமான பைக்குகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் மேம்படுத்தப்பட்ட புதிய எம்டி-15 வெர்ஷன் 2.0 (Version 2.0) பைக்கை யமஹா நிறுவனம் வரும் ஏப்ரல் 11ம் தேதி (April 11) அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பைக்கிற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

புதிய யமஹா எம்டி-15 வெர்ஷன் 2.0 பைக்கிற்கு, இந்தியாவில் உள்ள ஒரு சில டீலர்ஷிப்களில் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில்தான் ஏற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, யமஹா எம்டி-15 பைக்கின் புதிய மாடல் பல்வேறு விதங்களில் மேம்பட்டதாக இருக்கும்.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

டிசைன் உள்ளிட்ட அம்சங்களில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பிரேக்கிங்கை பொறுத்தவரையில், புதிய யமஹா எம்டி-15 பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி முன்பகுதியில் 282 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

பழைய யமஹா எம்டி-15 பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வசதி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் புதிய யமஹா எம்டி-15 பைக்கில், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வசதிக்கு பதிலாக, ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசைனை பொறுத்தவரையில், நாங்கள் ஏற்கனவே கூறியபடி சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறதுதான்.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

ஆனாலும் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது. இருப்பினும் புதிய வண்ண தேர்வுகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய யமஹா எம்டி-15 பைக்கில், 155 சிசி, லிக்யூட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 18.4 பிஎஸ் பவரை உருவாக்க கூடியது.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

அதே நேரத்தில் 7,500 ஆர்பிஎம்மில் 14.2 என்எம் டார்க் திறனை இந்த இன்ஜின் வழங்கும். இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதியும் வழங்கப்படும். புதிய யமஹா எம்டி-15 பைக்கின் எடை குறைவாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

எனவே புதிய யமஹா எம்டி-15 பைக் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் புதிய யமஹா எம்டி-15 பைக்கில், டிராக்ஸன் கண்ட்ரோல் மற்றும் க்யிக் ஷிஃப்டர் (Quick Shifter) ஆகிய வசதிகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

ஆனால் விலை உயர்ந்த வேரியண்ட்களில்தான் இந்த வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுபோன்ற கூடுதல் வசதிகள் வழங்கப்படுவதன் காரணமாக பழைய மாடலை காட்டிலும் யமஹா எம்டி-15 பைக்கின் புதிய மாடல் விலை உயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆயிரம் ரூபாய் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரலாம் என கூறப்படுகிறது.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

இது டீலர்கள் தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் ஆகும். எனவே விலை உள்பட அதிகாரப்பூர்வமான தகவல்கள் அனைத்தும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியில்தான் வெளியிடப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு வரும் நாளுக்காக வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர்.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 எந்த பைக்கிற்கும் நேரடி போட்டியாக இருக்காது. இருப்பினும் கேடிஎம் 125 ட்யூக் (KTM 125 Duke) மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி (TVS Apache RTR 160 4V) உள்ளிட்ட பைக்குகளுக்கு, யமஹா எம்டி-15 நெருக்கமான போட்டியாளராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வசதிகள் தரப்போறாங்க... யமஹா எம்டி-15 பைக்கின் வெர்ஷன் 2.0 இந்த தேதியில் அறிமுகமாகிறது! இளசுகள் உற்சாகம்!

புதிய மாடலின் வருகை காரணமாக யமஹா எம்டி-15 பைக்கின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் யமஹா எம்டி-15 பைக்கின் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக ஏற்கனவே ஒரு சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனவே புதிய எம்டி-15 பைக்கின் விலையை யமஹா நிறுவனம் சரியாக நிர்ணயம் செய்தால், விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
2022 yamaha mt 15 version 2 0 debut date check details here
Story first published: Tuesday, April 5, 2022, 18:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X