தமிழக வாசிகள் இனி தைரியமாக மின்சார வாகனங்களை வாங்கலாம்.. மார்ச்சுக்குள்ள தரமான சம்பவத்தை செய்ய ஏத்தர் திட்டம்!

தமிழக வாசிகளின் பயன்பாட்டிற்கு மாநிலம் முழுவதும் எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்களை அமைக்க இருப்பதாக ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. தடையில்லாமல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும் விதமாக நிறுவனம் இந்த பணியில் களமிறங்கியிருக்கின்றது.

மின் வாகன விற்பனைக்கு முற்று புள்ளியாக இருக்கும் காரணங்களில் சார்ஜிங் நிலைய பற்றாக்குறையும் ஒன்று. பலர் மின் வாகனங்களை வாங்குவதற்கு முன் வந்த வண்ணம் இருந்தாலும், போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் அவற்றை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

குறிப்பாக, அவர்கள் வசிக்கும் இல்லத்திற்கு அருகில் சார்ஜிங் நிலையம் இல்லாமல் இருப்பதே அவர்களின் தயக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. நிறுவனங்கள் தங்களது வாகனங்களை வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்துகொள்ளும் வசதியை வழங்கினாலும், பலரால் அதை செய்ய முடியாத நிலையே தென்படுகின்றது. நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் பலர் தங்களது வாகனங்களை வீட்டுக்கு அருகிலேயே நிறுத்த முடியாத நிலை நிலவுகின்றது.

இந்த மாதிரியான சூழலில் அவர்களால் வீட்டில் வைத்து மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வது என்பது இயலாத ஒன்று. இந்த மாதிரியான நபர்கள் தங்களது வாகனங்களை பொது சார்ஜிங் மையத்தில் வைத்தே சார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், இந்த அடிப்படை கட்டமைப்பு வசதியும்கூட இன்னும் பல பகுதிகளில் உருவாக நிலை உள்ளது. நகர்புறத்திலேயே மிக முக்கியமான பகுதிகளில் மட்டுமே மின் வாகன சார்ஜிங் இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலே பலரை மின் வாகனத்தை வாங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையைக் களையும் பொருட்டே ஓர் தரமான நடவடிக்கையை பிரபல ஏத்தர் நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் அதன் ஏத்தர் கிரிட் எனப்படும் அதிக வேக சார்ஜிங் நிலையங்களை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.

சுமார் 150 நிலையங்களை மாநிலம் முழுவதும் கட்டமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து நிலையங்களையும் கட்டமைக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்த வண்ணம் இருக்கின்றது.

கடந்த காலண்டில் 50 சதவீத விற்பனை வளர்ச்சியை நிறுவனத்தின் தயாரிப்புகள் பெற்றிருந்தன. குறிப்பாக, ஜென்3 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை நிறுவனத்தின் விற்பனையை பூஸ்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த அப்டேட்டட் இருசக்கர வாகனத்தை ரூ. 1.58 லட்சத்திற்கு நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. இது ஃபேம்-2 திட்டத்தின்கீழ் விற்கப்படும் விலை ஆகும்.

நிறுவனம் மற்றுமொரு தேர்வாக ஏத்தர் 450 பிளஸ் ஜென் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ரூ. 1.36 லட்சம் இதன் விலை ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் சேர்த்து டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் கருவிகளையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதனையே நிறுவனம் மாநிலம் முழுவதும் அமைப்பதற்கான பணியில் ஏத்தர் எனெர்ஜி களமிறங்கியிருக்கின்றது. இந்த மையத்தில் வெறும் ஒரு நிமிஷம் மட்டும் சார்ஜ் செய்தால் போதும் 1.5 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய அதிக வேகத்தில் சார்ஜேற்றக் கூடிய மின் வாகனங்களே வெகு விரைவில் தமிழக வாசிகளின் பயன்பாட்டிற்காக வர இருக்கின்றன. இந்த மையங்களை எளிதில் கண்டறியும் வசதியை அதன் ஆப்பில் ஏற்படுத்திக் கொடுக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Ather charging station tamilnadu
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X