1.31 லட்ச ரூபாவுக்கு இவ்ளோ சூப்பரான பைக்கா!.. நம்ம டிவிஎஸ் நிறுவனத்தால மட்டும்தான் இப்படி எல்லாம் முடியும்!

டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் அப்பாச்சி-யும் ஒன்று. இந்த பைக்கை பன்முக சீரிஸ்களில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அப்பாச்சி ஆர்ஆர், அப்பாச்சி ஆர்டிஆர் மற்றும் அப்பாச்சி ஆர்பி ஆகியவையே அந்த சீரிஸ்களாகும். இவற்றின் வரிசையிலேயே டிவிஎஸ் நிறுவனம் புதிய சிறப்பு பதிப்பு ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ஸ்பெஷல் எடிசன் எனும் சிறப்பு பதிப்பையே டிவிஎஸ் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இந்த பைக் சிறப்பு பதிப்பாக இருந்தாலும் பட்ஜெட் விலையிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 1.30 லட்ச ரூபாயே இந்த சிறப்பு பதிப்பு அப்பாச்சிக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது. விலை குறைவானதாக இருந்தாலும் இந்த பைக்கில் சிறப்பு வசதிகளை வழங்க டிவிஎஸ் நிறுவனம் தவறவில்லை. செக்மெண்டிற்கே புதிது என கூறும் அளவிற்கு சில புது அம்சங்களை இந்த பைக்கில் டிவிஎஸ் வழங்கி உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி

இத்துடன் கணிசமான மெக்கானிக்கல் அப்கிரேடுகள் மற்றும் சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவையும் புதிய அப்பாச்சி 160 4வி ஸ்பெஷல் எடிசனில் வழங்கப்பட்டு உள்ளது. டிவிஎஸ் நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பை இரு கவர்ச்சியான நிற தேர்வில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மேட் பிளாக் மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய பெயிண்ட் ஸ்கீமிலேயே புதிய அப்பாச்சி 160 4வி ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதுமட்டுமின்றி சில காஸ்மெட்டிக் அப்கிரேடுகளும் இந்த பைக்கில் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், கருப்பு மற்றும் சிவப்பு வர்ணம் பூசப்பட்ட அலாய் வீல்கள், இதே நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை ஆகியவையே ஸ்பெஷல் எடிசனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, அட்ஜஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் உள்ளிட்டவையும் இந்த புதிய பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்களை நிறுவனத்தின் வேறு எந்த விலை குறைவான தயாரிப்பிலும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ஸ்பெஷல் எடிசனை புதிய பேட்டர்னுக்கு உயர்த்தியிருக்கின்றது. இதுதவிர, மெக்கானிக்கல் மாற்றமாக புதிய எக்சாஸ்ட் அமைப்பு இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. புல்பப் எக்சாஸ்ட் (Bullpup) எனும் சிஸ்டத்தையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த சிஸ்டம் மிக சிறந்த ஒலியை வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி, இந்த எக்சாஸ்ட் பயன்பாட்டால் 1 கிலோ வரை பைக்கின் எடைக் குறைந்திருக்கின்றது.

இதுதவிர வேறு எந்த மாற்றத்தையும் புதிய சிறப்பு பதிப்பு அப்பாச்சி பைக்கில் டிவிஎஸ் வழங்கவில்லை. வழக்கமான அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 159.7 சிசி ஆயில் கூல்டு, எஸ்ஓஎச்சி மோட்டாரே புதிய அப்பாச்சியில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 17.30 பிஎச்பி பவரை 9,250 ஆர்பிஎம்மிலும், 14.73 என்எம் டார்க்கை 7,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது.

5 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், மூன்று விதமான ரைடிங் மோட்களும் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் ஆகிய மோட்களே வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மோடும் வெவ்வேறு விதமான ரைடிங் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, அர்பன் மற்றும் ரெயின் மோடில் பயணிக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 103 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.

அதேநேரத்தில், ஸ்போர்ட் மோடை பயன்படுத்தினால் உச்சபட்ச வேகமான மணிக்கு 114 கிமீ வேகத்தை எட்ட முடியும். இந்த அதிக வேக திறனுடன் சிறப்பு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் இந்த பைக்கில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், ஸ்மார்ட்எக்ஸோன்னெக்ட் அம்சம் புதிய அப்பாச்சியில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் ப்ளூடூத் இணைப்பு வசதியாகும். இந்த அம்சத்தை பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் வாயிலாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த திரை கியரின் பொசிஷன் போன்ற மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கக் கூடியது.

இதுதவிர பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர மின் விளக்கு போன்ற எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 270 மிமீ பெடல் டிஸ்க் முன் பக்கத்திலும், 200 மிமீ பெடல் டிஸ்க் பின் பக்கத்திலும் டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது. இது மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும். இத்துடன், அலாதியான ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Apache rtr 160 4v special edition
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X