ஒரே நாளில் இத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரியா! வாடிக்கையாளர்களுக்கு பல்க்காக விற்ற பிரபல நிறுவனம்!

பிரபல நிறுவனம் ஒன்று ஒரே நாளில் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பல்க்காக டெலிவரி செய்து அசத்தியுள்ளது.

ஒரே நாளில் இத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரியா! வாடிக்கையாளர்களுக்கு பல்க்காக விற்ற பிரபல நிறுவனம்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதாலும், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் அளவிற்கு காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாலும், பொதுமக்கள் மத்தியில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

ஒரே நாளில் இத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரியா! வாடிக்கையாளர்களுக்கு பல்க்காக விற்ற பிரபல நிறுவனம்!

எலெக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குதான் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எனவே டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர் எனர்ஜி மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய முன்னணி நிறுவனங்களுடன், இன்னும் பல்வேறு சிறிய நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன.

ஒரே நாளில் இத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரியா! வாடிக்கையாளர்களுக்கு பல்க்காக விற்ற பிரபல நிறுவனம்!

இந்த சூழலில், இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களில் ஒன்றாக உள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் ஒரே நாளில் 250 ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்திருப்பதுதான் அந்த சாதனை.

ஒரே நாளில் இத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரியா! வாடிக்கையாளர்களுக்கு பல்க்காக விற்ற பிரபல நிறுவனம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 23ம் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 450எக்ஸ் ஜென்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் பல்வேறு அப்டேட்களுடன் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரியா! வாடிக்கையாளர்களுக்கு பல்க்காக விற்ற பிரபல நிறுவனம்!

இந்த புதிய மாடலில் 3.7 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 105 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும். இது உண்மையான ரேஞ்ச் ஆகும். எனவே இதைக்காட்டிலும் உங்களால் அதிக ரேஞ்ஜை கூட பெற முடியும். அத்துடன் இந்த புதிய மாடலில் 6.2 kW (8 பிஹெச்பி) மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரியா! வாடிக்கையாளர்களுக்கு பல்க்காக விற்ற பிரபல நிறுவனம்!

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 3.3 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைதான் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஒரே நாளில் 250 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது.

ஒரே நாளில் இத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரியா! வாடிக்கையாளர்களுக்கு பல்க்காக விற்ற பிரபல நிறுவனம்!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்கு உரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல ஆதரவு காணப்படுவதால், வரும் காலங்களில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இன்னும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

ஒரே நாளில் இத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரியா! வாடிக்கையாளர்களுக்கு பல்க்காக விற்ற பிரபல நிறுவனம்!

இதற்கிடையே ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிக முக்கியமான போட்டியாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமும் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் வரும் காலங்களில், எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Ather delivers 250 units of the 450x electric scooters in one day
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X