ஓசூர் தொழிற்சாலையில் தரமான சம்பவம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனையை படைத்த ஏத்தர்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓசூர் தொழிற்சாலையில் தரமான சம்பவம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனையை படைத்த ஏத்தர்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்களில் ஒன்று ஏத்தர் எனர்ஜி. இந்த சூழலில், தமிழகத்தின் ஓசூரில் உள்ள தனது தொழிற்சாலையில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது உற்பத்தி செய்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 50 மாதங்களை எடுத்து கொண்டுள்ளது. அதாவது 4 வருடங்களுக்கும் சற்று அதிகம்.

ஓசூர் தொழிற்சாலையில் தரமான சம்பவம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனையை படைத்த ஏத்தர்!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏத்தர் 450 ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு 2 ஆண்டுகள் கழித்து, அதாவது கடந்த 2020ம் ஆண்டில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஓசூர் தொழிற்சாலையில் தரமான சம்பவம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனையை படைத்த ஏத்தர்!

அது ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதற்கு 2 ஆண்டுகள் கழித்து, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது அப்டேட் செய்துள்ளது. இது சமீபத்திய தலைமுறை ஏத்தர் 450எக்ஸ் ஜென்3 ஆகும். ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த மாதம்தான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

ஓசூர் தொழிற்சாலையில் தரமான சம்பவம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனையை படைத்த ஏத்தர்!

1.39 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம்) ஏத்தர் 450எக்ஸ் ஜென்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 450 ப்ளஸ் ஜென்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.17 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஓசூர் தொழிற்சாலையில் தரமான சம்பவம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனையை படைத்த ஏத்தர்!

இதில், ஏத்தர் 450எக்ஸ் ஜென்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 146 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 450எக்ஸ் ஜென்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் தனது போட்டியை புதுப்பித்துள்ளது.

ஓசூர் தொழிற்சாலையில் தரமான சம்பவம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனையை படைத்த ஏத்தர்!

டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகியவை ஏத்தர் 450எக்ஸ் ஜென்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிக முக்கியமான போட்டியாளர்கள் ஆகும். இந்தியாவில் சமீப காலமாகவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே வருகின்றன.

ஓசூர் தொழிற்சாலையில் தரமான சம்பவம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனையை படைத்த ஏத்தர்!

பல்வேறு முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்த காரணத்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கும் கூட பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரிதாக சர்ச்சைகளில் சிக்கவில்லை.

ஓசூர் தொழிற்சாலையில் தரமான சம்பவம்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனையை படைத்த ஏத்தர்!

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழகத்தின் ஓசூரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இந்த ஓசூர் தொழிற்சாலைக்கு உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles

English summary
Ather energy achieves 50000 unit production milestone
Story first published: Tuesday, August 30, 2022, 23:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X