2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

2022 ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் (Gujarat Titans) அணியின் பார்ட்னராக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இணைந்துள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது. இந்த முறை இந்தியாவிலேயே நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்ததை பற்றி உங்களில் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

பொதுவாக இவ்வாறான கிரிக்கெட் தொடர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தினாலும், ஒவ்வொரு அணிகளையும் அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கிய கார்ப்பிரேட் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து நிர்வகிக்கும். அதாவது அணிக்கு தேவையான வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க தேவையான செலவுகளை அந்த நிறுவனங்கள் கூட்டாக இணைந்து கவனித்து கொள்ளும்.

2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

கூட்டணி கொள்கைகளின்படி, கிரிக்கெட் அணிக்கான உரிமை முதலீடு செய்யப்படும் தொகையை பொறுத்து நிறுவனத்திற்கு நிறுவனம் மாறலாம். இந்த விஷயங்கள் எல்லாம் ஐபிஎல் பார்ப்பவர்கள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் குஜராத் டைட்டான்ஸ் கிரிக்கெட் அணிக்கான ஸ்பான்சர்களுள் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இணைந்துள்ளது.

2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

2022 ஐபிஎல் தொடரில் புதியதாக இரு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட குஜராத் டைட்டான்ஸும் ஒன்றாகும். இந்த அணியின் சார்பிலும் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தை பொறுத்தவரையில், பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக விளங்கும் இது தற்போதைக்கு இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் இவி பிராண்ட்களுள் ஒன்றாக உள்ளது.

2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

அதிலிலும் குறிப்பாக, செயல்திறன்மிக்க பிரீமியம் தர எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகளவில் விற்பனை செய்யக்கூடிய பிராண்டாக ஏத்தர் விளங்குகிறது. தற்போதைக்கு இந்த பிராண்டில் இருந்து 450 மற்றும் 450எக்ஸ் என்ற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. வெறும் 2 தயாரிப்புகள் மூலமாக முன்னணி இவி பிராண்டாக உயர்ந்திருப்பது உண்மையில் கவனிக்கத்தக்க விஷயமாகும்.

2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

குஜராத் டைட்டன்ஸ் நிறுவனத்தின் ஸ்பான்சராக இணைந்திருப்பது குறித்து ஏத்தர் எனர்ஜியின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீட் சிங் பேசுகையில், "வரவிருக்கும் சீசனில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்தந்த துறைகளில் ஒப்பீட்டளவில் புதியவர்களாக இருப்பது, பயமின்மை & நேர்மறையான எண்ணங்கள் மற்றும் அதிக போட்டி மிகுந்த சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கொள்கைகள் உள்ளிட்டவை எங்களுக்கு இடையே பிணைப்பு ஏற்படுத்துகின்றன" என்றார்.

2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

அதாவது, இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஏத்தர் எனர்ஜி புதியதுபோல், ஐபிஎல் தொடருக்கு குஜராத் டைட்டன்ஸ் புதியது என்பதை ரவ்னீட் சிங் சுட்டிக்காட்டுகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகமும், புதிய இவி ஸ்டார்ட்-அப் உடன் கூட்டு சேர்வதில் உற்சாகமாக உள்ளது. இதுகுறித்து இந்த அணியின் தலைமை செயல் அதிகாரி அரவிந்தர் சிங் கருத்து தெரிவிக்கையில், "இந்தியாவில் இவி துறையில் முன்னணியில் இருக்கும் இளம் மற்றும் வளர்ந்துவரும் நிறுவனமான ஏத்தர் எனர்ஜியுடன் கை கோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

இளமை மற்றும் மூலோபாய சிந்தனையின் கலவையானது, ஏத்தர் எனர்ஜி திட்டங்கள் ஒரு தொகுப்பாக எங்களுடன் எதிரொலிக்கிறது. நாங்கள் இளமை உணர்வு மற்றும் 2022 ஐபிஎல்-இல் லீக் போட்டிகளில் எங்கள் முத்திரையை பதிக்க மன உறுதியுடன் பயணத்தை தொடங்குகிறோம்" என்றார். புதிய இரு அணிகளாக குஜராத் டைட்டான்ஸ் உடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

ஏத்தர் எனர்ஜி அடுத்த 3 வருடங்களில் தொழிற்சாலை பணிகளை வெகுவாக அதிகரித்து, தற்போதைய நிலையை காட்டிலும் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஓசூரில் தனது இரண்டாவது தொழிற்சாலையை இந்த பெங்களூர் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் திறந்துள்ளதாக நமது செய்தித்தளத்தில் கூட தெரிவித்திருந்தோம்.

2022 ஐபிஎல்-இல் புதிய அணிக்கு ஸ்பான்சராக ஏத்தர் எனர்ஜி!! எந்த டீம்-க்கு தெரியுமா?

ஏத்தர் நிறுவனத்திற்கு முதல் தொழிற்சாலையும் ஓசூரில் தான் அமைந்துள்ளது. இந்த முதல் தொழிற்சாலை வருடத்திற்கு அதிகப்பட்சமாக 1.20 லட்ச எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்டதாக உள்ள நிலையில், புதிய தொழிற்சாலை இந்த நிறுவனத்தின் மொத்த வருட உற்பத்தி திறனை 4 லட்சங்களாக அதிகரிக்க உள்ளது.

Most Read Articles
English summary
Ather energy announces partnership with new ipl franchise gujarat titans
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X