ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் இவி ஸ்டார்ட்-அப் பிராண்டாக விளங்கும் ஏத்தர் எனர்ஜியின் கடந்த 2022 பிப்ரவரி மாத விற்பனை நிலவரம் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

இந்திய அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளினால் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பயன்பாடு நம் நாட்டில் மிக நன்றாகவே முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ள இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களுள் ஏத்தர் எனர்ஜியும் ஒன்றாகும். பெங்களூரை சேர்ந்த இந்த நிறுவனம் ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா பிராண்ட்களுக்கு அடுத்து தற்போதைக்கு இந்தியாவின் 3வது மிக பெரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

ஆனால் இப்போதைக்கு 450 மற்றும் 450எக்ஸ் என்கிற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே ஏத்தர் எனர்ஜி பிராண்டில் இருந்து சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விற்பனை குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் சரிந்துவரும் நிலையில், இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மூலமாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனையில் சுமார் 140% வளர்ச்சியை கண்டுள்ளது.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

கடந்த மாதத்தில் மொத்தமாக 2,042 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்த பெங்களூர் ஸ்டார்ட்-அப் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 பிப்ரவரி மாதத்தில் வெறும் 850 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் வருடம்-வருடம் ஒப்பீடுகையில் ஏத்தர் எனர்ஜியின் விற்பனை 140 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் மாதம்-மாதம் ஒப்பீடுகையில் இந்த விற்பனை எண்ணிக்கை 27% குறைவாகும்.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

ஏனெனில் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் மொத்தம் 2,825 ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. உண்மையில் மற்ற 2-வீலர்ஸ் தயாரிப்பு நிறுவனங்களை போல் ஏத்தர் எனர்ஜியும் குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் சில பல இன்னல்களை சந்தித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் 2,042 ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள் ஏற்கனவே தயாரித்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தவை என தகவல்கள் கூறுகின்றன.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

கொரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் உருவான இந்த சிப்கள் பற்றாக்குறை கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக இந்தியா உள்பட உலக ஆட்டோமொபைல் துறைக்கே பெரும் தலைவலியாக விளங்கி வருகிறது. ஆனால் இந்த நிலை இன்னும் 2-3 மாதங்களில் சீராகிவிடும் எனவும், பாகங்கள் விநியோகஸ்தர்கள் தேவை-டெலிவிரிக்கு இடையேயான இடைவெளியை குறைப்பார்கள் எனவும் ஏத்தர் எனர்ஜி நம்பிக்கையாக உள்ளது.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பினை ஏத்தர் க்ரிட் என அழைத்து வருகிறது. ஏத்தர் க்ரிட் சார்ஜிங் வசதியினை நாடு முழுவதும் ஏற்படுத்திவரும் ஏத்தர் நிறுவனம் இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் 1000 ஏத்தர் க்ரிட் சார்ஜிங் மையங்களை மாநிலம் முழுவதும் நிறுவ ஆளும் மாநில அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

கர்நாடகா மாநிலத்தில் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தினை ஏத்தர் எனர்ஜியின் சிஇஓ தருண் மெஹ்தா ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இவ்வாறு நாடு முழுவதும் ஏத்தர் க்ரிட் சார்ஜிங் மையங்களை நிறுவும் அதேவேளையில், மறுப்பக்கம் வாகன உற்பத்தி திறனை அதிகரிக்கவும் ஏத்தர் எனர்ஜி பணியாற்றி வருகிறது.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

தற்போதைக்கு ஏத்தர் எனர்ஜியின் தொழிற்சாலையில் அதிகப்பட்சமாக வருடத்திற்கு 4 லட்ச இ-ஸ்கூட்டர்களை தயாரிக்கலாம். இந்த எண்ணிக்கையை நடப்பு 2022ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம், அதாவது 1 மில்லியனாக அதிகரிக்க இந்த நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது. இதற்கிடையில் இந்தியா முழுவதும் 5,000 விரைவு சார்ஜிங் மையங்களும் ஏத்தர் எனர்ஜியின் சார்பில் நிறுவப்பட்டு வருகின்றன.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

தற்போதைக்கு 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே ஏத்தர் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், விரைவில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் முனைப்பில் இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் உள்ளது. இதற்கேற்ப சில்லறை விற்பனை மையங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரிக்கப்பட உள்ளது. ஆனால் இப்போதைக்கு இந்தியாவில் 24 நகரங்களில் வெறும் 29 சில்லறை விற்பனை மையங்கள் மட்டுமே ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளன.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 140% அதிகரிப்பு!! விற்பனை 2 ஆயிரத்தை கடந்தது!

இந்த 29 விற்பனை மையங்கள் மூலமாகவே மாதத்திற்கு சராசரியாக 2 ஆயிரம் இ-ஸ்கூட்டர்களை இந்த நிறுவனத்தால் விற்க முடிவது உண்மையில் ஆச்சரியமான விஷயமாகும். 2023 மார்ச் மாதத்திற்கு உள்ளாக சந்தையை 100 நகரங்களுக்கு விரிவுப்படுத்துவதை ஏத்தர் எனர்ஜி நோக்கமாக கொண்டுள்ளது. சில்லறை விற்பனை மையங்கள் தற்போதைக்கு குறைவாக இருப்பினும், விரைவு-சார்ஜிங் ஏத்தர் க்ரிட் மையங்கள் சுமார் 300 இடங்களில் உள்ளன.

Most Read Articles
English summary
Ather electric scooter sales feb 2022 yoy growth 140 percent
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X