அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்! ஓலா நிறுவனத்திற்கு செக் வைக்கும் ஏத்தர்! யாரும் எதிர்பாக்காத ட்விஸ்ட்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. பெட்ரோல் வாகனங்களை விட, எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு மிகவும் குறைவாகவே செலவாகும். எனவே வாடிக்கையாளர்கள் பலரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மீது தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையை பொறுத்தவரையில், ஏத்தர் (Ather) நிறுவனம் மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆனால் ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகவும் பிரீமியமான மாடலாக உள்ளன. எனவே அவற்றின் விலையும் மிகவும் அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் ஏத்தர் நிறுவனம் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அவை ஏத்தர் 450 ப்ளஸ் (Ather 450 Plus) மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் (Ather 450 X) ஆகும்.

அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்! ஓலா நிறுவனத்திற்கு செக் வைக்கும் ஏத்தர்! யாரும் எதிர்பாக்காத ட்விஸ்ட்!

இதில், ஏத்தர் 450 ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.34 லட்ச ரூபாய் ஆகும். மறுபக்கம் ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.55 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மிகவும் விலை உயர்ந்த தயாரிப்புகளாக உள்ளதால், அனைவராலும் இவற்றை வாங்க முடியாது. எனவே ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் பாணியை கையில் எடுத்த ஏத்தர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முதலில் ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும்தான் விற்பனை செய்து வந்தது. இதில், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.40 லட்ச ரூபாய் ஆகும். இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான். இவற்றின் விலையும் மிகவும் அதிகம் என்பதால், விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) என்ற பெயரில், இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை வெறும் 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதே பாணியில் ஏத்தர் நிறுவனம் மிகவும் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏத்தர் நிறுவனம் வரும் ஜனவரி 7ம் தேதி நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. இது ஏத்தர் நிறுவனத்தின் 'கம்யூனிட்டி டே' ஆகும். இந்த நிகழ்ச்சியில்தான் ஏத்தர் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்யவில்லை. எனவே இந்த நிகழ்ச்சியில் 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் நிறுவனம் களமிறக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன், நேரடியாக மோதுவதற்கு ஏத்தர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் தற்போது வெளிவந்துள்ள இந்த தகவல், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், இதுதான் ஏத்தர் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். அத்துடன் 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட ஏத்தர் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையையும் இது பெறும். இதன் காரணமாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. ஒருவேளை ஏத்தர் நிறுவனம் மிகவும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கினால், இந்த பொங்கல் பண்டிகையின் உற்சாகம் கூடும்.

ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் ஆகியவை தவிர இந்தியாவில் இன்னும் பல்வேறு நிறுவனங்களும் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வரும் காலங்களில் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் புதிய எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தற்போது மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles
English summary
Ather may launch most affordable electric scooter on january 7
Story first published: Thursday, December 29, 2022, 20:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X