ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 9 மடங்கு அதிக விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

கர்நாடகா மாநிலம் பெங்களூரூவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy). இந்நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போது நிறுவனத்தின்கீழ் ஏத்தர் 450 எக்ஸ் எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

இதுவே நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்பாகவும் காட்சியளிக்கின்றது. இந்த வாகனத்திற்கே இந்தியர்கள் மிக அமோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் 2022 ஜூன் மாதத்தில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிக அதிகளவில் விற்பனையாகியிருக்கின்றன.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

3,231 யூனிட்டு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதே வாகனம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 318 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதைக் காட்டிலும் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் பெற்றிருக்கும் விற்பனையானது 9 மடங்கு அதிகமாகும்.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

இந்த பிரமாண்ட வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியர்களையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, போட்டி நிறுவனங்களை மிரட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேநேரத்தில், இதே நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் 2022 மே மாதத்தில் 3,787 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

இதைவிட 556 யூனிட்டுகள் குறைவான விற்பனையையே 2022 ஜூன் மாதத்தில் ஏத்தர் பெற்றுள்ளது. இதனை வைத்து பார்க்கையில் கணிசமான விற்பனை சரிவை ஏத்தர் எனெர்ஜி சந்தித்திருப்பது தெரிகின்றது. இருப்பினும், ஆண்டு-டூ-ஆண்டு விற்பனையில் மிக பிரமாண்டமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதால், அந்நிறுவனம் மகிழ்ச்சியில் திகைத்துள்ளது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

இந்தியர்களுக்கு மின்சார வாகனங்களின் மீதான மோகம் அதிகரித்துக் காணப்படுவதே ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் செழிப்பான வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது. தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கேரள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பதாக ஏத்தர் தெரிவித்துள்ளது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

ஒட்டுமொத்த விற்பனையில் 24 சதவீதம் பங்கை கேரளாவே பெற்றிருக்கின்றது. ஆகையால், கேரளாவின் முன்னணி மின்சார வாகன விற்பனையாளராக ஏத்தர் மாறியிருக்கின்றது. இந்த மாதிரியாக நிறுவனத்திற்கு கேரளாவில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்ற வேலையில், வாகனங்களை விற்பனையாளர்களுக்கு விநியோகிப்பதில் சிக்கலைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது, ஏத்தர்.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

இது தடை கல்லாக இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு ஏத்தர் விநியோக சிக்கலை சீர்படுத்தும் பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, வாடிக்கையாளர்களின் நுகர்வை அதிகரிக்கச் செய்வதற்கான பணிகளையும் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

இதன் அடிப்படையில் சமீபத்தில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்பிஐ உடன் கூட்டணியைத் தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு எளிமையான கடன் திட்டத்தை வழங்கும் பொருட்டு இந்த இணைவை ஏத்தர் மேற்கொண்டது. தற்போது ஏத்தர் நிறுவனம் இந்தியாவின் 35க்கும் மேற்பட்ட நகரங்களில் விற்பனையகத்தை செயல்படுத்தி வருகின்றது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

இதுதவிர, நாடு முழுவதும் 43 எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை தொடங்கியிருக்கின்றது. இதுமாதிரியான நடவடிக்கையால் மக்களின் நம்பிக்கையான நிறுவனமாக ஏத்தர் எனெர்ஜி மாற தொடங்கியிருக்கின்றது. தொடர்ந்து, ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது.

ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விற்பனையில் எங்கேயோ போயிருச்சு!

450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அப்டேட் வெர்ஷனையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இணையத்தில் கசந்திருக்கும் தகவலின் வாயிலாக, இந்த அப்டேட் செய்யப்பட்ட வாகனங்களில் 2.6 kWh பேட்டரி பேக்கிற்கு பதிலாக 3.6 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ முதல் 116 கிமீ வரையில் ரேஞ்ஜை வழங்கும். இத்தகைய சூப்பரான அப்டேட்டை பெற்ற ஏத்தர் தயாரிப்புகள் வெகுவிரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

Most Read Articles
English summary
Ather energy electric scooters gets 9x growth in june 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X