போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 450எக்ஸ் ஸ்கூட்டரின் நீண்ட ரேஞ்ச் வெர்சனின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் ஒன்றாக சொல்லலாம். ஆனால் ஏத்தரின் தயாரிப்புகள் தற்போதைக்கு செயல்படுதிறன் மிக்கவைகளாகவே உள்ளன. அதாவது அதி வேகத்தையும், மிக சிறந்த செயல்திறனை விரும்புபவர்களுக்கு ஏற்றவைகளாக ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விளங்குகின்றன.

போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

இதனாலேயே ஏத்தர் இ-ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் ஆனது 85கிமீ என்ற அளவிலேயே உள்ளது. இது போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவு ஆகும். ஏத்தர் பிராண்டில் இருந்து தற்சமயம் 450 ப்ளஸ் மற்றும் 450எக்ஸ் என்ற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள் குறித்த அறிக்கையினை கீழே காணலாம்.

போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

இந்த ஆவண படத்தின் மூலமாக ஏத்தர் விரைவில் அதன் 450எக்ஸ் மாடலில் இரு புதிய வேரியண்ட்களை இணைக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 2.9 kWh (450X) மற்றும் 2.4 kWh (450+) பேட்டரி தொகுப்புகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் புதிய வேரியண்ட்களில் இதனை காட்டிலும் அளவில் பெரிய 3.66 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட உள்ளதாக இந்த ஆவண படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

மேலும், புதிய பேட்டரியின் எடை 19 கிலோவாக இருக்கும் எனவும், இது நிக்கல் கோபால்ட்-ஐ (லித்தியம்-இரும்பு) சார்ந்ததாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் விட முக்கியமாக, ரேஞ்ச் பகுதியில் 146கிமீ என உள்ளது. இந்த ரேஞ்ச் உண்மையில் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தலைவலியை கொடுக்க ஆரம்பித்திருக்கும். இது சோதனைகளின் மூலம் பெறப்படும் ரேஞ்ச் தானே தவிர்த்து, நிஜ உலக ரேஞ்ச் இதனை காட்டிலும் குறைவாக 120- 125கிமீ என்ற அளவிலேயே கிடைக்கும்.

போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

ஏற்கனவே கூறியதுபோல் 450எக்ஸ் மாடலில் இரு வேரியண்ட்கள் புதியதாக கொண்டுவரப்பட உள்ளன. இதில் ஒன்றில் 146கிமீ ரேஞ்ச் கிடைக்க, மற்றொன்றில் 108கிமீ ரேஞ்ச் மட்டுமே கிடைக்கும் என இந்த காப்புரிமை ஆவண படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் இந்த வேரியண்ட்டிலும் அதே 3.66 kWh பேட்டரி தொகுப்புதான் பொருத்தப்பட உள்ளது. சில மென்பொருள்கள் மூலமாக இந்த வேரியண்ட் கூடுதல் செயல்படுதிறனை வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட உள்ளதாம்.

போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

அதேபோல் இந்த புதிய வேரியண்ட்களில் ஈக்கோ, வ்ராப், ஸ்போர்ட், ஸ்மார்ட் ஈக்கோ மற்றும் ரைட் என சில ரைடிங் மோட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட் ஈக்கோ மோட் ஆனது சமீபத்தில்தான் தற்போதைய 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் ஈக்கோ மோட் ஆனது ஸ்போர்ட் & ஈக்கோ மோடிற்கு இடைப்பட்ட செயல்படுதிறனை வழங்கக்கூடியதாக உள்ளது.

போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

இவை தவிர்த்து இந்த புதிய ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தோற்றத்தில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதா என்பதும், இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் எந்த அளவில் இருக்கும் என்பதும் தற்போதைக்கு தெரியவரவில்லை. ஆனால் குறைந்தப்பட்சம், தற்போதைய 450எக்ஸ் ஸ்கூட்டர்களில் இருந்து வேறுப்படுத்தி காட்டும் விதமாக பெயிண்ட் தேர்வுகளாவது புதியவைகளாக அறிமுகப்படுத்தப்படலாம்.

போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

தற்போதைய 450 ப்ளஸ் மற்றும் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 450 ப்ளஸ் மாடலில் 5.4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 22 என்எம் டார்க் திறன் வரையில் ஸ்கூட்டருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இதில் 2.9kWh ஆற்றல் கொண்ட பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டாலும், இதில் 2.23kWh-ஐ மட்டும் ஓட்டுனரால் பயன்படுத்த முடியும்.

போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

ரைடு மோடில் 60கிமீ மற்றும் ஈக்கோ மோடில் 70கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ள 450 ப்ளஸ் வேரியண்ட் 0-வில் இருந்து 40kmph வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டக்கூடியதாக உள்ளது. மறுப்பக்கம், 450 எக்ஸ் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 26 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 6 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இது 40kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 3.3 வினாடிகளிலேயே எட்டிவிடுகிறது.

போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!

ரேஞ்ச் அளவை பொறுத்தவரையில், ரைடு மோடில் 70கிமீ மற்றும் ஈக்கோ மோடில் 85கிமீ ஆகும். அதாவது இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக இவ்வளவு தொலைவிற்கு பயணிக்கலாம். இதிலிலும் 2.9kWh பேட்டரி தொகுப்பே பொருத்தப்படுகிறது என்றாலும், இதில் 2.6kWh வரையிலான ஆற்றலை பயன்படுத்தி கொள்ள முடியும். அத்துடன் வ்ராப் மோட் போன்ற சில கூடுதல் வசதிகளையும் 450 எக்ஸ் வேரியண்ட் பெறுகிறது.

Most Read Articles

English summary
Ather launching long range scooter soon
Story first published: Wednesday, June 29, 2022, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X