இந்த புதிய பல்சரை எல்லாராலும் வாங்க முடியும்... ரொம்ப ரொம்ப கம்மி விலை, அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம்!

பஜாஜ் நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல்சர் பி150 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பஜாஜ் நிறுவனம் இந்திய இருசக்கர வாகன உலகை அலங்கரிக்கும் விதமாக அதன் புத்தம் புதிய தயாரிப்பான பல்சர் பி150 பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகமாக இந்த பைக்கிற்கு ரூ. 1.16 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்சர்

இது ஆரம்ப நிலை வேரியண்டான சிங்கிள் டிஸ்க் பிரேக் வசதிக் கொண்ட தேர்வின் விலை ஆகும். இதன் உயர்நிலை தேர்வு ரூ. 1.19 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கும். இதில் டூயல் சேனல் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கும். இந்த இரு தேர்வுகளிலேயே புதிய பல்சர் பி150 விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், மேலே கண்ட அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

நிறுவனம் தனது புகழ்மிக்க இருசக்கர வாகன மாடல்களான என்250, எஃப்250 மற்றும் என்160 ஆகியவற்றை தயாரிக்கும் அதே பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே இப்புதிய பல்ச் பி150 பைக்கையும் தயாரித்திருக்கின்றது. தற்போது ஆரம்ப கட்டமாக கொல்கத்தாவில் மட்டுமே புதிய பல்சர் பி150 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ்

அடுத்த சில வாரங்களில் இந்தியாவின் பிற நகரங்களிலும் இந்த பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் புதிய பல்சரை விற்பனைக்கு வழங்கவும் பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

ரேசிங் ரெட், கரீபியன் ப்ளூ, எபோனி பிளாக் ரெட், எபோனி பிளாக் ப்ளூ மற்றும் எபோனி பிளாக் ஒயிட் ஆகியவையே அந்த நிற தேர்வுகளாகும். இதைத்தொடர்ந்து, சிங்கிள் சேனல் டிஸ்க் பிரேக் மற்றும் இரட்டை சேனல் டிஸ்க் பிரேக் இந்த இரு தேர்வுகளையும் தனித்துவமானதாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக இரண்டிலும் மாறுபட்ட அம்சங்களை பஜாஜ் வழங்கியிருக்கின்றது. மிக முக்கியமான இரண்டிலும் வெவ்வேறு விதமான இருக்கை அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

பஜாஜ்

சிங்கிள் டிஸ்க் வேரியண்டில் ஒற்றை துண்டு இருக்கை செட்-அப்பும், இரட்டை டிஸ்க் வேரியண்டில் ஸ்பிளிட்-டைப் இருக்கையும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் இந்த பைக்கை தனது பிற பல்சர் மாடல்களைப் போலவே ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்டதாக பஜாஜ் வடிவமைத்திருக்கின்றது. ஆனால், இதிலேயே ஒற்றை டிஸ்க் பிரேக் கொண்ட தேர்வைக் காட்டிலும் இரட்டை டிஸ்க் பிரேக் கொண்ட பல்சர் பி150 அதிக ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஷார்ப்பான முன் பக்கம், கட்டுமஸ்தான ஃப்யூவல் டேங்க், கவர்ச்சியான பின் பகுதி மற்றும் சூப்பரான அலாய் வீல்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து அம்சங்களும் பிற பல்சர் பைக்குகளில் இருந்து மாறுபட்டவையாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, எக்சாஸ்ட் எனும் ஓர் அம்சமே இல்லாத வாகனத்தை போல் இதனை பஜாஜ் வடிவமைத்திருக்கின்றது.

ஆனால், எக்சாஸ்ட் பைக்கின் அடிப்பகுதியில் மிக சிறிய தோற்றத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது பைக்கிற்கு இன்னும் புதுமையான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. பைக்கின் இயக்கத்தை சிறப்பானதாக மாற்றும் விதமாக நிறுவனம் இந்த பைக்கில் 149.68 சிசி திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரை பஜாஜ் வழங்கியிருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 14.5 பிஎஸ் பவரையும், 13.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் என்விஎச் லெவலை நிறுவனம் அப்டேட் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன், இன்ஃபினிட்டி திரை, யுஎஸ்பி சாக்கெட், எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் போன்ற பல்வேறு நவீன கால அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Bajaj launched pulsar p150
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X