தமிழகத்தில் கோடி கோடியாக முதலீடு செய்த ஏத்தர்... ஓசூரில் ஆலை துவக்கம்...

ஏத்தர் நிறுவனம் ஓசூரில் புதிய தொழிற்சாலையைத் துவங்கியுள்ளது. இந்நிறுவனம் பெங்களூருவில் நடத்தி வந்த தனது ஆலையை தற்போது ஒசூருக்கு மாற்றியுள்ளது. இனி தமிழகத்திலேயே தான் ஏத்தர் நிறுவனத்தின் வாகனங்கள் தயார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. பலர் இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை அதிகம் வாங்கி வருகின்றனர். இந்நிறுவனம் ஏற்கனவே பெங்களூருவில் தனது ஆலையை நடத்தி வந்தது.

தமிழகத்தில் கோடி கோடியாக முதலீடு செய்த ஏத்தர்... ஓசூரில் ஆலை துவக்கம்...

இந்நிலையில் தனியாகப் பெரிய ஆலையைக் கட்டமைத்து தனது தயாரிப்பை அதிகப்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தின் ஓசூர் மாவட்டத்தைத் தேர்வு செய்துள்ளது. இங்கு சுமார் 3 லட்சம் சதுரடி பரப்பளவில் இந்த ஆலையைக் கட்டியுள்ளது. இந்த ஆலையிலிருந்து ஆண்டிற்கு 4.2 லட்சம் வாகனங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

ஓசூரில் இந்நிறுவனம் அமைத்துள்ள ஆலையில் மொத்தம் 2 யூனிட்கள் செயல்படவுள்ளன. ஒரு யூனிட் முற்றிலுமாக பேட்டரி தயாரிப்பிற்காகவும், மற்றொரு யூனிட் முழுமையாக வாகன கட்டுமான பணிக்காகவும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் பேட்டரி யூனிட்டில் மொத்தம் 5 அசெம்பிளி லைன்களும், வாகன தயாரிப்பு யூனிட்டில் 2 அசெம்பிளி லைன்களும் செயல்பட்டுள்ளது.

ஏத்தர் நிறுவனம் இந்த ஆலையை மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கட்டமைக்கத்துள்ளது. அதாவது இந்த ஆலைக்குத் தேவையான மூலப்பொருட்கள் அனைத்தையும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களிடமிருந்தே வாங்க முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த ஆலையின் வாயிலாகப் பல சிறிய நிறுவனங்களும் பயன்பெறவுள்ளது.

ஏத்தர் நிறுவனத்தின் இந்த புதிய ஆலையில் டெஸ்டிங், சிமுலேசன், புரோசஸ் மற்றும் ஃபீல்டு ஆகிய டேட்டக்களை ஒருங்கிணைக்கும் 4.0 தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆலையில் டெஸ்டிங்கின் நேரம் 10 மடங்கும், வேலை நேரம் 4 மடங்கும் குறையும் என்றும், கூறியுள்ளது. தற்போது ஏத்தர் நிறுவனம் தனது ஸ்கூட்டரை தயாரிக்க ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் 1500 டெஸ்ட் செய்யப்படுகிறது.

மேலும் இந்த ஆலையிலிருந்து எந்த வித மாசுவும் வீணாகாது. அதே நேரம் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாது. பயன்படுத்தப்பட்ட நீரையே சுத்திகரித்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆலை உள்ளேயே தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் மறு சுழற்சி இயந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி ஏத்தர்நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏத்தர் நிறுவனம் தற்போது 450 மற்றும் 450எக்ஸ் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மார்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இனி ஏத்தர் நிறுவனம் புதிதாகப் பல ஸ்கூட்டர்களை மார்கெட்டிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம் . ஏத்தர் நிறுவனம் வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் 100 நகரங்களில் 150 அனுபவ மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் ஏத்தர் நிறுவனம் தனது சார்ஜிங் கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பணியையும் தீவிரமாகச் செய்து வருகிறது. ஏற்கனவே நாடு முழவதும் 500 ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை உருவாக்கி விட்டது. விரைவில் இதன் எண்ணிக்கையும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே தமிழகத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையும் செயல்பட்டு வரும் நிலையல் தற்போது ஏத்தர் ஓசூரில் தனது ஆலையைத் திறந்துள்ளது தமிழகத்திற்குக் கிடைத்த மற்றொரு மகுடமாக மாறியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஏத்தர் #ather
English summary
Ather energy plans a second manufacturing facility in Hosur
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X