பஜாஜுக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க... இப்படி ஒரு நிலைமை பஜாஜுக்கு ஏற்படும்னு யாருமே எதிர்பார்க்கல!

பஜாஜுக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க என கூறும் அளவிற்கு மிக மோசமான விற்பனை சரிவைக் கடந்த 2022 நவம்பரில் சந்தித்திருக்கின்றது. 2021 நவம்பர் மற்றும் 2022 நவம்பர் உடன் ஒப்பிட்டு வழங்கப்பட்டிருக்கும் விற்பனை புள்ளி விபரத்தை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வங்க.

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் பஜாஜ்-ம் ஒன்று. "இந்த நிறுவனத்திற்கு யாரோ செய்வினை செஞ்சிட்டாங்க" என கூறும் அளவிற்கு மிகக் கடுமையான விற்பனைச் சரிவை பஜாஜ் நிறுவனம் கடந்த 2022 நவம்பரில் சந்தித்திருக்கின்றது. நிறுவனத்தின் கை வசம் கவர்ச்சிகரமான பல்சர், உயர் திறனை வெளியேற்றக் கூடிய டோமினார் மற்றும் மலிவு விலை பிளாட்டினா உள்ளிட்ட பைக் மாடல்கள் இருக்கின்ற போதிலும் நிறுவனம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

பஜாஜ்

உள்நாட்டு விற்பனை மற்றும் வெளி நாடுகளுக்கான ஏற்றுமதி என அனைத்திலும் நிறுவனம் வீழ்ச்சியையேச் சந்தித்து உள்ளது. 2021 நவம்பர் மாதத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சேல்ஸ் எண்ணிக்கை 3,79,276 யூனிட்டுகளாக இருந்தது. ஆனால், நடந்து முடிந்த 2022 நவம்பரிலோ அது 3,06,552 யூனிட்டுகளாகச் சரிந்திருக்கின்றது. இது ஈடுகட்ட முடியாத விற்பனை வீழ்ச்சியாகும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் இது 19 சதவீத விற்பனைச் சரிவாகும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததே நிறுவனத்தின் மாபெரும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. 2021 நவம்பரில் பஜாஜ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2,20,521 யூனிட்டுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. ஆனால், 2022 நவம்பரிலோ நிறுவனம் ஒட்டுமொத்தமாகவே 1,53,836 யூனிட்டுகளை மட்டுமே ஏற்றுமதி செய்திருக்கின்றது. இந்த மாபெரும் வீழ்ச்சியே நிறுவனத்தின் தற்போது கவலைக்குக் காரணமாக மாறியிருக்கின்றது. சதவீதத்தின்கீழ் கூற வேண்டும் என்றால் 30 சதவீதம் விற்பனை வீழ்ச்சியாகும்.

ஏற்றுமதியில் மட்டும் இல்லைங்க உள்நாட்டு விற்பனையிலும் நிறுவனம் கணிசமாக சரிவைச் சந்தித்துள்ளது. 2021 நவம்பரில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,58,755 யூனிட் வாகனங்களை இந்தியாவில் விற்பனைச் செய்திருந்தது. இதே நிறுவனத்தின் தயாரிப்புகள் 2022 நவம்பரில் 1,52,716 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இது நான்கு சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். இவ்வாறு அனைத்து நிலைகளிலும் நிறுவனம் சரிவையேச் சந்தித்து உள்ளது.

மேலே பார்த்தது இந்தியாவில் விற்பனையாகிய பஜாஜ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்களின் புள்ளி விபரங்கள் ஆகும். அதாவது, நிறுவனத்தின் வர்த்தக மற்றும் இருசக்கர வாகனங்களின் புள்ளி விபரங்கள் ஆகும். நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மட்டும் 2022 நவம்பரில் 1,23,490 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதேபோல், 1,38,63 யூனிட்டுகள் சென்ற மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இது 2021 நவம்பரைக் காட்டிலும் 23 சதவீதம் குறைவாகும்.

இத்தகைய கடுமையான விற்பனை வீழ்ச்சியிலேயே பஜாஜ் தற்போது சிக்கியிருக்கின்றது. இதன் காரணமாக பஜாஜ் நிறுவனம் கடும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றது. இந்த விற்பனை வீழ்ச்சிக்கான உறுதியான காரணங்கள் தெரியவில்லை. சமீப சில காலமாக முன்னணி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணியில் இருந்து வெளியேற்றி வருகின்றது. இதன் விளைவாக விற்பனைக் குறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அதுமட்டுமில்லைங்க, சந்தையில் தற்போது போட்டி கடுமையாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதுவும் நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சிக்கு ஓர் காரணமே ஆகும்.

பஜாஜ் நிறுவனத்தின் இருசக்கர வாகன பிரிவு விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்ற அதேவேலையில் வர்த்தக வாகன பிரிவு லேசாக வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால், இந்த பிரிவிலும் ஏற்றுமதி கடுமையான சரிவைச் சந்தித்திருக்கின்றது. உள்நாட்டில் அதிக எண்ணிக்கையில் வர்த்தக வாகனங்கள் விற்பனையாகி இருப்பதால் இந்த பிரிவு சரிவைச் சந்தித்த பிரிவு என்ற பெயரில் இருந்து தப்பித்துள்ளது. 2022 நவம்பரில் ஒட்டுமொத்தமாக 29,226 யூனிட் பஜாஜ் வணிக வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது 2021 நவம்பரைக் காட்டிலும் 112 சதவீதம் அதிக விற்பனையாகும்.

அதேநேரத்தில் வெளிநாடுகளுக்காக 15,206 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இது கடந்த 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் 44 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டில் 27,001 யூனிட்டுகளையே நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. இந்த பிரிவில் நிறுவனம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும் ஒட்டுமொத்த வணிக வாகன விற்பனையில் 9 சதவீதம் வளர்ச்சியைக் கண்டிருக்கின்றது. இதற்கு உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை உயர்ந்திருப்பதே காரணம் ஆகும். 2021 நவம்பர் மாதத்தின் ஒட்டுமொத்த விற்பனை 40,803 ஆகும். இதுவே 2022 நவம்பரில் 44,432 ஆக இருக்கின்றது.

Most Read Articles
English summary
Bajaj 2022 november sales down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X